வியாழன், 26 ஜூன், 2014

சிறகடிக்கும் நினைவலைகள்-6



தேசம் எரிகிறது மகனே.
என் தேகம் எரிகிறது
என் நினைவும் அலைகிறது
என் நெஞ்சும் எரிகிறது
நேசமது காட்டிய தேசத்தில்
வேசமது ஆடுகிறது
அதுகளையும் காலம் எப்போது
அது வரை காத்திருப்போம் மகனே.

அன்று வீசிய குண்டில் எரிந்தது தேசம்
அன்று கருகி மாண்டது சொந்தங்கள்.
பாலுட்டி வளர்த் அன்னையின்
முலை பாதிபாதியாய் சிதறியதும் அன்று
சிதறிய முலையில் வடிந்த உதிரத்தை
பசிக்கு அழுத பாலகன் பால் என்று பருகியதும் அன்று.
அன்று வந்தது கண்ணீர் சிந்தினோம்
இன்று வந்தால் என்ன செய்வோம்??

உதிரத்தின் மணம் வீசும் திசை எங்கும்
உடல்களும் அவையங்களும் சிதறிக்கிடந்தது.
ஊன்று கோல் தடியுடன் ஊன்றி நடந்த தாத்தாவை
கழுகுகள் நரிகள் அங்கம் அங்கமாக
சுவை ததும்ப புசிக்கின்ற காட்சிகளும்.
அன்று தொலைக்காட்சிகளிலும்
பத்திரிகைகளிலும் கலர் படங்களாக
வருவதை பார்க்கும் போது
கண்கள் கண்ணீர் வடிந்தது மகனே.
சோங்கள் சுமையாக  என்
நெஞ்சில் வந்தாடுது......


தொடரும்........

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
  
  




 

22 கருத்துகள்:

  1. வலிகள் இங்கே கவிதையாய் உருவெடுக்கப்பட்டுள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரன்

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அன்று வீசிய குண்டில் எரிந்தது தேசம்
    அன்று கருகி மாண்டது சொந்தங்கள்.
    பாலுட்டி வளர்த் அன்னையின்
    முலை பாதிபாதியாய் சிதறியதும் அன்று
    சிதறிய முலையில் வடிந்த உதிரத்தை
    இது போன்ற கொடுமைக்களை படித்து படித்து காப்புக்காயத்து போய்விட்டது மனசு:(( என்ன சொல்ல :( தம 2

    பதிலளிநீக்கு
  3. வலி நிறைந்த வரிகள்.... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நின்றாடும் துயரம் அங்கு
    நெஞ்சை வருத்திட
    நேசக் கரங்களின்றி
    நிம்மதி இழந்திடும் வாழ்வு நிலையாதழியும்!
    அருமை அருமை வலியுடன் கூடிய விபரமான கவிதை! வாழ்த்துக்கள் ரூபன்...!

    பதிலளிநீக்கு
  5. இந்த கொடுமைக்கு முடிவு கட்ட நம்பிக்கை மின்னலாய் இன்று ...ஐ நா சபை குழு மனித உரிமை மீறலை விசாரிக்கப் போகிறதாம் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. வலி எதிரொலிக்கும் கவிதை! தங்கள் நினைவலைகளின் சோகம் தீர வழி பிறக்கும் தம்பி! என்னதான் வழி பிறந்தாலும், இறந்தவர்களை மீட்க முடியாதுதான்!

    அன்று வீசிய குண்டில் எரிந்தது தேசம்
    அன்று கருகி மாண்டது சொந்தங்கள்.
    பாலுட்டி வளர்த் அன்னையின்
    முலை பாதிபாதியாய் சிதறியதும் அன்று
    சிதறிய முலையில் வடிந்த உதிரத்தை
    பசிக்கு அழுத பாலகன் பால் என்று பருகியதும் அன்று.//

    இது போன்று எத்தனை குழந்தைகள், எத்தனை தாய்கள்!!! உதிரமும், சோகமும் நிறைந்த உண்மைக் கதைகள்! நம்புவோம் விடியல் வருமென்று!

    பதிலளிநீக்கு
  7. வலி நிறைந்த நினைவுகள்..கொடூரத்தின் கொடுமை..
    த.ம.5

    பதிலளிநீக்கு
  8. துயர் புரிகிறது கவிதை வரிகளிலே கலங்காதே எம் சகோதரனே
    விரைவில் இக் காலமும் மாறும் அதுவரைக் காத்திருப்போம் .

    பதிலளிநீக்கு

  9. சோகங்கள் மறைந்து வாழ்வில் வசந்தம் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.

    உள்ளத்தை உலுக்கிய கவிதை.

    பதிலளிநீக்கு
  10. வலிகள் நிறைந்த கவிதை வரிகள்...
    வாசிக்க உள்ளம் கனத்துப் போனது -
    வசந்த காலம் திரும்பும்...
    இறைவனை பிரார்த்தித்து இருப்போம்.

    பதிலளிநீக்கு
  11. மனம் வலிக்கிறது,,,, நண்பரே.. இந்தபதிவிற்க்கு வந்திருக்ககூடாதோ ? எனத்தோன்றிற்று.. வேதனை.. இந்த இழப்பிற்கு ஈடேது ? இனியெனும் நடவாதிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வலிகள் நிறைந்த வரிகளைப் படிக்கும்போது கண்கள் கண்ணீரால் நிறைந்தது மனமோ சோகத்தால் கனத்தது. உண்மையை எதிர்கொள்ள திடமான மனம் வேண்டும் காலம் மாறும் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  13. துயரம் பகிரும்
    உணர்வுக் கவிதை

    பதிலளிநீக்கு
  14. வலிகளையும் வேதனைகளையும் வரிகளாய் ஆக்கினீர் மாளா துயரத்தில் மனம் ஆழ்கிறது. அழகிய வடிவாக்கம் வாழ்த்துக்கள் மேலும் தொடர.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள ரூபன்

    வணக்கம். வலிக்கிறது. ஆறாத புண்ணில் விழுந்துவிட்ட நெருப்புத் துண்டைப்போல.

    பதிலளிநீக்கு
  16. வேதனையை வெளிக்காட்டும் பதிவு

    பதிலளிநீக்கு
  17. சோகங்களை தாங்கள் சொற்களாக ஆக்கித் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி. பகிர்வதால் வேதனை குறையுமல்லவா?

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்