வெள்ளி, 3 நவம்பர், 2017

அன்புள்ளவளே உனக்காக


என்னவளளே என்னவளளே எங்கு போகிறாய்
ஏங்கி தவிக்கிறேன் பல நாட்கள்
ஏழையாய் பிறந்ததனால்
எட்டிக் கூட பார்க்க மாட்டாயா.

பாசத்தின் இணைப்பால் என்
இதயமே சிறைப் பட்டு கிடக்கிறது
சிறைப்பட்ட இதயத்தை  புனிதப்படுத்த
எப்போது வருவாய்.
பல நாள் அன்புக்காய்
ஏங்கி தவிக்கும் உள்ளம் நான்

கடலில் கிடக்கும் மீன்கள் எல்லாம்
நீண்ட நாள் வாழ்வது கடினம்
எப்போது ஒரு நாள் 
மீனவனின் வலையில் சிக்குவது –போல
என்னவளளே நீ  ஒருநாள்
என் மனச்சிறையில்
சிக்குவாய் என்பதை நான் அறிவேன்

அகிலத்தில் காதலுக்கு மொழி கிடையாது
அகிலத்தின் புனித மொழியை
மெய்ப்பிக்கும் நாள் வரும்
அதுவரை உன் நினைவில்
என் நாள் கடக்கும்.

நன்றி
அன்புடன்
த.ரூபன்

வெள்ளி, 23 ஜூன், 2017

இழந்தது போது தமிழினமே!!

சுமைகள் சுமந்த வாழ்வுக்கு.!
சுகங்கள் தேடி தந்தார்கள்!
நம் மூத்தோர்கள்.!
பெற்ற சுதந்திரம்!
பெற்ற உரிமையும் மறுக்கப்பட்டு!
வீதியோரங்களிலும் நிழல் மரங்களிலும்!
நிம்மதி இழந்த வாழ்வாக!
வாழ்கிறான் தமிழர்கள்!

ஆயிரம் கட்சிகள் ஆயிரம் கொடிகளும்!
ஆரவாரம் செய்ய!
சாதியும் மதமும் இறுமாப்பு காட்டி!
ஏறுகிறான் சொற்ப சிம்மாசனம்!
ஐந்து வருடங்கள்!
ஈழத்திலும் வர்மாவிலும் தமிழனின்!
உயிர்கள் நயவஞ்சகர்களின் கையில் துடிக்க!
மலாய மண்ணில் தமிழன் உரிமை மறுக்கப்பட!
தமிழனின் எதிர்காலம்!
மரணக் குழியில் புதைந்து கிடக்கிறது!

அவலங்கள் கண்டு துடிக்காத!
தமிழ் தலைமைகள்!
இருந்தென்ன இலாபம்.!
தமிழ் மக்களே! பணத்துக்காக,!
அற்ப சுகத்துக்காக உங்களின்!
உரிமையை விலை பேசாதீர்கள்!
பொன்னான உரிமையை மண்ணாக்காமல்!
எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட!
வரும் காலத்தில் சிந்தித்து.

நம் உரிமையை செலுத்துவோம்!

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- 

திங்கள், 8 மே, 2017

நேரில் கண்ட தெய்வம்

அம்மா அம்மா உந்தன் விழிகள் ஈரம்
முதுமையின் கோலம் தெரியுதம்மா
நீ சிந்திய குருதியும் நீ சிந்திய கண்ணீரும்
நினைவுகள் வரும்போது நெஞ்சமெல்லாம்
அனலாக உருகுதம்மா.

இளமைக்கோலத்தில் நீ இருந்த போது.
ஏழ்மையாய் நீ இருந்தாய் அம்மா
இடிதாங்கி வலி தாங்கி உதிரத்தை பாலக்கி
என்னை ஊட்டி வளர்த்த தாயே.

அன்னம் ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
ஆயிரந்தான் தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்
ஆண்டவனிடம் தவமிருந்து உயிர்பிச்சை கேட்பேன்
ஆயிரம் வருடம் வாழவேண்டும் மென்று.என் அன்னை.

ஆண்டவனின் விதியோ. மரணம் வந்து அழைக்க.
கண்ணீர் துவைந்த விழிகளுடன்
ஏக்கம் கலந்த வாழ்வாக
என்நாளும் வாழ்கிறேன் தாயே.
உன் கல்லறை அருகில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்


 
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 14-04-2017தொடக்கம்10-05-2017 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
 
தலைப்பு-சித்திரை வெயில் வாட்டுதே...
 
 
போட்டியின் நெறிமுறைகள்.

 
1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 

எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

 

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

 

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

 

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் 

(இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

 

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

 

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

 

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

 

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்

11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 

ootru2@gmail.com

 

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்

மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்

(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

 

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) 

பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

 

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது… கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும்

-நன்றி-

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்

-கவிஞர்..ரூபன்-

திங்கள், 3 ஏப்ரல், 2017

எல்லாம் உன் கற்பனையே.



என் பஞ்சு மிட்டாயே என் பவளச் செவ்வாயே.
பத்து திங்கள் சேர்ந்திருந்து பாதித்திங்கள் பிரிந்தேனடி.
பாவி மகனை கை பிடித்து பாதிவழியில் நிக்கிறாய்.
பார்த்த உன் பால்முகம் மாறவில்லை.
பாவையே! உன் நினைவெல்லாம் பாலாறாய் ஓடுதடி.,…

வளையல் போட்டஉன்கரம் வளையோசை கேட்க.
கோடி தவம்நானிருந்து கோடைகாலம் காத்திருந்து.
நான் நட்டு வைத்த  மல்லிகையும் நடுமுற்றத்தில் நிக்குதடி.
தோட்டத்து மல்லிகையும் தோரணமாய் தொங்குதடி.
முடியழகில் நீ சூட முடித்து வைக்க யாருமில்லை.

என் அன்னக்கிளியழகி என் அருமை சொல்லழகி
குரலோசை கேட்காமல் குணமெல்லாம் மாறுதடி.
தொலைபேசி எடுத்திருந்தேன் தொல்லைகளை தந்திருந்தேன்.
தொலை தூரம் இருப்பதால் தொல்லைகளும் இல்லையடி.

மசமசத்த  கைமணமும் மாறத சுவையும்
ஊசி மிளகாயும் உள்ளேரெண்டு வெங்காயமும்
பழைய சோறும் பழைய தயிரும்
கலையத்தில் நீ எடுத்து காலையில நீ தந்தா
மாறாத உன் கைமணமும் மனதளவில் நிக்குதடி.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 20 ஜனவரி, 2017

திருகோணமலை-ஈச்சிலம்பற்று மண்ணில் எனது கவிதை நூல் வெளியீடு-2017


கல்விக்கு கரம் கொடுப்போம் அமைப்பும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் இந்தியாவை சேர்ந்த இனிய நந்தவனம் பதிப்பகமும் அம்பாறை மாவட்ட தமிழ்எழுத்தாளர்கள் மேம்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா-2017

 
ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் . ரூபன் எழுதிய ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடும்.

 
ஈச்சிலம்பற்று கோட்டத்தில் தரம் 1இல் புதிதாக கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு தலா 1000ரூபாய் என்ற அடிப்படையில் மக்கள் வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கு திறந்து சேமிப்பு புத்தகம் பெற்றோர்களிடம் கையளித்தல்.100 மாணவர்களுக்கு தாய் தந்தை இல்லாமல் வாழ்வோருக்கு

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு.

வெருகல்-ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் சமுக தொண்டர்களை கௌரவித்தல் நிகழ்வும்

 
இலக்கிய வாதிகளை கௌரவித்தல்.


இந்த நிகழ்வுக்கு இந்தியா.குவைத். மலேசியா .சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இலக்கிய வாதிகள் தொழில் அதிபர்கள் கல்லூரி முதல்வர்கள் வருகை தருகிறார்கள்.


இவ் விழா -29-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குநடைஸ்ரீசண்பகாமகா வித்தியாலயத்தில் நடை  பெறவுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.
 
மாணவர்களின் நலன் கருதி உதவி செய்வோர் உதவலாம் சிறுதுள்ளியாவது...

 

நன்றி
இவ்வண்ணம்
கவிஞர்..ரூபன்-(தலைவர்) ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம்