திங்கள், 8 மே, 2017

நேரில் கண்ட தெய்வம்

அம்மா அம்மா உந்தன் விழிகள் ஈரம்
முதுமையின் கோலம் தெரியுதம்மா
நீ சிந்திய குருதியும் நீ சிந்திய கண்ணீரும்
நினைவுகள் வரும்போது நெஞ்சமெல்லாம்
அனலாக உருகுதம்மா.

இளமைக்கோலத்தில் நீ இருந்த போது.
ஏழ்மையாய் நீ இருந்தாய் அம்மா
இடிதாங்கி வலி தாங்கி உதிரத்தை பாலக்கி
என்னை ஊட்டி வளர்த்த தாயே.

அன்னம் ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
ஆயிரந்தான் தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்
ஆண்டவனிடம் தவமிருந்து உயிர்பிச்சை கேட்பேன்
ஆயிரம் வருடம் வாழவேண்டும் மென்று.என் அன்னை.

ஆண்டவனின் விதியோ. மரணம் வந்து அழைக்க.
கண்ணீர் துவைந்த விழிகளுடன்
ஏக்கம் கலந்த வாழ்வாக
என்நாளும் வாழ்கிறேன் தாயே.
உன் கல்லறை அருகில்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

21 கருத்துகள்:

  1. எத்தனை சொந்தம் வந்தாலும் அம்மா போலாகுமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்தாடலுக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. பாசத்தாய் உங்கள் கவிதையைக் கண்டு மனம் மகிழ்ந்திருப்பாள் :)

    பதிலளிநீக்கு
  3. உருக்கமான கவிதை. எனது ஆழ்ந்த இரங்கல். அம்மாவின் ஆன்மா அமைதி பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. "அன்னம் ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
    ஆயிரந்தான் தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்" என
    எங்கள் அன்னை எம்மோடு வாழ்வார்!

    பதிலளிநீக்கு
  5. அன்னையைப் போலொரு தெய்வமில்லை. அவரது அன்பை நினைத்து ஆயிரம் கவி பாடலாம். எல்லாவற்றையும்விட, சமூகத்தில் வளமோடும் ஆரோக்கியத்தோடும், குழந்தை குட்டிகளோடும் நல்வாழ்வு வாழ முனைந்தால் போதும், அந்த அன்னை எங்கிருந்தாலும் நம்மை வாழ்த்துவார்கள்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. அப்பழுக்கற்ற அன்பு தாயின் அன்பு. அதைத் துடைத்துப்போட முடியாது. ஆனால் அவர்கள் அல்லவா எம்மைவிட்டு கடமை முடிந்தது என்று தவிக்க விட்டுப் பொய் விடுகின்றார்கள். தாங்கும் இதயத்தை நாம் கொண்டிருப்பதே நாம் செய்ய வேண்டியது.

    பதிலளிநீக்கு
  7. அன்னையர் தின கவிதை அருமை===சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  8. என் தாயின் நினைவும் வந்து போனது
    மனம் உருகச் செய்யும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. தாயைப்போற்றிய கவி அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் அமைவதில்லை இதுபோன்ற உறவு.

    பதிலளிநீக்கு
  11. தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.ஆண்டுகள் பலவாயினும் சோகம் மாறாது.கண்ணீர்க் கவிதை

    பதிலளிநீக்கு
  12. அன்னைக்கு ஆயிரம் கொட்டிகொடுத்தாலும் தகும்,
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா14 மே, 2017 அன்று PM 8:57

    அன்பான அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான அன்னையார்போற்றும் கவிதை!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை! இனிய பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. அன்னை என்றாலே தியாகம்...அன்னை என்றாலே தெய்வம் ! அருமை ரூபன் !

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்