புதன், 2 ஜூலை, 2014

நீ நெஞ்சில் தந்த காயங்கள்





 அன்பான உறவுவைத் தேடி தேடி
வாழ்க்கை நீண்டு போனது
காதல் சுகங்கள் சுமையேற
சோர்ந்து போனது உள்ளக்கிடக்கை
அவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்
திசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை
சோகங்களைத் தரும் காதலை விட
அவளிடம் இருந்துவரும் அழைப்பே
என் காதலுக்கு ஒரு சுகம் தரும்


அவளிடம் இருந்து வந்த கடிதங்கள்
என் செஞ்சில் ஒரு இன்னிசை
புயல் யுத்தம் செய்தது.
சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
வானத்தில் பறக்கச்சொன்னது.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா…


தாயின் வயிற்றில்பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
சாகும் வரை காதல் என்ற உறவே
பிரியாமல் எப்போதும் நிலைத்திருக்கும்
நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
என்னுள் விதைத்து விட்டாய்
நாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்
நான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்
அது உனக்கு புரியுமடி.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப மீண்டும் பகிரப்படுகிறது. wordpress.com விட மனமில்லை... உறவுகளே அதனால் அங்கு பகிர்ந்தேன்

33 கருத்துகள்:

  1. தலைப்பில் சொடுக்கியும் கவிதை வரவில்லையே... எனக்கு மட்டும் தானா இந்தப் பிரச்சினை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. //நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
    ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
    என்னுள் விதைத்து விட்டாய்
    நாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்
    நான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்
    அது உனக்கு புரியுமடி.// -

    அன்பு காதலாய் கசிந்து...
    பிரிவு அன்பாய் நின்று....
    மனம் என்றும் வாழ்த்துமடி...
    பெண்ணே நீ வாழ்க...!

    கவிதையிலே உங்களுக்கு கருத்திட்டேன். வாழ்த்துக்கள் ரூபன். நல்ல கவிதை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி

      வருகைக்கும் கருத்தக்கும் கவிதந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. பதில்கள்
    1. நண்பர் ரூபனுக்கு முதல்முறை தநைப்பு மட்டுமே இருந்தது கவிதை வரவில்லை ஆகவே கவிதை எங்கே எனக்கேட்டிருந்தேன்....

      நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
      ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
      என்னுள் விதைத்து விட்டாய்

      மனக்காயத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது,,,

      நீக்கு
    2. வணக்கம்
      அண்ணா.

      கேட்டீங்கள் ஒரு கேள்வி நான் உடனடியாக போட்டு விட்டேன் கவிதையை வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. //யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
    அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
    ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா…//

    நிச்சயம் இருக்கத்தான் செய்யும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா

      வாசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. இந்தப் பதிவுக்கு நான் நேற்று இட்ட பின்னூட்டம் என்ன ஆனது? தாயன்பை விட உயர்ந்ததா காதல் என்று கேட்டிருந்தேனே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.
      தங்களின் வினாவுக்கு உடன் பதில் அளிக்க முடியாமல் போனது மன்னிகவும் வேலையின் நிமிர்த்தம்
      தாயன்பை விட உயர்ந்ததா காதல் ??என்று கேட்டிருந்தீர்கள்
      நிச்சயம் இல்லை தாய் அன்பு தெப்பிள்கொடியுடன் வரும் உறவு தாய்தான் நாம் முதல்கண்ட தெய்வம் தாய்யன்பை பற்றி எழுதப்போனால் ஒரு நாள் போதது. அந்த புனிதமான தெய்வத்தை காதலுக்கு நான் ஒப்பிட வில்லை. ஐயா. நாம் பிறக்கும் போதும் அம்மா என்றுதான் அழுகின்றோம் அதைப்போல யாரும் அடித்தாலும் அம்மா என்றுதான் அழுகின்றோம் தாயன்பு இதில்தெரிகிறது அந்த தெய்வத்தின் நாமம்.

      காதல் என்பது இடையில் வரும் உறவு அந்த உறவு சிலவேளையில் நிலைக்கும் அல்லது நிலைக்காமல் போகலாம் அப்படிப்படது காதல்

      சாகும்வரை காதல் என்ற உறவே நிலைத்திருக்கும் என்னும் வரிக்கு விளக்கம்?
      அதாவது ஒரு ஆண் ஒரு பெண்மீது காதல் வயப்பட்ட காலத்தில் இருந்து அந்த காதல் ஜோடி சாகும் வரை நிலைத்து நிக்கும் என்பதைதான் நான் சொல்லியுளேன்.ஐயா
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. வணக்கம்
      ஐயா.

      தாங்கள் கேட்ட வினாவுக்கான பதிலை தந்து விட்டேன் என்பதில் பார்த்து கருத்து கூறவிலை.. ஐயா என்னதான் ஆச்சு.??வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. காதல் உணர்வுகளை அழகாகப் பதிவு செய்தீர்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. சிட்டு குருவியின் சிறகை வேண்டி வானத்தில் பறக்கச் சொன்னது தனிமையான இடம் நோக்கி கடிதம் வாசிக்க. ஓகோ இப்படி எல்லாம் கூட நடந்ததா ம் ...ம் .....ம் அப்புறம் ...... ரசித்து சிரித்தேன் ரூபன்.
    தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அம்மா
      வாசிப்பும் அதில் கூறிய இரசனையை இரசித்து கருத்து எழுதி வாழ்த்திச்சென்றமைக்கு மிக்க நன்றி அம்மா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. காயங்கள் துன்பத்தைத் தந்தாலும் நினைவுகளாவது இனிக்கட்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா

      அழகான வரியில் அருமையான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. ''...இன்னிசை
    புயல் யுத்தம் செய்தது.
    சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
    வானத்தில் பறக்கச்சொன்னது....'''
    nanru...nanru,....பறக்கலாம்...பறக்கலாம்... மகிழ்வோடு.....
    சோகத்தோடு வேண்டாம்...
    வேதா. இலங்காதிலகம்.
    (எனது 1000 ஆயரமாம் பதிவு காண வாருங்கள்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. வணக்கம் ரூபன் !

    சாதல் அழைத்தும் சருகாகா உள்ளத்தில்
    காதல் உதிர்த்த கனவு !

    அழகான அருமையான பதிவு !

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      கவிஞர் சீராளன்(அண்ணா)

      கருத்துக்கூறி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. நல்லதொரு கவிதை !
    நெஞ்சறுக்கும் உணர்வு!!
    வாழ்த்துக்கள் கவிஞரே!
    உங்கள் பணி இன்னும் தொடரவேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.

      தங்களின் வருகையும் கண்டு உவகை கொண்டேன் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. ரூபன் தம்பி, அழகான காதல் உயிர்ப்புள்ள ஒரு கவிதை! இறுதி வரை இருப்பதுதானே உண்மையான காதல்! அருமையான ப்ரதிபலிப்பு! ரசித்தோம்!

    பதிவர் ஸ்ரீராம் அவர்கலது கேள்விக்குத் தங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா.
      கவிதையை படித்து அருமையாக கருத்துக்கு கூறிய தங்களுக்கு எனது நன்றிகள் பல...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு


  14. ‘உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.’ என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள் கவிஞரே! கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா
      என்கவிக்கு அழகான உவமை சொல்லிச்சென்ற தங்களுக்கு எனது நன்றிகள்

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. நாம் அனைவருமே வாழ்க்கையில் அனுபவித்த காதல் தருணங்களை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சாமானியன்..

      தங்களின் முதல் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. நண்பரே தங்களை வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன் வருக...

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்