வெள்ளி, 25 டிசம்பர், 2020

பருத்திக் காட்டுப் பெண்ணே




என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
 
நடையழகில் நான் மயங்கி-நாணமெல்லாம்
மெய் தவற விட்டெனடி-செல்லமா.
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
சிதறுதடி உன் புன்னகை வதனமடி.
 
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே  நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
 
பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும்  முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.

-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன் 

சனி, 13 ஜூன், 2020

மனங்களில் நிறைந்தவனே.

எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு
நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே
சொந்த தமிழில் செந்தமிழ் பாடி
அகிலம் வாழும் தமிழர் மனங்களில்
நிறைந்த முழுமுதல் கவிஞரே.-நீ வாழ்க.

சில மணி நேரம் உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வின் இளவேனிக்காலங்கள்
இயல் இசை நாடகம் என்ற முக்கலையும்
வளர்க்கும் சங்கத் தமிழின் அவைச் சான்றோரே
உன் பேச்சு அகிலமெல்லாம்  இனிக்குதையா

அகவை நிறைவை ஆயிரம் உறவுகள் கூட்டி
அவனியில் வலம் வரும் உனக்கு
ஆயுள் முழுதும் அண்டவன் அருள் புரிவான்.
தமிழுக்காய் நீ வாழுகிறாய்
உன் புகழ் தரணி எங்கும் பூபாளம் பாடுதையா

ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
ஏழைகளின் தோழனாய் மாந்தர்களின்
மனங்களில் நிறைந்தவனே.  
வாசு தேவன் நாமம் பெற்ற உன்னை.
அகவை நிறைவில் ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துக்கவிதையில் நனைய
இந்தச் சான்றோனும் வாழ்த்துகிறேன்.


நன்றி
அன்புடன்
த.ரூபன்