புதன், 29 ஏப்ரல், 2015

ஈழம்...

ஈழம் என்ற வார்த்தை
சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது
பாடல் பாடிய புலவரின் பெயரும்
ஈழத்து பூதந் தேவனார்
அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு
ஈழம் என்ற நாமம் வந்தது.
ஒரு தேசத்தின் யுத்தம்
முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம்

 
வடக்கு –கிழக்கு எங்கள் தாயம்
வாழ்வோம் அதில் மட்டுமே
என்ற எண்ண குமுறல்கள்
ஈழத்து தந்தை செல்வா தொடக்கம்
ஒவ்வொரு தமிழனின் காதிலும்
எழுச்சி குரலாக எழுந்தது
அந்த எழுச்சியின் வளர்ச்சிதான்
தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது.

 
உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம்
எப்போது ஈழம்  என்ற சொல்லாலே
ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கு
முகவரியை கொடுக்கிறது.
சேர சோழ பாண்டியன் ஆண்ட பரம்பரை போல
தமிழனால் ஆண்ட இராச்சியம்
ஈழக்கனவுகள் பல தேசங்களில் திசை திரும்பி
சர்வதேசம் எங்கும் ஈழத்தின் எழுச்சிக்குரல்
ஆர்ப்பரிக்கும் கடலலைபோல் பொங்கி எழுகிறது….

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 23 ஏப்ரல், 2015

உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015



 
ரூபன்யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்வாருங்கள்வாருங்கள்
 கவிதை எழுத வேண்டிய தலைப்பு-
இணையத் தமிழே இனி...

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்

 

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)


2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்

3போட்டிக்கான கவிதையை  தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.இறுதி நாள்-15-05-2015
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல்  தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்
9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்
  கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம்
10.போட்டிக்கான கவிதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  ramask614@gmail.com  
நடுவர்கள்
1.திரு கவிஞர்-ரமணி ஐயா                   -இந்தியா
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா   -இலங்கை
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்-          இந்தியா
நிருவாகக்குழு
1.திரு.கில்லர்ஜி-                                      அபுதாபி
2.திரு.பாண்டியன்-                                   இந்தியா
3.திரு.இராஜமுகுந்தன்-                          கனடா
4.திருமதி-.இனியா-                               கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்-                      இலங்கை
6.திரு..ஜீவராஜ்-                                         இலங்கை
7.திரு.கவியாழி.கண்ணதாசன்-             இந்தியா
6.திரு..ரூபன்-                                             மலேசியா.
7. கல்குடா றியாஸ் முஹமட் -               கட்டார்
 
முதல் பரிசு,
பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு,
பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு
பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும்  அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர்
சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- rupanvani@yahoo.com
 குறிப்பு-
2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.....இந்த மின்னஞ்ல் வழி .
rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 
 
 
 

 

புதன், 22 ஏப்ரல், 2015

நிலவே நீ முகம் காட்டு...


நிலவே ஒரு நாள் முகம் காட்டு
உன் முகவரி எனக்கு தெரியட்டும்
தவழ்ந்து தவழ்ந்து நீந்துகிறேன்.
நினைவு உள்ளே வரும் வரை
தவமாய் இருந்து துாங்குகிறேன்
தாவித்தாவி பிடிக்கிறேன்
தள்ளித்தள்ளி போகிறாய்
தவமும் கலைந்து போகுதடி
தாவி அணைக்க துடிக்கிறேன்.


இருட்டறை கொண்ட மாளிகையில்
இருளும் சூழ இருக்கின்றாய்
ஒற்றப்பார்வை பார்க்கிறாய்
ஓரக்கண்ணாய் தெரியுதடி.
ஓடி ஓடி வருகிறேன்
உள்ளம் அணைத்து. பிடிப்பதற்கு.
கையும் ஒன்றை ஊன்றுகிறாய்
கருணையுள்ளம் தெரியுதடி.


சிவந்த சேலை உடுத்துக்கிட்டு
சிவத்த சூரியன் வருகையில்
மேனியும் அக்கினி நிறத்தில் தெரியுதடி.
வருவேன் வருவேன் இருந்திடுவாய்
காலம் விரைவில் பதில் சொல்ல
கனப் பொழுதில் வந்திடுவேன்.
சொந்தம் நட்பும் பலம் கொள்ள
இணைவோம் வாழ்வில் ஒன்றாக.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

குறிப்பு-சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடைபெற உள்ள போட்டியின் விதிமுறைகள் அடங்கிய பதிவு நாளை வலம் வரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.
 

 
 

திங்கள், 13 ஏப்ரல், 2015

உலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி-2015





வணக்கம்
உறவுகளே...
 
மிகவிரைவில் காத்திருங்கள்............
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

புதன், 8 ஏப்ரல், 2015

மனதின் நெருடல்


மனதை கல்லாக்கி
பிறந்த தாயகத்தை மறந்து
கையில் அழகான சுமைப் பொதியுடன்
பன்நாடும் எல்லாம் கூடும் எந்நாட்டில்
முகவரால் ஏமாத்தப்பட்ட நிஜங்கள்எத்தனை
அந்த நிஜங்கள் வரிசையில் நாமும் ஒருவராக
எடுத்த விசா பொய்யா என்ற ஏக்கம்
உறவுகளை பிரிகிறோம் என்ற மன ஓட்டம்
 
 
அன்பான காதலியை பிரிகிறோம் என்ற
உள்ளார்ந்த மன ஏக்கம்
எல்லா நதிகளும் ஊற்றெடுத்து
நாலா பக்கமும் பாய்வது போல
மனதின் ஏக்கங்கள்  கல்லில் மோதும்
கடலலை போல பொங்கி எழுகிறது.
மனதை வாட்டி வதைத்தது ஏக்கத்தின் வலிகள்
எத்தனையோ ஆன்மாக்கள் விடை
தெரியாமல் தினம் தினம் வாழ்கிறார்கள்….
 
கடலும் தூரமும் எம்மை
பிரித்தாழ்கிறது என்றால்
உறவும் நட்பும் பிரிந்தழுகிறது…
அன்பும் பாசமும் காட்டி வளர்த்த
அன்பு தங்கையை பிரிகிறோம் என்ற வலி
பணத்தை தேடி செல்லும் ஒவ்வொரு
மனிதனின் வாழ்க்கையில்
ஒவ்வொரு வரலாறு உள்ளது.
அந்த வரலாறு  கண்ணீர்
எழுத்துக்களால் செதுக்கப்படுகிறது.
 
 


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-