வெள்ளி, 20 நவம்பர், 2015

தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...


நமது வலையுலக நண்பர். பாசமிகு அண்ணாவான திரு.கில்லர்ஜி அவர்கள் தொடக்கி வைத்த தொடர் பதிவால் வலையுலகம் மிக உச்சாகமாக உள்ளது.அந்த வகையில் கில்லர்ஜி அண்ணாவுக்கு எனது நன்றிகள்

பத்து ஆசைகளை கில்லர்ஜி அண்ணா அழகாக சொல்லியுள்ளார். அந்த தொடர் பதிவில் சிக்கிய சகோதரி தேன்மதுரத் தமிழ் என்ற வலைப்பூ சகோதரி என்னை தொடர் பதிவுக்கு அழைத்தார்கள் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள் நான் மட்டுமே அதில் எஞ்சியுள்ளேன். அந்தவகையில் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரி கிரேஸ்பிரதீபா அவர்களுக்கு எனது நன்றிகள்.

எனது பத்து ஆசைகள் இதோ தங்களின் பார்வைக்கு.

1.கடவுச் சீட்டு இல்லாமல் சுதந்திரமாக சகல நாடுகளுக்கும் செல்ல வேண்டும்
2.முகம் தெரியா எனது வலையுலக நண்பர்களை நேரில் சந்திக்க வேண்டும் அந்த நாள் எப்போது மலரும் என்ற ஏக்கம்.

3.போட்டி பொறமை இல்லாத மனிதம் வளர வேண்டும்.எல்லோரிடமும்.
4.அளவுக்கு அதிகமாக கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனும் வாழ்வற்று கிடக்கும் அடித்தட்டு மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

5.நடிகர்கள் நடிக்கிறார்கள் அவர்களின் வாழ்வுக்காக. அந்த நடிகர்களின் பட விளம்பர படங்களுக்கு பாலினால் அபிசேகம் செய்யும் மூட நம்பிக்கையை நிறுத்த வேண்டும்.
6.இல்லாத உறவுகளுக்கு கொடுத்து உதவும் மனநலம் ஒவ்வொரு மனிதன் இடத்திலும் வளர வேண்டும்.

7.தமிழராக இருந்து அவர்கள் சந்திக்கும் தமிழருடன் தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை நிறுத்த வேண்டும்.தமிழன் என்றால் தமிழால் பேசுவோம….

8.வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு எமது தாய் மொழியை கற்றுகொடுக்க வேண்டும் பெற்றோர்கள்…
உதாரணத்துக்கு-சன்தொலைக்காட்சியில் சொல்லுங்கள் அண்ணா சொல்லுங்கள் இமான் அண்ணாச்சி நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ் வார்த்தை தெரியாமல் அல்லல்படும் பிள்ளைகள் எத்தனை பார்த்தவுடன் நெஞ்சம் துடிக்கிறது..இந்த நிலை மாறவேண்டும்.
9.பெற்ற தெய்வங்களை முதியோர் இல்லங்களில் விடாமல் அவர்கள் இறக்கும் வரை பெற்ற பிள்ளைகள் சுமக்கவேண்டும்.
10.எனது தேசம் எனது ஊர் என்ற நிலை உருவாகி.. சமூக சிந்தனை வளர வேண்டும்.
உதாரணத்துக்கு.-நாம் போகும் பாதையில் ஏதாவது பள்ளங்கள் இருந்தால் ஒரு நிமிடமாவாது செலவழித்து..மூட முடியும் என்றால் மண்ணால்  மூடிவிடலாம் இல்லாவிட்டால்  அபாயமான பகுதி என்று அடையாளபடுத்தி செல்லவேண்டும்.
தொடர்பதிவுக்கு எல்லோரையும் அழைத்து விட்டார்கள் அதனால் யாரையும் அழைக்கவில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

23 கருத்துகள்:

  1. =====================================================================

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ===========================================================================


    எல்லாமே நல்ல ஆசைகள் ரூபன்!
    தம +1

    பதிலளிநீக்கு
  2. பத்து ஆசைகளும் நிறைவேறும் காலத்தை தொட்டுக்கொண்டிருக்கிறோம் , இது வலைப்பூ இணையத்தால் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது ஆங்காங்கே,,, பேஸ்புக்,ட்விட்டர், வலைப்பதிவர் சந்திப்புகள். பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை பரிந்துரைக்குமாறு பல்வேறு அலோசனைகள். நடிகர்கள் மீதான அதீத மோகத்தை விவாதித்தல். என நீண்டுக்கொண்டே போகிறது . விரைவில் பத்து ஆசைகளை பக்கத்தில் பெறுவீர்கள். வாழ்த்துக்கள் தோழர்!

    பதிலளிநீக்கு
  3. ஆசைகள் நிறைவேற வழ்த்துகள்சகோ.

    பதிலளிநீக்கு
  4. ஆசைகள் பத்து ,அத்தனையும் முத்து:)

    பதிலளிநீக்கு
  5. ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிறைவேறாத ஆசைகள் ஒவ்வொன்றுக்கும் கில்லர்ஜி 10,000 பொன் பரிசு தருவார்.
    ஆசைகள் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  6. எல்லா ஆசைகளும் நனவாகட்டும்...
    அருமையான ஆசைகள்...

    பதிலளிநீக்கு
  7. கற்பனை நிஜமாக பிரார்த்திக்கின்றேன் .

    பதிலளிநீக்கு
  8. பத்து அவை அனைத்தும் நல் முத்து
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. அருமையான ஆசைகள் தம்பி... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் ஆசைகள் பெரும்பாலும் நியாயமானவையே. அவை நிறைவேற வாழ்த்துக்கள். கில்லர்ஜி அழைத்திருந்தார். நான் முயன்றும் இதுவரை முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் நண்பரே அத்தனையும் பொதுநலமான அருமையான ஆசைகள்.

    கடவுச்சீட்டு இல்லாமல் எல்லா நாடுகளுக்கும் போகும் உரிமை இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு மட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்னையும் அவரின் நிலைக்கு உயர்த்த ஆசைப்படுகின்றீர்கள் நன்றி ஹி...ஹி..ஹி..

    மேலும் வானூர்தியில் பறக்கும் நேரம் பிறசவிக்கும் குழந்தைகளுக்கும் இந்த உரிமை உண்டு

    ஏழாவதும், எட்டாவதும் மிகவும் சிறந்த ஆசைகள் நடக்கும் என்று நம்புவோம்
    ஒன்பதாவது அதனினும் சிறப்பு வாழ்த்துகள்

    வலைப்பூ நண்பர்களை சந்திக்க ஆசைப்படுகின்றீர்கள் அடுத்த வலைப்பதிவர் மாநாடு மலேசியாவில்தான் கவலை வேண்டாம்

    பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றிகள் கோடி
    தமிழ் மணம் 5

    நேற்றே முதல் நபராக படித்து விட்டேன் கருத்துரை இடமிடியாத சூழல் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  12. அருமையான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. // 1.கடவுச் சீட்டு இல்லாமல் சுதந்திரமாக சகல நாடுகளுக்கும் செல்ல வேண்டும் //

    என்ற உங்களது ஆசையில், “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ சித்தாந்தம் எதிரொலிக்கிறது. தமிழ், தமிழன் என்ற உணர்வோடு கூடிய, சமூகநலம் சார்ந்த உங்களது ஆசைகள் நிறைவேற வேண்டும். கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. நியாயமான ஆசைகள் என்பதால் அனைத்தும் நிறைவேற வேண்டும் என நானும் ஆசைப்படுகின்றேன்!

    பதிலளிநீக்கு

  15. ஆசைகள் நிஜமாக வேண்டுமென்பதே எனது ஆசையும். நல்ல எண்ணங்கள் மெய்படும்.

    பதிலளிநீக்கு
  16. ரூபனின் ஆசைகளில் சமுதாயம் மீதான கோபமும் ஆதங்கமும் தெரிகிறது...!

    பதிலளிநீக்கு
  17. அன்றே வாசித்துவிட்டேன் சகோ, பின்னூட்டம் இடும் முன்னர் ஏதோ அழைப்பு வர அப்படியே மறந்துவிட்டேன் ...

    அருமையான ஆசைகள் சகோ, நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  18. ரூபன் தம்பி தங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறிட வேண்டும்...தங்கள் எண்ணங்கள் மட்டுமல்ல எல்லாருடைய எண்ணங்களும்....

    அதுவும் இறுதியில் சொல்லியிருக்கும் உங்கள் ஆசை ...அட! அருமை!

    பதிலளிநீக்கு
  19. நிச்சயம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் ,,அத்தைனையும் முத்துக்கள் வாழ்த்துக்கள்
    சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்