புதன், 27 ஆகஸ்ட், 2014

அன்பே உனக்காக ஒரு மடல்



ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து
ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி.
ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில்

ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய்

காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது.
உன் மெல்லிய கூந்தலை  தடவிட
என் மெய்யோடு நீ சாய்ந்தாய்

மேகமது குடை பிடிக்க

உன் மெல்லிய மூச்சுக் காற்று
எனக்கு சுவாசம் தந்தது.

என்னை விட்டுப்பிரிந்த போது
வாழ்க்கை நிர்க்கதியாகியது

இலையுதிர் காலம் போல.
வாழ்க்கை உதிர்கிறது.
நேற்றைய காற்றை.
உனக்கு தூது விடுகிறேன்
இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய்


இளவேனிக்காலம் போல்
என் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக
இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து 
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

புதன், 20 ஆகஸ்ட், 2014

வடிந்து உருகும் தாயுள்ளம்




கட்டில்சு
கம் கண்டு 
கணவருடன் நெடுநாட்கள் இருந்து
இருளறை என்ற கருவறையில்
உன்னை பல காலம் சுமந்தேன்.

வாழ்க்கைப் போராட்டம்
என்னை வாழ வழி விட வில்லை
யுகங்கள் காலங்கள் கடந்து போக
உலக வாழ்க்கை வெறுக்கிறது.

பிள்ளைப்பாசம் என்னை கட்டித்தழுவ
கண்களில் கண்ணீர் அருவிபாய
ஒற்றி எடுக்கும் பிஞ்சுள்ளம்
ஏங்கி தவிக்கும் விழிப்பார்வை.

உன்னை துவசம் செய்த
என் அப்பன் எங்கே
ஒருசான் வயிற்றுக்கு ஒரு நாள்
உழைத்து காசு தரதாஅப்பன் எங்கே தாயே

 
கிழிந்த சேலையுடன் கசங்கிய முடியுடன்
உன்னை இந்த கோலத்தில் காணும் போது
என் உதிர நாளங்கள் முறுக்கேற
கண்ணீர் சிந்திய விழிகள் நடுங்க
என்னை கட்டி அணைக்கும்
தாயுள்ளம் கண்டு மகிழ்கிறேன் தாயே.

உன்னைப் போன்று கணவனின் கொடுமையால்
துன்பம் என்ற சமுத்திரத்தை தாங்கிய படி
வாழும் பெண்கள் எத்தனை
அவர்கள் வாழ்விலும்விடியல் பிறக்கட்டு
எதிர்காலத்தில் வசந்தங்கள் வீசட்டும் தாயே
அமைதி வாழ்க்கை மலரட்டும்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???




நேற்று,....
அன்னியவன் கையில் பாரத தேசம்
இருந்த போது, நம்க்கள்
அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விலை மாடுகள் போல நாடுகடத்தப்பட்டார்கள்.
எல்லாத்துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி
தினம் தினம் கண்ணீர்வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள்.
எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.?
சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்
 

 சுதந்திரவேள்வித்தீயில்,
                                               ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில்
குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில்
பிறந்தது பாரதக் கொடி,
அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..
 
இன்று…….
அரும்பாடுபட்டுப்பெற்றசுதந்திரம்எங்கே?
அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும்
இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை
என்ற சொற்றொடர் தாங்கியபடி
தினம் தினம் செய்திகள்..
பெற்ற சுதந்திரம் எங்கே பெற்றசுதந்திரம்எங்கே?
 மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை,
மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள்
சுதந்திர நாளில் செங்கோட்டையில் 
சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற,
உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது
எங்கே சுதந்திரம் புதைந்தது?
 
 
நாளை……
 
பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும்
பாரத மாந்தர்கள் மகிழட்டும்
நெஞ்சினில் இனிப்பு திகடட்டும்
சத்திய தர்மம் நிலைக்கட்டும்
சமாதானம் நிலவட்டும்!
பாரததேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்..
சுதந்திரதேசத்துக்காய் 
இன்னுரை ஈகம் செய்தோர்க்கும்
வீர வணக்கம்!!!
இந்தக்கவிதை பாரத தேசத்தின் விடுதலை நாளை முன்னிட்டு
இந்த மின்இதழ்ழுக்கு எழுதுதியது பார்வையிட முகவரி இதோ சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

 

புதன், 13 ஆகஸ்ட், 2014

இதயத்தை திருடியது நீதானே.....

 
 
உன் கருமேக கூந்தலில் நான் மயங்கி
நாழிகை இழந்த பொழுதாக
நான் உன்நினைவில்
நீரில் மூழ்கியமர்ந்திருக்கும் செங்கமலம்
நீரில் மெல்லிய இடையை
அசைத்து நடனமிடுவது போல.
நான் அலைபாய்கிறேன்
உன் நினைவில்...


உன் கற்பனையை 
கவியாக பாட்டெழுத
நாள் முழுதும்
தனியாக நானிருந்தேன்
வில்லழகு நெற்றியிலே
திலகமிட்ட மங்கையவள்
பூப்போட்ட உன்கரம்
பூபாளம் பாடுதடி


கருமேக இருளிலே
உன்பல்லழகின் வெண்மையை
பளிச்சிடவைத்தடி
மின்சாரம் இல்லைஎன்று
மின் குமிழ் அணைந்தது
உன் கயல் விழிக்கண்ணழகே.
எனக்கு இரவில்
மின்சார ஒளி தந்ததடி


கீறீட்ட மையழகு
உன்னுதட்டை முத்தமிட
பட்டழகு  உன்
மெய்யழகை போர்த்திட
வட்டமிட்ட உன் வதனம்
சித்திரை நிலவுபோல்
சிங்காரம் செய்யுதடி.
சிந்தையில் உன் நினைவு
சிலுங்காரம் செய்யுதடி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


 

 


வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கண்ணீர் அஞ்சலி


தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
 



போட்டியின் நெறிமுறைகள்
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு   மிகாமல் எழுத வேண்டும்.
2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24  அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும்      கவிதைக்கு     50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்
  மதிப்பெண்களைக் கூட்டி  வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5. கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் 
   பட்டிருக்கவேண்டும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8. கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய 
  குறிப்புகளைத்  தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :        
       ramask614@gmail.com  

   நடுவர்கள்  

 பெயர்  நாடு  வலைப்பூ முகவரி
 கவிஞர் கி.பாரதிதாசன்
 பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com 
 கவிஞர் .இரமணி
 இந்தியா
 http://yaathoramani.blogspot.com
 டொக்டர்.திருமிகு.முருகானந்தன்
 இலங்கை  http://muruganandanclics.wordpress.com/
 நிருவாகக்குழு

பெயர்நாடு

வலைப்பூ முகவரி

திரு.பொ.தனபாலன்

இந்தியா

http://dindiguldhanabalan.blogspot.com

திரு.இராஜ முகுந்தன்

கனடா

http://valvaiyooraan.blogspot.com/
திரு அ.பாண்டியன்

இந்தியா

http://pandianpandi.blogspot.com/
திரு.கா.யாழ்பாவாணன்

இலங்கை

http://eluththugal.blogspot.com/

திரு.த.ரூபன்

மலேசியா

http://2008rupan.wordpress.com/
http://tamilkkavitaikalcom.blogspot.com/



பரிசுகள்
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்ல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

 தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-


rupanvani@yahoo.com&dindiguldhanabalan@yahoo.com



 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-