புதன், 31 டிசம்பர், 2014

வீதியோர தேவதை…

வீதியோரம் போகயில் விதியாக வந்தாள்.
என் வீதியோர தேவதை  உன்.
நிழலாடும் போது  உன் நினைவாடுகிறது.
வந்தாடும் நினைவில் என்னை பந்தாடுகிறாய்.
சொல்லாமல் சொல்லும் வார்த்தையில்
என்னை  நீ வென்றாடுகிறாய்.
சொல்லாடும் வேளையில் நீ சொந்தங்களை
சொன்னாய் பாவி மகளே.

வந்தாடியதால் வெந்தாடியது என்னுள்ளம்.
நொந்தாடி திரிகிறேன் பந்தாடும் வீதியிலே.
முன்னாடி போகிறாய் நான் பின்னாடி வருகிறேன்.
தன்னாலே சொன்னாய் காதலை -அன்பே
என் மெய் நாடி ஏற்றது காதலை-அன்பே
உன் மெய் நாடி வந்தது என் உள்ளம்.
காதல் போதையால் தள்ளாடித்
திரிந்தது என்னுள்ளம் அன்பே.


மண்டாடி கேட்கிறேன் உன்னிடம்-அன்பே
நான் மறைத் தீர்ப்புக்கு சாட்சியாய்
மாறுதல் இல்லாமல் சொல்வாயா- அன்பே
உன்னிடத்தில் என்மீது அன்பு உள்ளதா?
சத்தியமாய் நிருபிக்க  அவகாசம் கேட்காதே.
காலம் மென்னும் வெள்ளத்தில் காலத்தை கடத்தாதே
காலம் கடந்தாலே காலதேவனும் மன்னிக்க மாட்டான்
நம் காதலும் வெகு துாரம் கடந்திடுமே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 

புதன், 24 டிசம்பர், 2014

அன்பை புரிந்து வெளியேவா


உன்னை காதலித்த நாள் முதலாய்
என் நெஞ்சறையில் ஆயிரம் வார்த்தைகள்
புரையோடியுள்ளது. அதை எழுத முடியாமல்
உனக்காக எழுதுகிறேன் மன்னிப்பாயா என்னை
அன்பாக பழகிய காலங்களில்
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை 
விட்டுச்சென்றாய் அந்த ஆசைகள்
ஒவ்வொரு கணப்பொழுதும் துள்ளி வருகிறது
 
கடைத் தெருவில் சனக் கூட்டத்தில்
கை தவறிய குழந்தை போல.
உன்னை நினைத்து நினைத்து
 தினம் தினம் வாடுகிறேன்
பருவ காலங்கள் மாறி மாறி
வருவது போல. உன் நினைவும்
வினாடிக்கு வினாடி
வந்துகொண்டுதான் இருக்கிறது
 
என் கவிதைக்கு எவ்வளவு
வாசக நெஞ்சங்கள் வருகின்றார்கள்
இவை எல்லாம் என்னால் இல்லையடி
உன் காதல் அழகை என் கைப்பட
எழுதும் போது உன் நினைவால்
 உயிர்பெறுகிறது என் கவிதை
நேரம் காலம் இருக்கும் போது
என்கவிதையாவது நீ படித்து பார்
 
என் உணர்வுகள் உன்னை
நிதானப்படுத்தும்  உன்னை
அப்போதாவது உணர்வாய்
என் கண்ணீரும் உன் புன்னகையும்
நம் காதலுக்கு முகவரியாக இருக்கிறது.
காதல் வேண்டாம் என்று
நான் தனிமையாகினேன்
 
உன்னை கண்ட நாள் முதல்
காதல் என்ற பாசவலையில் வீழ்ந்தேன்
பாசத்தால் ஒன்றாய் சேர்ந்தாய்
பாசம்மெனும் வேசம் காட்டி
என்னை தனிமைப்படுத்தி விட்டாய்
இறுதியாக சொல்லுகிறேன்
என் இதயத்தை நீ விலை கொடுத்து
வாங்க வில்லை பாசத்தால் வேண்டினாய்
 என் இதயத்தில் நீ நடந்து விளையாடிய
உன்  பாதச் சுவடுகள் பதிந்து இருக்கிறது.
வேற ஒருத்தி அழித்து விட்டு
விளையாட முன் நீயே வந்து
என்இதயத்தில் விளையாடுவாயாக
இல்லை என்றால்
ஆயுள் முழுதும் கண்ணீர்வடிப்பாய்..
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 17 டிசம்பர், 2014

பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.

பட்டு வானம் பளபளக்க உன்
பட்டு மேனி ஒளி ஒளி ஒளிக்க
என் உள்ளமது துள்ளி விளையாட
எண்ணக் கிடைக்கைகள் துள்ளி இசைபாட
உந்தன் நினைவுதான் என்னை
தினம் தினம்  வாட்டுகிறது.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.

 உவமை கொண்டவளே
உன்னை  அகிலமே போற்றிடுமே.
காதல் மொழியால் என்னை
காயப்படுத்தியவள் நீ அல்லவா.
அதில் அன்புமொழி
சொல்லியவள் நீ அல்லவா.
வெள்ளை உள்ளம் கொண்டவளே
என்னை வேடந்தாங்கும்  வெண் புறவே

 உன் காதல் வலையில் சிக்குண்டு
தவியாய் தவிக்கிறேன் விடை தெரியாமல்.
விண்னில் பாயும் எறிகணைகள்
இலக்கை தாக்கா விட்டாலும்
நீ என்மீது  பார்க்கும் காதல்(ப்)பார்வை.
அணையாத தீயாக எரிகிறது…
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பருவமாறி பாதை மாறினேன். காதலாலே.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 10 டிசம்பர், 2014

எப்போது மலரும்…………….

வாழ்வில் சுமைகளை சுமந்தோம்
எங்கள் வாழ்கையே போராட்டமாக மாறியது
அவலங்களை தாங்கியும்
குருவிகள் போல கூட்டமாக கூடு கட்டி
சுகமாக வாழ்ந்து வந்தோம்
உயிர்களை கையில் பிடித்தவண்ணம்
ஊரூராய் ஓலமிட்டோம்
ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை.
சொந்தங்களை இழந்தோம்
உறவுகளை இழந்தோம்
இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம்


யாரும் செய்யாத துன்பத்தை
நாம் செய்தோம் இல்லை
தமிழன் என்ற அடை மொழியால்
யாவரும் வஞ்சிக்கப்பட்டோம்
வஞ்சியவன் புதை குழியில் படுத்துறங்க
விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான்
அழுதோம் புரண்டோம் மாண்டோம்
எங்கள் அவலக்குரல் யாருக்கும்
கேட்கவில்லை… என்னதான் செய்தோம்

கோயிலுக்கு போனால் கோபுரங்கள்
சாய்ந்து விழும் வீதிக்கு போனால்
நடந்த தடம் கூட இல்லை.
எங்கள் விதிகளை யார் இடமும் சொல்லி
யாரும் கரிசனை காட்டியதில்லை.
கல்லாய் இருக்கும்தெய்வம் கூட
கண்னை மூடிக்கொண்டு வாழ்கிறார்
தெய்வமே இப்படி என்றால்
எங்கள் கதிதான் என்ன நிலை…


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 


 

புதன், 3 டிசம்பர், 2014

என்னை சிறையாடும் மடக்கிளியே


தென்றல் காற்றே தென்றல் காற்றே.
ஓ..வென்று…. ஒரு கீதம் பாடும்
பாடும் கீதத்தில் என் ஓசையும் காலந்து வரட்டும்
என்னவளின் காதில் ஒலிக்கட்டும்
கடல் அலையே கடல் அலையே
கல்லில் ஏன்சீற்றம் கொண்டு அடிக்கிறாய்
அன்பானவள் பிரிந்து போகயில்
அவள் கொலுசில் மோதிக்கொள்
அப்போதாவது என் நினைவு நீச்சல் போடட்டும்
 
சூரியனே சூரியனேஅனைவரையும்
சுடெரிக்கும் பகலவனே.
அள்ளி அணைத்த உள்ளமது.
தட்டுத் தடுமாறி போகயில்
சூரியனே சூரியனே உன் கரத்தால்
ஒரு தடவை சுட்டு விடும்
நிழல் தேட நான் வாங்கி கொடுத்த
குடையதுவை பிடிக்கையில்
என் நினைவது வந்து விடும்….

 
நிலமகளே நிலமகளே…
நித்தமது உன் தோழில்
தினம் தினம் எத்தனையே தாங்கிறாய்.
என்னவளும் போகின்றாள்
ஏர் கொண்டு தாங்குகிறாய்…..
அவள் ஏழனமாய் சிரிக்கிறாள்
அவள் செல்லும் பாதையை
ஒரு கனமாவது இரண்டாக உடைத்திடுவாய்
அவள் அழும் போது
என் பெயராவது சொல்லட்டும்…

 
வானகமே வானகமே -உனக்கு
வாழ்த்து மடல்சொல்லிடுவேன்
பஞ்ச பூதங்களை சேர்த்து
உனக்கு கவிவரிகள் புனைகிறேன்
உன் ஐம்புலனை நீ சீர்படுத்தி
சீக்கரமாய் எனக்கு உயிர் கொடுத்திடுவாய்
உன்நினைவாலே நான் தினம் தினம்
ஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்
சிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.
என்னை சிறையாடும் மடக்கிளியே.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 27 நவம்பர், 2014

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)
 
அன்புள்ள
அம்மா- அப்பாவுக்கு
நலமா.

நான் நலம் தங்களின் நலம்  சகோதரங்களின் நலமறிய ஆவலாக உள்ளேன். எந்த வித துன்பமும் இல்லாமல் முடன
 வாழ இறைவனை வேண்டுகிறேன்.

 பாலைவனக் காற்றில் என் உதி நாளங்கள் கொதிக்கிறது. 
வேதனம் என்ற காசுக்காக  சுட்டெரிக்கும் வெயிலில்  துடியாய்துடிக்கும் புழுவாக துடிக்கிறேன்.
என் சகோதரங்களை நினைத்து நினைத்து.. என் இதயக் கதவுகள் துடியாய் துடிக்கிறது
வேலை தளத்துக்கு சென்றால் அம்மா ஊட்டிய  சாப்பாடும் அப்பா காட்டிய அன்பும் சகோதரம் காட்டிய உறவும்  என்னை கண் கலங்க வைக்கிறது. விதியோ சதியோ செய்யும் திருவிளையாடல் என்றோ நான் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். நாள்முழுதும்.

 தூங்கும்போதும் விழிக்கும் போது உறங்கும் போது உங்கள் நினைவுகள் கடலில் கடலை அடிப்பது போல ஆர்ப்பரிக்கும் ஓசை என்  மனக்கதவை திறக்கிறது. பாசமாக பழகிய எம் றவுகாரன்
இறந்தான் என்ற செய்தியை கேட்கும் போது வர முடியாமல்  நான் விமானத்தில் பறந்து வந்த திசையை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.துன்பம் என்ற சிலுவையை நான் 
தினம் தினம் வெளி நாட்டில் சுமந்து வாழ்கிறேன் கவலை வந்தால் நான் வாழும் வீட்டின் நாகு சுவர்கள்தான் எனக்கு சொந்தக்காரன்.

 கவலை வேண்டாம் அம்மா.  நான் வருவதற்கு இன்னும் ஒருவருடங்கள் உள்ளது என்னை நினைத்து நினைத்து அப்பவும் .அம்மாவும் ஏங்கி தவிப்பீர்கள் என்பது எனக்கு நன்கு புரியும்.. என்ன செய்வது கஸ்டம் என்ற துன்பம் நம்மை ஆட்டி படைத்து விட்டது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில காலம் அர பு தேசத்தில் உழைக்கிறேன்.
 என்னைப் போன்று பல உறவுகள் அரபு தேசத்தில் முகவரி தெரியாமல்உறவுகளின் முகம் தெரியாமல் பாலஆண்டுகள் வாழ்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் செய்த புண்ணியத்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..

நன்றி
அன்புடன்
மகன்( கண்ணன்)
 
 மகனின் மடல் வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள். மடலை பார்த்த பின்புதான் தெரிந்தது படுகிற துன்பத்தை.. அம்மாஅப்பா சகோதரங்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்
கண்ணன் அரபு தேசத்தில் ஒரு தமிழ்ப்பெண் மீது காதல் வயப்பட்டு காதல் மோகத்தில் ஆழ்ந்தான். இப்படியாக 6 மாதங்கள் தங்களின் காதல்  பரிணாம வளர்ச்சியடைந்து மகிழ்ச்சி கடலில் பொங்கினான் ஒரு நாள் கண்ணனுக்கும் கமவுக்கும் இடையில் வாய்த்ர்க்கம் ஏற்பட்டது என்னை நீ கவனிக்க வில்லை. உன்னோடு இருந்து என்ன பலன் என்று தகாத வார்த்தை பிரயோகம் தாறும் மாறுமாக திட்ட கண்ணன் அன்று இரவு தூங்கவில்லை காலையில் வேலைக்கு போகவுமில்லை.

 தனது ரூமில் நின்றான். பல தடவை சிந்தித்து சோகத்தால் துவண்ட கண்ணன் தனது ரூமில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்தான்..  காதல் என்ற நட்பு வட்டத்தில் சங்கமித்த கண்ணன் இந்த காதலே அவனுக்கு இயமான வந்து...  கண்ணனுக்கு நடந்த துயரத்தை  அவனது நண்பர்கள் வீட்டுக்கு சொன்னார்கள்  அவனது வீட்டில் அழுகை சப்பதம் ஒலித்தது... எல்லோரும்
துயரத்தில் ஆழ்ந்தார்கள். சில நாட்கள் கழித்து கண்ணனின் வீட்டுக்கு அவனது உடல் கொண்டுவரப்பட்டது. அவனது குடும்பமும் ஊர் உறவுகளும் சோகத்தில் வாடினார்கள்
பின்பு கண்ணன் வந்த சவப்பெட்டியை  திறந்து பாரத்தால் அவன் தூக்கு மாட்டிய கயிறும் அப்பாவும் அம்மாவும் மற்ற சகோதரங்களும் ஒன்றாக இருக்கின்ற  புகைப்படம் ஒன்றும் இருந்தது. என்ன செய்வது  கண்ணனைப் போன்று பல ஆசைகளுடன் வெளி நாடு சொல்லும் பலரது வாழ்க்கை இப்படித்தான் போகிறது.. நிறை வேறாத ஆசையாக.....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-