திங்கள், 9 நவம்பர், 2015

ஏக்கம் கலந்த தீபாவளி.


























வாழ்க்கையில் துன்பத்தை சுமந்து.
கண்ணீர் வாழ்க்கையில் வாழும்
ஏழைகள் எத்தனை
அவர்களின் ஏக்கங்கள் மனதை கீறல் இட
தீபாவளி பண்டிகையும்
கரை தொடும் காலமாய்
ஆர்ப்பரிக்கிறது.
வாழ்வில் வசந்தம் வருமா
என்ற ஏக்க உணர்வு.
செந்தணலாக எரிகிறது.
தீபாவளி பண்டிகையில்


மழைத்துளிகள் மின்னல் வெட்ட
ஈரங்கள் காயமுன் ரணங்களை
சுமந்த வர்ண வெடிகள்
வெடிப்போமா என்ற ஏக்க ததும்பல்
ஏழைகளின் மனக்கதவை.
ஒரு கனம் திறந்து பார்க்க வைக்கிறது.
அவர்களின் எதிர்பார்ப்புக்கள்
எல்லாம் நிறைவடையுமா?
இந்த தீபாவளில்.

கல்லரை மேனிகள் காற்றோடு கலந்த
சந்தனப் பேழைகள் கண்திறக்கும்
கார்த்திகை மாதத்தில்
பெற்றவளே. கண்ணீர்கடலில்
ஆர்ப்பரிக்க இனிக்குமா இந்த தீபாவளி்
புன்னகை பூக்கும் தீபங்கள்
எண்ணகள் ஈடேற்ற செய்யுமா தீபாவளி.


வாழ்விடம் இழந்த அனாதைகள்
வாழ்வை சீரளித்த பெண்கள்.
ரணம் கொண்ட பூமி பந்தத்தில்.
கயவர்களின் கைவரிசை.
முகம் காட்ட முடியாமல்
பெண்மையை சிதைத்து.
ஆணவம் கொண்ட நரகாசுரன்
அழித்த நாள் தீபாவளி என்றால்



மண்ணில் வாழும்
காம வெறி கொண்ட கயவர்கள்
எப்போது அழிக்கப்டுவர்
அப்போதுதான் இனிப்புடன்
கூடிய தித்திக்கும் தீபாவளி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடை பெற்ற கவிதைப்போட்டி முடிவுகள் ஊற்று வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்


17 கருத்துகள்:

  1. சரி தான் தம்பி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. கவிதை படிக்கும் பொழுது வேதனையே மிஞ்சுகிறது தீபாவளி வாழ்த்துகள் சொல்ல மனமில்லை எமக்கு
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஜி

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. அழிக்க வேண்டியவைகளை அழித்தால் அது இனிய தீபாவளிதான்.
    த ம 3

    பதிலளிநீக்கு
  6. மண்ணில் வாழும்
    காம வெறி கொண்ட கயவர்கள் எ
    ப்போது அழிக்கப்டுவர்
    அப்போதுதான் இனிப்புடன்
    கூடிய தித்திக்கும் தீபாவளி.
    உண்மைதான் நண்பரே

    தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரூபன் வாழ்கவளமுடன்

    காலத்தின் கரங்களில் எமக்கான தீர்ப்பு
    விடியும் என்ற நம்பிக்கையில் தூங்குவதுபோல்
    வாழவும் பழகிக் கொள்வோம்

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம் புரிகின்றது. ஏக்கம். என்றாலும் நேர்மறையாக வாழ்த்துவோம் என்று .....இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே.

    தங்கள் மனதின் ஏக்கங்கள் வார்த்தையின் வடிவில் உருப்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு வரிகளும் அருமை தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. புராணகதை தீபாவளி ,தீரா வலியைத் தான் தருகிறது :)

    பதிலளிநீக்கு
  13. அழிக்கப்பட வேண்டியவை அழியட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. மண்ணில் வாழும் காம வெறி கொண்ட கயவர்கள் எப்போது அழிக்கப்டுவர் அப்போதுதான் இனிப்புடன் கூடிய தித்திக்கும் தீபாவளி.
    சரி மிக மிக சரி

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்