புதன், 27 மே, 2015

மனிதா மனிதத்தை இழந்தாயடா..


சிறகடித்து பறக்கும் வெண்புறாவே.
உன் சிறகுடைந்து கிடக்குது. வெண்புறாவே.
மாலை நேரம் வந்ததனால்
உன் மனையை தேடி சென்றாய் வெண்புறாவே
வெண்மையின் தூய்மையில்.
கயவஞ்சகர்கள் காம வலைக்குள்
சிக்குண்டுதுடியாய் துடித்தாய் வெண்புறாவே.

கால்(க்)கட்டு கை(க்)கட்டு போட்டு
உயிர் இருக்க உயிர் இருக்க
ரணம் ரணமாய். வெள்ளை சிறகை
உடைத்தான் வெண்புறாவே.
வேதனையால் எப்படி
துடி துடித்திருப்பாய் வெண்புறாவே.
தாயின் வயிற்றில் முறை தப்பி
பிறந்த மூதேவி நாய் பயல்கள்

முன்னுக்கு பின்னாக நின்று.
காமப்பசி தீர்த்த கயவர்கள்.
சிறகு விரித்து பறந்த வெண்புறாவை
சிறகுடைத்து போட்டீர்கள்
சகோதர பாசம் என்றால்
என்னவென்று தெரியாத. மிருங்கள்.
உங்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டான்
மனிதனும்கூட மன்னிக்க மாட்டான்.

 செய்வினை செய்தவன்
தன் வினை தானே அனுபவிப்பான.
கையிலும் காலிலும் விலங்கு போட்டு
வாழ் நாள் முழுதும் உலகத்தை
பார்க்க முடியாத அளவுக்கு
மண்ணின் அடியில் உயிருடன்
புதைக்க வேண்டும் காம வெறியர்களை.

ஒரு வெண்புறாவின் சிறகை உடைத்தான்
இன்று பலநூறு வெண்புறாக்கள்
அகிலமே அதிரும் வண்ணம்
கூட்டை விட்டு ரோட்டை மறித்து
நீதி கேட்கும் வெண்புறாக்கள். எத்தனை
நீதி தேவதை உறங்க வில்லை.
அவளும் ஒரு பெண்தான்
சரித்திரத்தில் எழுதட்டும் நீதி


எமக்கு கிடைக்கட்டும் நிம்மதி
சிறகுடைந்த வெண்புறாவே. நீதி வரும்
வரை உன் உறவுகள் தூங்காது

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வியாழன், 21 மே, 2015

வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015


வலைத்தளத்தில் பல வகைப்பட்ட பதிவுகளை எழுதிவரும் மதிப்புக்குரிய கவிஞர் திரு.ரமணி ஐயா இவருடைய வலைத்தளத்தில் பலவகையான கவிதைகள் உள்ளது ஒவ்வொரு கவிதையும்  படிக்கும் வாசகஉள்ளங்களை நல்வழிப்படுத்தும் வகையில் உள்ளவை. மற்றும் சமுக அவலங்களையும் தன்நம்பிகை ஊட்டும் வகையில்  கவிதையை மெருகேற்றி எழுதுவதில் வல்லவர்… இவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வலையுலகில் தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்னை பொறுத்த வரையில்.பல வகைப்பட்ட திறமைகளை கண்டு எமது கவிதைக்குழு சார்பாக

எழுத்துலகம் என்று நின்று விடாது தனது அரச வேலையில் ஓய்வு பெற்ற பின்பு லயன் கழகத்தில் முக்கிய பொறுப்பு மிக்கவர் இதன் வழி சமுதாயப்பனிகளை தினம் தினம் செய்து கொண்டு வருகிறார். இப்படியான பணிகளை செய்து வரும் ரமணி ஐயாவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில்
                கவிஞர்.திரு.ச.ரமணி ஐயாவுக்கு
சிந்தனைச் சிற்பி
என்ற தலைபிட்ட.உயரிய

 
 

விருதை மலேசியாவின் தலை நகரான கோலாலம்பூரில் இலக்கிய சந்திப்பின் போது வழங்கி கௌரவித்தேன்.. ஐயாவுக்கு  எமது கவிதை குழு சார்பாக  வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணி ஐயாவை போல வலைத்தளத்தில் எழுதி மற்றும் மூன்று நூல்களை வெளியீடு கண்ட  மதிப்புக்குரிய பாசமிகு ஐயா. அவர்தான் கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயா.

இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். இந்துக்களின் பெருநாள் என்றால் இந்திய தொலைகாட்சியை திறந்தால் போது. நம் வீட்டுக்குள் வந்திடுவர் அதுதான் ஐயாவின் பட்டடி மன்ற பேச்சு.அத்தோடு நின்று விடாது ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சமுகத்தை நல்வழிப்டுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார் அன்று முதல் இன்வரையும்.


அத்தோடு நின்று விடாது தான் வாழும் ஊரில் எப்படிப்பட்ட சமுதாய பணிகள் நடை பெறுகிறதோ அங்கேயும் காண முடியும் மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டி என்றுதான் சொல்ல வேண்டும.எங்கு  நீதியின் குரல் நசுக்கப்படுகிறோதோ அவற்றை எல்லாம் தட்டிக்கேட்கும் மனம் படைத்தவர் இப்படியாக கவிஞர் திரு. நா.முத்து நிலவன் ஐயாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்… தனது அரச வேலை ஓய்வு பெற்ற பின்பும் தனது பணியை செம்மையாக தொடருகிறர்இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு

 கவிஞர்.திரு.நா.முத்து நிலவன் ஐயாவுக்கு

(தமிழ் மா மணி )என்ற உயரிய
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது…
 
மலேசியாவின் புகழ்பெற்ற முருகன் கோவில் முன்பாக முது்து நிலவன் ஐயாவுடன்  நிற்பவர், நகைச்சுவைத் தென்றல் திரு லியோனி அவர்களின் குழுவில் வந்த இனிய நண்பர் திரு. கோவை தனபால். அவர்கள்
எழுத்துலகில் வெற்றி நடை போடும் இரு ஜம்பவான்கள் இருவருக்கும் எமது கவிதை குழுவின் சார்பாக  உயரிய விருதை வழங்கி கௌரவப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்….
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 15 மே, 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் மீண்டும் நீடிக்கப்படுகிறது.



 

 
வணக்கம்
உறவுகளே

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளதுஅதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்...

தலைப்பு-இணையத் தமிழே இனி…..

எழுதுங்கள் பணப்பரிசை அள்ளிச் செல்லுங்கள்
போட்டி சம்மந்தமான விதிமுறைகள் மற்றும் நடுவர்கள் விபரம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள தலைப்பில் சொடுக்கவும்.

 


 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 13 மே, 2015

பாரதி கண்ட புதுமைப் பெண்


ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்
வெற்றித் திலகமிட்ட வீர மங்கை
தன்நம்பிகை தளராத மன உணர்வுடன்
வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு
வெள்ளைக்கரனை புறமுதுகு காட்டி
ஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட
புதுமை பெண் அல்லவா
அவள்தான்  வீர மங்கை வேலு நாச்சியார்.

அன்று  சொன்னான் சமைக்கும்
கரங்களும் சரித்திரம் படைக்கும்
அதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்
தற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்
சரி நிகராக வாழும் காலம் கண் முன்னே
கடவுள் சாட்சியாக விரிகிறது.
உழைப்பின் சுகமறிந்த பெண்கள்
இன்று வானளவில்கொடிகட்டிபறக்கிறார்கள்.


வண்ண சேலை கட்டி வலம்வரும்
பெண்கள்.தங்களின் தாய்நாட்டுக்கவும்.

தன்மானத்துக்காவும்
அச்சமில்லை அச்சமில்லை
உச்சி மீது  வானிடிந்த போதிலும்
துச்சமில்லை துச்சமில்லை
தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.
பித்துப்பிடித்த  சில ஆண்களின்

விந்தையான பார்வையாள்
காம சுகத்துக்கு
கருகி மாண்டவர்கள் எத்தனை.
மூடர்கள் என்று நினைக்கும்
 பெண்கள் -இன்று
மறவர்கள் என வாழும் பெண்கள்
எம் பாரதி கண்ட பெண்கள்.
புதுமைப்பெண்……அல்லவா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 


திங்கள், 11 மே, 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி நிறைவடைய இன்னும் சில நாட்கள்.

வணக்கம்

உறவுகளே.

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிக்க வேண்டிய
இறுதி நாள்-15-05-2015  அன்று  முடிவடைகிறது . படைப்புக்கள் அனுப்பாத உறவுகள் மிக விரைவாக அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

போட்டி சம்மந்தமான முழுவிபரம் பார்வையிட கிழே சொடுக்கவும்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வல்வையூரானின்
"நீங்க எழுதுற பாட்டு "
மாபெரும்உலகம் தழுவிய  பாடல் ஆசிரியர் போட்டி -2015 
 

இந்த பாடல் ஆசிரியர்  போட்டி  அன்பு நண்பர் இராஜமுகுந்தன் நடத்துகின்றார்... தயவு செய்து நல்ல வாய்ப்பு இதை நழுவ விடாமால் நிச்சயம் பங்கு பற்றுங்கள்... பாடல் எழுதி அனுப்ப வேண்டிய இறுதி நாள்  20-05-2015 அன்று...

மேலும் விபரம் பார்வையிட..கீழே சொடுக்கவும்.
மாபெரும் உலகம் தழுவிய பாடல் ஆசிரியர் போட்டி 2015 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 6 மே, 2015

கற்பழிப்பு


இன்றைய தினசரி வாழ்வில்
தினசரி பத்திரிகையில்
தினம் தினம் அவலங்கள்
சுமந்த செய்திகள்
தலை விரித்தாடுகிறது.
தையலாள் மண்ணில்
பிறந்தது குற்றமா
அல்லது வாழ்வது குற்றமா.
அன்று பாரதி போற்றினான் பெண்மையை
இன்று இம்மவர் சிதைக்கிறான் பெண்மையை.

 
மலருக்கு பெண்னுக்கும்
சம்மந்தம் உண்டு
மடமை கவிஞர்கள்
போற்றி துதி பாடின அன்று
பெண்ணுக்கும் மண்ணுக்கும்
சண்டைமூன்றது அன்று
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சண்டை மூண்டு வீதியில்
சிதைவுற்று கிடக்கிறாள் இன்று.


தன் மனைவியை தவிர
மற்றவர்எல்லாம் சொந்தங்கள்
என்று நினையாமல் .
குருதியை குடிக்கும்
காம சுகம் கண்ட பாவிகள் எத்தனை.
நாளுக்கு நாள் செய்தி வருகிறது
நாகரீகம் கெட்டு போகுதையா.
சிந்தனை சிகரத்தை ஏற்றிடுவாய்

 
நல்வழி இளைஞரே.
பாரினில் நாலுபேர் போற்றிட
நல்வழி காட்டிடும் இறைவா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

 

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி நிறைவடைய இன்னும் 9 நாட்கள் உள்ளது தயவு செய்து தங்களின் ஆக்கங்களை மிக விரைவில்அனுப்பிவைக்கும் மாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.
...
 
...