துயரங்கள் துரத்தி வர
துவண்டு அழுகிறது எம் சகோதரம்
மதங்கள் என்ற பெயரால்
மாய வித்தைகள் காட்டி
மனித குலத்தின் உயிர்களை
குடிக்கும் பிசாசுகள்
பர்மா தேசத்தில் பட்டினியின்
பிடியில் சாவின் வழிம்பில்
மரணத்தின் அகோர தாண்டவத்தில்
வாடுகிறது எம் சொந்தங்கள்.
சகலதையும் இழந்து
நடுக்கடலில் சரணகதி அடைந்திருக்கு
எம் சகோதரத்தவர்கள்.
வாழ்க்கை பற்றி சிந்திக்காத
எம் உறவுகள்..ஒரு கனமாவது சிந்தியுங்கள்
உலகத்தில் செய்யாத
குற்றத்தையா செய்தார்கள் இல்லை
அவர்களும் ஒரு மனிதர்கள்தார்கள்
காவியுடை தரித்த கயவஞ்சகர்கள்
பாலுக்கு அழும் பிஞ்சுகளை.
துடிக்க துடிக்க கொலை வெறி
கொண்ட பாதகர்கள் தூக்கி வீசினார்கள்.
உடமைகளை தலையிலும்
தோளிலும் சுமந்தவண்ணம்
உயிரை கையில் பிடித்த வண்ணம்
கூடுவிட்டு கூடுபாயும் குருவிபோல

தேசம் கடந்து நடுக்கடலில்
தத்தளிக்குது எம் உறவுகள்
மதம் என்பதற்கு அப்பால்
மனிதா மனிதம் மடிந்து விட்டதா.
பர்மாவில் கேட்கும் கதறல்
சப்தம் கேட்கவில்லையா
சர்வதேச சமுகமே.உன்
கண்ணுக்கு தெரியவில்லையா.
அன்பார்ந்த எம்உறவுளே.
மதம் இனம் சாதி என்ற
இறுமாப்பு கொள்ளாமல்
மனித நேயம் என்ற ஆயுதத்தை
கையில் எடுத்து அணிதிரல்வோம்..
அவர்கள் வாழ்விலும் விடியல் புலரட்டும்
மிஞ்சுகிற சின்ன பிஞ்சுகள்லாவது
நாளை விடியும் உலகை பார்க்கட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த கவிதை மேகம்NEWS.COM தளத்தில் வெளியான கவிதை....





