புதன், 19 ஆகஸ்ட், 2015

தவிப்பு..


9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





புன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்
     பாவையே நீ பார்க்கும் மாயம் என்ன!!
மலர்ந்த புதுவெள்ளம் நீ மாயமானதேன்.
       முப்பகலாய் நானிருந்து.மும் முறையும்

 
வற்றாத உப்பூ நீர் உன் வதனமெல்லாம்
     ஒற்றனமாய் ஒற்றுதடி உன் முகத்தில்.
பாசத்தின் சோதியாய் பிரகாசிக்கும்  ஒளியே!
     பாவிநான் பிரிந்து பரதேசி அலைகிறேன்.

 
சொந்த மொழி சொல்லிடுவாய் சுகமாக.
     சோகங்களும் இறங்கிடுமே சுமையாக.
அல்லும்பகலும் விழித்திருக்கேன் அன்புக்கு.
   இமைகளை மூடி இருக்கிறேன் சிலநேரம்.
வழியோரம் உன் உதடுகளால்
  புன்னகை குவியல் ஒற்றிடுவாய்!...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

17 கருத்துகள்:

  1. அற்புதமான கவிதை
    என்னையும் கொஞ்சம்
    பழைய நினைப்பில் கொண்டு நிறுத்தியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அற்புதம் கவிஞரே -தொடருட்டும் பயணம்--சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  3. உங்களின் 'ஜனனல்ஓரத்து நிலா'வை ரசிக்க காத்திருக்கேன் :)

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் முயற்சியதால் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் .வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
  5. நேர்காணலுக்கு வாழ்த்துக்கள். புன்னகைக்குவியலை ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கவிதை வரிகள் மிக அருமை...தம்பி ரூபன்..

    நேர்காணல் தங்களது பதில்கள் நேர்த்தியாக உள்ளன. மலேசிய முதன்மை நாளேடான மக்கள் ஓசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. கவிதை அற்புதம் ரூபன். வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை ரூபன் நேர்காணலுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா அருமையான முயற்சி. அழகாக வந்துள்ளது. மேலும் வளர என் வாழ்த்துக்கள் ரூபன்...! நன்றி ...!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் நலம்தானேசகோ கவிதைஅருமை புதுகையில்நடக்கவிருக்கும்
    பதிவர் திருவிழாவிற்கு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. நேர்காணல் அருமை. ஈழம் என்பதற்கு அர்த்தம் தெரிந்தேன். தங்களின் கவிதை நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
    த ம 6
    .

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் ரூபன்....
    தங்கள் நேர்காணல் அருமை....

    பதிலளிநீக்கு
  13. நேர்காணலுக்கு வாழ்த்துக்கள்! கவிதைக்கு இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்