வெள்ளி, 25 டிசம்பர், 2020

பருத்திக் காட்டுப் பெண்ணே




என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
 
நடையழகில் நான் மயங்கி-நாணமெல்லாம்
மெய் தவற விட்டெனடி-செல்லமா.
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
சிதறுதடி உன் புன்னகை வதனமடி.
 
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே  நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
 
பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும்  முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.

-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன் 

9 கருத்துகள்:

  1. நாட்டுப்புற பாடலாக அமைந்துள்ளது ரூபன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. //
    பின்னருகே நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
    முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
    //
    :-)

    பதிலளிநீக்கு
  4. நாட்டுப்புறப் பாடல் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  5. பருத்தி எடுக்க போகலாம் போல![[ கவிதை அருமை சகோ!

    பதிலளிநீக்கு
  6. பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
    பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
    மூன்று நாளும் முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
    உன் முழு முகமும் காணவில்லை. அருமை வரிகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  7. பாடல் நன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்