திங்கள், 12 நவம்பர், 2018

கோலங்கள் மாறிய கலாசாரம்



கல்லில் அடிபட்ட மாங்கபோல
கசக்கி புளிந்த புளியம் பழம் போல
விதைகள் தெரிய சதைகள் கிழிய
நவ நாகரீகம் என்ற பெயரில்
அசிங்கமான உடை
குட்டப்பாவடை
நவீன யுவதிகள் பக்கம்
-------

பாட்டன் பூட்டன் கற்றுத் தந்த
கலாசாரத்தை மண்னோடு புதைத்து விட்டு
மனித நாகரீகம் என்ற போர்வையில்
மனிதம் மனிதத்தை மாசுபடுத்தி
வாழ்கிற வாழ்க்கையாக மாறிவிட்டது.இன்று
-------

அன்று ஒரு காலத்தில் பெண்ணால்
பெண்மையை போற்றி வாழ்ந்தாள்
இன்றைய நாகரீகம் என்ற போர்வையில்
அரை தெரிய உடையும்
ஆடை என்ற போர்வையில்
உடல் தெரிய அங்கவஸ்திரமும்
ஆடம்பர வாழ்க்கையாக மாறிவிட்டது.
--------
அப்பா அண்ணா சொந்தங்கள்
என்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு 
கவர்ச்சி உடையை அணிந்து.
ஆண் வர்க்கத்தின் மனநிலையை
பல திசைகளில் திசை திருப்பி
பெண்மையை சீரழித்ததும்
கலாசாரம் என்ற போர்வையில்
வலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.
--------
நிர்வாணம் என்பது அழகானது..
அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.
இதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.
நாகரீகம் என்ற போர்வையில்
வரும் அரை குறை ஆடைகள்தான்
பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது
-------
நவீன உடை என்ற போர்வையில்
கலாசாரத்தை சீரழிக்க பவனிவரும்
ஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு
தமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்
நம் பண்பாட்டையும் சொல்லும்
உடைகளை வாங்கி
நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி
அன்பான தமிழனாய் வாழ்வோம்.

-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்

புதன், 11 ஏப்ரல், 2018

ஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி

வணக்கம்
ஊற்று உறவுகளே.
இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

சித்திரை வருடப்பிறப்புடன்ஊற்று என்ற மாதாந்த இலக்கிய சஞ்சிகை வெளிவர இருக்கிறது உங்களின் ஆதரவுடன்.
அன்புடன்
ஊற்று நிருவாகம்
 
 

புதன், 14 பிப்ரவரி, 2018

ஞாபகங்கள்.


அகத்தில் மலர்ந்த றோஜாவே.
உன்னை அணைத்து எடுத்தேன் பல காலம்
புன்னகைப் பூவே புகுந்தது வாசம்
பூத்த  பூ புதுவசந்தம் வீசியது.

 மழைக்கால இருளில் மதி மயங்கும் போது.
ஒற்றை குடையுடன் ஓடி ஒதுங்கிய
ஆலமரமும் தெருவோர கடையும்
நமது ஞாபகத்தை சொல்லுமல்லவா.

வேப்பமரத்து பிள்ளையர் கோயிலில்
வேள்விகள் நடந்த போது.
என் நெற்றியில் நீ வைத்த சந்தனம்
இன்னும் பத்திரமாய் இருக்குதடி.

ஒற்றை பாலத்தில் நாம் நடந்த போது.
தாவித் தாவி என்னை இறுக பிடித்த நேரம்
காலம் கடந்த போதும்
கண்ணுக்குள் நிழலாடுகிறது..

எனக்காக நீ தந்த காதலர் தின
பரிசான கடிகாரம்.
செக்கன் முள்ளு செக்கனுக்கு செக்கன்
துடிக்கும் போது.

உன் நினைவுகள் நெஞ்சோடு மோதுகிறது.

-நன்றி-