புதன், 19 ஆகஸ்ட், 2015

தவிப்பு..


9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





புன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்
     பாவையே நீ பார்க்கும் மாயம் என்ன!!
மலர்ந்த புதுவெள்ளம் நீ மாயமானதேன்.
       முப்பகலாய் நானிருந்து.மும் முறையும்

 
வற்றாத உப்பூ நீர் உன் வதனமெல்லாம்
     ஒற்றனமாய் ஒற்றுதடி உன் முகத்தில்.
பாசத்தின் சோதியாய் பிரகாசிக்கும்  ஒளியே!
     பாவிநான் பிரிந்து பரதேசி அலைகிறேன்.

 
சொந்த மொழி சொல்லிடுவாய் சுகமாக.
     சோகங்களும் இறங்கிடுமே சுமையாக.
அல்லும்பகலும் விழித்திருக்கேன் அன்புக்கு.
   இமைகளை மூடி இருக்கிறேன் சிலநேரம்.
வழியோரம் உன் உதடுகளால்
  புன்னகை குவியல் ஒற்றிடுவாய்!...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எப்போது நீ வருவாய்





















மல்லிகை சூடிய மாதவம் மங்கையே.
         மன்னவன் வந்தான் காண.
புன்னகை பூத்தவள் பூவிளம் சிரிப்பிலே.
            புது செந்தமிழ் பாடி

கவிதையை எழுதிட கற்சிலை தேவையில்லை.
          கற்பக தரு விருட்சமாய்.
கண்ணறை நெஞ்சறை தினம் காணேன்.
           கார்த்திகை பூக்களில் நீ ஒன்ரே.

கண்ணின் மணியே கார்கால இரவே.
            கண்ணிமைக்கு இடமெல்லாம் ஒளியே.
மார்கழி மாதத்து சிதறல் பனியே.
               மும்மாறி சீராக பொழிகிறாய்.

என்னவளே. மன்னவளே மதிமயங்கும் நேரத்திலே.
            என்னவளைக் கரம் பற்ற
எப்போது நீ வருவாய் -உந்தன்
       எழில் அழகை காண காத்திருக்கேன்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழன் முகவரி இழந்தோம்.....


பாரத தேசத்தின் சோக நாள்.
புன்னகை தவழ்ந்த வதனம்.
தமிழன் என்ற அடை மொழிக்கு.
அடையாளம் தந்த முகவரி.நீ அல்லவா?

இன்று எம்மை விட்டு பிரிந்த துயரம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது-போல.
உலககெங்கும் வாழும் 
தமிழன் முகவரி -இழந்த நாள்.

ஆறாத  துயரங்கள் 
அலையலையாய் அடிக்கிறது.
கண்ணீர்க் கடலும் 
அலையலையாய் ஓடுகிறது.

வீதி எங்கும் ஊர்ரெங்கும்
 சோகக் கீதங்கள் இசைக்க.
பட்டொலி வீசும் தேசிய கொடிகள் 
அரைக்கம்பத்தில்

ஆடி ஆடி துக்கத்தை சொல்லுகிறது.
ஏழையின் வயிற்றில் பிறந்த. மகன்
ஏழையின் தோள் நின்று துன்பத்தை அறிந்தவன்.
துயரங்கள் துரத்தி வர  நெஞ்சசை நிறுத்தி

வெற்றி மேடை ஏறிய வெற்றித் திலகம்.
உன்னை இழந்த துன்பத்தால் வாடுகிறோம்.
பொன் மொழி வித்தகா.! உன் பூவுடல் 
சந்தன பேழையில் 

சரித்திரம் சொல் அடைக்கப்பட்டது.
நீ மடிய வில்லை.   நீ விதைக்கப்பட்டுள்ளாய் 
நீ ஏழைகளின் நெஞ்சில்.குடியிருக்காய்.
ஏழ்மை வாழ்வை கற்றுக் கொடுத்ததும் நீதான்.

ஏணியில் உயர வைத்ததும் நீதான்.
நீ மறைந்தாலும் நீ விட்டுச்சென்ற தடயங்கள்.
உன் ஞாப நினைவை தினம் தினம் 
வீசிக் கொண்டே இருக்கும்.


2-08-2015.மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு ( தமிழ் மலரில் வெளிவந்த கவிதை. இது. 

9-08-2015 இல் ஞாயிறு அன்று தேசிய நாள் ஏடு மக்கள் ஓசையில் எனது நேர்காணல் வருகிறது அதையும் விரைவில் தருகிறேன் பார்வைக்காக.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-