ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. //செவிப்பறை கிழியும் வரை.உரிமைக்குரல்.// - ஆக்ரோசமான வரிகள்...எளிமையாய்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. துயரங்கள் தீர துரிதமாய் புறப்படுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. மக்கள் குரலைக் கேட்க முடியாதவன் எல்லாம் நாயகனா :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      உண்மையில்இவர்கள் இருந்து என்ன இலாபம்..ஜி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. வணக்கம்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. மக்கள் தங்கள் துயரங்களைச் சொல்ல
    ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வரும்
    மக்கள் பலத்தில் வென்ற
    மக்கள் நாயகர்களைத் தேடி இயலாமலே
    தெருவில இறங்கி விட்டனர்
    எவர் கண் முதலில் திறக்குமோ
    காலம் பதில் சொல்லட்டும்!

    பதிலளிநீக்கு
  7. தேர்தலில் வென்றதும் மக்களை மறப்பது அரசியல் வாதிகளின் தேசிய குணமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  8. உங்கள்நெ ஞ்சின் ஆற்றாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்றும் செய்ய இயலாமல் தமிழகத்துத் தமிழர்கள் தவிப்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். சிக்கலான சர்வதேச அரசியலில் தமிழன் வலையில் சிக்கிய மீனாகிவிட்டான்...காலம் ஒன்றுதான் கவலைகளை மாற்றித்தரும் என்று நம்புவோம்.
    - இராய் செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  9. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்