புதன், 17 செப்டம்பர், 2025

தேயிலை வாழ்வின் தீராப் புலம்பல்

 


                 (அறுசீர் கலித்துறை – 10 செய்யுட்கள்)

  1. மழைதூறும் மேகங்கள் நெஞ்சில் விழுகின்ற
    கடுங்காற்று நேர்கள் கடலாகும் வாழ்வில்,
    கொழுந்தாகும் தேயிலை கொய்வோரின் பங்கும்
    உழைப்பாலே தங்கி உறைந்தது பூமி –
    விடியலே வருமோ இவர்க்கொரு நாளில்?

  2. மரச்செடி வீதியில் மார்பழிக்கும் கையை
    உதிரத்தில் தோய்ந்துகொள் உந்திகள் போல,
    கதவாகித் தள்ளிடும் காலங்களோடும்
    நடுநிசி தூக்கத்தில் நாணிகள் காண்பான்,
    பசுவாய்ப் பிழைக்கும் பழக்கமே யாமே.

  3. சுகமின்றி சாய்ந்தழி தோள்களில் வண்டி
    இழுத்திடும் பாரம் இருந்ததோ காதல்?
    வாடியும் பூக்கள் வறண்டுவீழ் கூழில்
    சாமானே ஆனது சாமீன் ஆசை,
    பரமனும் நோக்கி படர்ந்திடான் ஏன்?

  4. சுடுகாடு போல எரிகின்ற தொட்டில்
    உழந்தவர் பிள்ளைகள் உண்டியை நோக்க,
    சிரமங்கள் வேரான சின்னமாம் வாழ்க்கை,
    நெருப்போடு தள்ளிய நிலப்புழு போலும்,
    நரைகூந்தல் தேய்ந்ததும் நாடகம்தானே?

  5. மொழிக்கே இனிமை தந்தாளும் தமிழ்
    இழைக்கே அடிமை என்றாளோ யாரோ?
    எரிபொருள் போல எரிகின்ற நெஞ்சம்
    பரிகாசம் செய்த பசுங்கால நாடே,
    வெருட்டாதே மீண்டும் விடிகதிர் வேண்டும்.

  6. தேடாத பாசம்தான் தேய்ந்தது இன்று,
    நிலத்தேழை கண்ணீர் நிழலாக நின்று,
    மேடாகும் வானில் விழியாலே மட்டும்
    பதைப்பாகும் நினைவைப் பகிர்ந்திடும் யாரோ?
    கொடுப்போரே மாய்ந்து குழைந்தனர் தேவை.

  7. தாய்க்கொரு ஆசை – பிள்ளைக்கு கல்வி,
    வேளாண்மை இல்லை; விதை நனைந்து அழுதும்.
    தேயிலைப் பையனே தேர்ச்சி பெறினும்,
    ஒருநாளும் நகரும் ஒளிகாட்டும் நேரம்?
    மரபாகும் வலியே மறக்குமோ பின்பு?

  8. கூலிக்கு வந்தும் கொதிக்கும் மதிப்பில்
    எழுப்பிய தேசம் இசைக்கவே இல்லை.
    முகமூடி போடுவோர் மொத்தமும் பேரில்,
    உரிமையை வாங்கும் உரவுகள் யாரே?
    தனிமையே நம்மைத் தழுவிடும் போது.

  9. நிலத்தில் விழுந்து நினைவில் இருந்தும்
    பயிரில் மலராத பரிதாப வாழ்வு.
    பணிக்கே பிறந்தோம் பண்பென்ன கேட்கும்
    குறும்பாய்த் தாழ்ந்தும் குயில்பாடும் நாள்
    ஒருநாளும் வரும் என்று உறுதி உண்டோ?

  10. இழிவிலும் அழிவிலும் இன்பமே தேடும்
    தேயிலைத் தொழிலாளர் தேசத்தின் முள்.
    கழுவாத பாவங்கள் கண்ணீரில் நனையும்,
    எரிகின்ற நெஞ்சத்தில் எழிலொளி தேடிப்
    பதைத்தாலும் வாழ்வைப் பரிசளிக்குமோ

            நன்றி
         அன்புடன்
          த.ரூபன்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா-2023

 கடந்த 11.10.2023 ஆந் திகதியன்று தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்தின விழா அதிபர் திரு.ச.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக இப் பிரதேசத்தின் கல்வி வளமாகிய கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.ஜெயவதனன் அவர்கள் கலந்து  சிறப்பித்தார்.






நன்றி

-அன்புடன்-

கவிஞர்.த.ரூபன்

வெள்ளி, 17 டிசம்பர், 2021

உலகமே திரும்பிப் பார்




மண்ணில் மாந்தரைப்  படைத்த இறைவா.
பிறக்கும் போதே  என்னை
கருவில் அழித்திருக்கலாம்.
நான் என்ன பாவம் செய்தேன்
உலகமே! என்னை எள்ளி நகையாட

அரிய சிம்மாசனத்தில் நீ இருக்கிறாய்
அம்மா அப்பா செய்த பாவத்திற்கு
பாவப்பட்ட கைதியாய்-
வீதியோரம் சிறை வைக்காதே.

 

தாழ் போட்டுப் பூட்டிய  இரவு
கதிரவனின் ஒளி கண்டு
திரை  விலகுவது  போல.
என் வாழ்விலும்
ஒளி விளக்கு எப்போது?
இறைவா!......ஏக்கத்துடன்

மனம் விட்டு  என்
இதயத்தில் உள்ளதை
உயிர் வரியாய்த்  தருகிறேன்
தன்  நிறைவு  வளம் கொண்ட  நாடுகள்
 

மனித உதிரத்தைக் குடிக்க.
கந்தக  குண்டுகளை  பொதி  செய்ய
ஆயிரம் கோடிகள் செலவு
 
பூகோள  வையகத்தில்.
பூ ப்போல புன்னகைக்கும்
என்னைப்  போன்ற  அனாதைச்
சிறுவர்கள்  எத்தனை.
அவர்கள் வாழ்விலும்  இருளை  அகற்றி
பட்டினிச்சாவை  தடுத்திட
கோடிப்  பணத்தை  செலவிடுவாய்.

உலக நாடுகளே!.


அன்புடன்
கவிஞர் .ரூபன்.




செவ்வாய், 11 மே, 2021

வைகாசி மாத ஊற்று சஞ்சிகைக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.

 



வணக்கம்

உறவுகளே.

ஊற்று சஞ்சிகை சில மாதங்கள் இணைய வழி சஞ்சிகையாக வலம் வந்து பல ஆளுமை மிக்க எழுத்தாளர்களின் படைப்புடன்.
இம்மாதம் அச்சு வடிவில் பல்சுவை இதழாக ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் படைப்புக்ளுடன் ஒவ்வொரு மாதமும் வெளிவரும்.
படைப்புக்கள் அனுப்பும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்களின் படைப்புக்களை விரைந்து அனுப்பவும்.மின்னஞ்சல் வாயிலாக.

குறைந்த செலவில்.விளம்பரம் செய்யலாம்.(கலர்.வெள்ளை.)வர்ணங்களில்.

நன்றி.
ஊற்று சஞ்சிகை ஆசிரியர்
எழுத்தாளர்.கவிஞர்.த.ரூபன்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

பருத்திக் காட்டுப் பெண்ணே




என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
 
நடையழகில் நான் மயங்கி-நாணமெல்லாம்
மெய் தவற விட்டெனடி-செல்லமா.
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
சிதறுதடி உன் புன்னகை வதனமடி.
 
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே  நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
 
பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும்  முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.

-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன் 

சனி, 13 ஜூன், 2020

மனங்களில் நிறைந்தவனே.

எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு
நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே
சொந்த தமிழில் செந்தமிழ் பாடி
அகிலம் வாழும் தமிழர் மனங்களில்
நிறைந்த முழுமுதல் கவிஞரே.-நீ வாழ்க.

சில மணி நேரம் உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வின் இளவேனிக்காலங்கள்
இயல் இசை நாடகம் என்ற முக்கலையும்
வளர்க்கும் சங்கத் தமிழின் அவைச் சான்றோரே
உன் பேச்சு அகிலமெல்லாம்  இனிக்குதையா

அகவை நிறைவை ஆயிரம் உறவுகள் கூட்டி
அவனியில் வலம் வரும் உனக்கு
ஆயுள் முழுதும் அண்டவன் அருள் புரிவான்.
தமிழுக்காய் நீ வாழுகிறாய்
உன் புகழ் தரணி எங்கும் பூபாளம் பாடுதையா

ஆசானாய் கவிஞனாய் அவைபேச்சாளனாய்
ஏழைகளின் தோழனாய் மாந்தர்களின்
மனங்களில் நிறைந்தவனே.  
வாசு தேவன் நாமம் பெற்ற உன்னை.
அகவை நிறைவில் ஆயிரம் கவிஞர்களின்
வாழ்த்துக்கவிதையில் நனைய
இந்தச் சான்றோனும் வாழ்த்துகிறேன்.


நன்றி
அன்புடன்
த.ரூபன்

திங்கள், 23 செப்டம்பர், 2019

உதிரத்தில் வளர்ந்த மொழி



நற்தமிழே  நாவூறும் செந்தமிழே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள் பிறந்து  விட்டால்
கற்பனையாய்  தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளம் மெல்லாம் தேனூறும்

இணையத்தில் தமிழே
இணையற்ற உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே  மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெட்டு  மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய்  நீ  நின்று

பல வகை சொற்களும்
உன்னிலிருந்து மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது நம் மொழி
உதிரத்தில் பிறந்த மொழி
உள்ளத்தில்  வளரும் மொழி
ஆயிரம் வணக்கம் சொல்வோம்
அகிலத்தின் மொழியாய்.


-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்