வெள்ளி, 3 நவம்பர், 2017

அன்புள்ளவளே உனக்காக


என்னவளளே என்னவளளே எங்கு போகிறாய்
ஏங்கி தவிக்கிறேன் பல நாட்கள்
ஏழையாய் பிறந்ததனால்
எட்டிக் கூட பார்க்க மாட்டாயா.

பாசத்தின் இணைப்பால் என்
இதயமே சிறைப் பட்டு கிடக்கிறது
சிறைப்பட்ட இதயத்தை  புனிதப்படுத்த
எப்போது வருவாய்.
பல நாள் அன்புக்காய்
ஏங்கி தவிக்கும் உள்ளம் நான்

கடலில் கிடக்கும் மீன்கள் எல்லாம்
நீண்ட நாள் வாழ்வது கடினம்
எப்போது ஒரு நாள் 
மீனவனின் வலையில் சிக்குவது –போல
என்னவளளே நீ  ஒருநாள்
என் மனச்சிறையில்
சிக்குவாய் என்பதை நான் அறிவேன்

அகிலத்தில் காதலுக்கு மொழி கிடையாது
அகிலத்தின் புனித மொழியை
மெய்ப்பிக்கும் நாள் வரும்
அதுவரை உன் நினைவில்
என் நாள் கடக்கும்.

நன்றி
அன்புடன்
த.ரூபன்

9 கருத்துகள்:

  1. நிச்சயம் நிறைவேறும் நண்பரே..
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  2. காதல் ஏக்கம் துள்ளியமாய் பளிச்சிடுகிறது. சிறப்பு. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருக்கிறது ரூபன்..வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. காதல் மொழி
    அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  5. //..மீனவனின் வலையில் சிக்குவது –போல
    என்னவளளே நீ ஒருநாள்
    என் மனச்சிறையில்
    சிக்குவாய்..// Aaha!.....kaathal!..

    பதிலளிநீக்கு
  6. நீண்ட இடைவெளியின் பின் எழுதியிருக்கிறீங்க ரூபன், கவிதை அருமை.
    நோட்டிபிகேசனில்காட்டவில்லையே இது தமிழ்மணத்தில் பார்த்து வந்தேன்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்