திங்கள், 23 செப்டம்பர், 2019

உதிரத்தில் வளர்ந்த மொழி



நற்தமிழே  நாவூறும் செந்தமிழே
நாம் கற்கும்  பைந்தமிழே
இந்தனைக்கும் நீ வாழ
தரணியிலே உன் புகழும்.
கண்மணிகள் பிறந்து  விட்டால்
கற்பனையாய்  தாலாட்டும்
நம் தமிழின் செந்தமிழை
கேட்டாலே உள்ளம் மெல்லாம் தேனூறும்

இணையத்தில் தமிழே
இணையற்ற உன் புகழே
கோடி தமிழர்கள் உச்சரித்தால்
உன் சுவையே  மாறாது
பன்னிரெண்டு உயிரெழுத்தும்
பதினெட்டு  மெய்எழுத்தும்
ஆயுத எழுத்துமாய்
உயிர் மெய்யாய்  நீ  நின்று

பல வகை சொற்களும்
உன்னிலிருந்து மலர்கிறது.
உன் புகழே அகிலமெல்லாம்
இன்னிசை பாடுது தமிழே
ஆயிரம் மொழிகள் தோன்றியும்
அழியாமல் நிக்குது நம் மொழி
உதிரத்தில் பிறந்த மொழி
உள்ளத்தில்  வளரும் மொழி
ஆயிரம் வணக்கம் சொல்வோம்
அகிலத்தின் மொழியாய்.


-நன்றி-
-அன்புடன்-
த.ரூபன்

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நலமா? மிகவும் அழகான கவிதை. தமிழ் மொழிக்கு மகுடமாய் அணிவித்திருக்கும் அழகான கவிதை.

    /ஆயிரம் மொழிகள் தோன்றியும்
    அழியாமல் நிக்குது நம் மொழி
    உதிரத்தில் பிறந்த மொழி
    உள்ளத்தில் வளரும் மொழி
    ஆயிரம் வணக்கம் சொல்வோம்
    அகிலத்தின் மொழியாய்./

    ஆயிரம் மொழிகள் தோன்றியும், அழியாமல், நம் உதிரத்தின் உறவாக ஒன்றென கலந்த மொழி தமிழ் மொழி.

    நம் தமிழ் மொழிக்கு அருமையான கவிதையை வடித்தமைக்கு பாராட்டுக்கள். சிறப்பான பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. நீஈஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீங்க ரூபன்.. நல்வரவு...

    உண்மைதான் அழகிய மொழிபற்றி, அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  3. காவத்தையூர் சுதர்ஷனி பொன்னையா22 அக்டோபர், 2019 அன்று AM 1:14

    நாவூற சுவைத்தமிழ்க் கவிபடைத்த திருமலையூர் மைந்தனுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. காவத்தையூர் சுதர்ஷனி பொன்னையா22 அக்டோபர், 2019 அன்று AM 1:15

    நாவூற சுவைத்தமிழ்க் கவி படைத்திட்ட திருமலையூர் மைந்தனுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோ நலமா...
    தாய் மொழிக்கவிதை
    தாய் மொழிக்கான கவிதை

    அருமை சகோ

    பதிலளிநீக்கு
  6. புதிய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்