புதன், 11 ஏப்ரல், 2018
ஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
புதன், 14 பிப்ரவரி, 2018
ஞாபகங்கள்.
உன்னை
அணைத்து எடுத்தேன் பல காலம்
புன்னகைப்
பூவே புகுந்தது வாசம்
பூத்த பூ புதுவசந்தம் வீசியது.
மழைக்கால இருளில் மதி மயங்கும் போது.
ஒற்றை குடையுடன்
ஓடி ஒதுங்கிய
ஆலமரமும் தெருவோர
கடையும்
நமது ஞாபகத்தை
சொல்லுமல்லவா.
வேப்பமரத்து
பிள்ளையர் கோயிலில்
வேள்விகள் நடந்த
போது.
என் நெற்றியில்
நீ வைத்த சந்தனம்
இன்னும் பத்திரமாய்
இருக்குதடி.
ஒற்றை பாலத்தில்
நாம் நடந்த போது.
தாவித் தாவி என்னை
இறுக பிடித்த நேரம்
காலம் கடந்த
போதும்
கண்ணுக்குள்
நிழலாடுகிறது..
எனக்காக நீ
தந்த காதலர் தின
பரிசான கடிகாரம்.
செக்கன் முள்ளு
செக்கனுக்கு செக்கன்
துடிக்கும்
போது.
உன் நினைவுகள்
நெஞ்சோடு மோதுகிறது.
-நன்றி-
Labels:
கவிதைகள்,
நூல் வெளியீடுகள்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
வெள்ளி, 3 நவம்பர், 2017
அன்புள்ளவளே உனக்காக
என்னவளளே
என்னவளளே எங்கு போகிறாய்
ஏங்கி
தவிக்கிறேன் பல நாட்கள்
ஏழையாய்
பிறந்ததனால்
எட்டிக்
கூட பார்க்க மாட்டாயா.
பாசத்தின்
இணைப்பால் என்
இதயமே சிறைப்
பட்டு கிடக்கிறது
சிறைப்பட்ட
இதயத்தை புனிதப்படுத்த
எப்போது
வருவாய்.
பல நாள் அன்புக்காய்
ஏங்கி
தவிக்கும் உள்ளம் நான்
கடலில் கிடக்கும்
மீன்கள் எல்லாம்
நீண்ட
நாள் வாழ்வது கடினம்
எப்போது
ஒரு நாள்
மீனவனின்
வலையில் சிக்குவது –போல
என்னவளளே
நீ ஒருநாள்
என்
மனச்சிறையில்
சிக்குவாய்
என்பதை நான் அறிவேன்
அகிலத்தில்
காதலுக்கு மொழி கிடையாது
அகிலத்தின்
புனித மொழியை
மெய்ப்பிக்கும்
நாள் வரும்
அதுவரை உன்
நினைவில்
என் நாள் கடக்கும்.
நன்றி
அன்புடன்
த.ரூபன்
Labels:
கவிதைகள்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
வெள்ளி, 23 ஜூன், 2017
இழந்தது போது தமிழினமே!!
சுமைகள்
சுமந்த வாழ்வுக்கு.!
சுகங்கள்
தேடி தந்தார்கள்!
நம்
மூத்தோர்கள்.!
பெற்ற
சுதந்திரம்!
பெற்ற
உரிமையும் மறுக்கப்பட்டு!
வீதியோரங்களிலும்
நிழல் மரங்களிலும்!
நிம்மதி
இழந்த வாழ்வாக!
வாழ்கிறான்
தமிழர்கள்!
ஆயிரம் கட்சிகள்
ஆயிரம் கொடிகளும்!
ஆரவாரம் செய்ய!
சாதியும் மதமும்
இறுமாப்பு காட்டி!
ஏறுகிறான் சொற்ப
சிம்மாசனம்!
ஐந்து வருடங்கள்!
ஈழத்திலும்
வர்மாவிலும் தமிழனின்!
உயிர்கள் நயவஞ்சகர்களின்
கையில் துடிக்க!
மலாய மண்ணில்
தமிழன் உரிமை மறுக்கப்பட!
தமிழனின் எதிர்காலம்!
மரணக் குழியில்
புதைந்து கிடக்கிறது!
அவலங்கள் கண்டு
துடிக்காத!
தமிழ் தலைமைகள்!
இருந்தென்ன
இலாபம்.!
தமிழ் மக்களே!
பணத்துக்காக,!
அற்ப சுகத்துக்காக
உங்களின்!
உரிமையை விலை
பேசாதீர்கள்!
பொன்னான உரிமையை
மண்ணாக்காமல்!
எதிர்கால சந்ததியின்
வாழ்வுக்கு வழிவிட!
வரும் காலத்தில்
சிந்தித்து.
நம் உரிமையை
செலுத்துவோம்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Labels:
கவிதைகள்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
திங்கள், 8 மே, 2017
நேரில் கண்ட தெய்வம்
அம்மா அம்மா
உந்தன் விழிகள் ஈரம்
முதுமையின்
கோலம் தெரியுதம்மா
நீ சிந்திய
குருதியும் நீ சிந்திய கண்ணீரும்
நினைவுகள் வரும்போது
நெஞ்சமெல்லாம்
அனலாக உருகுதம்மா.
இளமைக்கோலத்தில்
நீ இருந்த போது.
ஏழ்மையாய் நீ
இருந்தாய் அம்மா
இடிதாங்கி வலி
தாங்கி உதிரத்தை பாலக்கி
என்னை ஊட்டி
வளர்த்த தாயே.
அன்னம்
ஊட்டியவள் அறிவுக் கண் திறந்தவள்
ஆயிரந்தான்
தவறுசெய்தாலும் அணைத்து எடுப்பவள்
ஆண்டவனிடம்
தவமிருந்து உயிர்பிச்சை கேட்பேன்
ஆயிரம்
வருடம் வாழவேண்டும் மென்று.என் அன்னை.
ஆண்டவனின் விதியோ.
மரணம் வந்து அழைக்க.
கண்ணீர் துவைந்த
விழிகளுடன்
ஏக்கம் கலந்த
வாழ்வாக
என்நாளும் வாழ்கிறேன்
தாயே.
உன் கல்லறை
அருகில்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Labels:
கவிதைகள்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
வெள்ளி, 14 ஏப்ரல், 2017
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 14-04-2017தொடக்கம்10-05-2017
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்…
மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
தலைப்பு-சித்திரை வெயில் வாட்டுதே...
போட்டியின் நெறிமுறைகள்.
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)
2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.
4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள்
(இலங்கை நேரப்படி ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்
9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
ootru2@gmail.com
முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- ootru2@gmail.com
முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது…
கிடைத்தவுடன் மின்னஞ்சல் செய்யவும்
-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்
-கவிஞர்.த.ரூபன்-
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
திங்கள், 3 ஏப்ரல், 2017
எல்லாம் உன் கற்பனையே.
என்
பஞ்சு மிட்டாயே என் பவளச் செவ்வாயே.
பத்து திங்கள்
சேர்ந்திருந்து பாதித்திங்கள் பிரிந்தேனடி.
பாவி
மகனை கை பிடித்து பாதிவழியில் நிக்கிறாய்.
பார்த்த
உன் பால்முகம் மாறவில்லை.
பாவையே!
உன் நினைவெல்லாம் பாலாறாய் ஓடுதடி.,…
வளையல்
போட்டஉன்கரம் வளையோசை கேட்க.
கோடி தவம்நானிருந்து
கோடைகாலம் காத்திருந்து.
நான் நட்டு
வைத்த மல்லிகையும்
நடுமுற்றத்தில் நிக்குதடி.
தோட்டத்து
மல்லிகையும் தோரணமாய் தொங்குதடி.
முடியழகில்
நீ சூட முடித்து வைக்க
யாருமில்லை.
என் அன்னக்கிளியழகி
என் அருமை சொல்லழகி
குரலோசை கேட்காமல்
குணமெல்லாம் மாறுதடி.
தொலைபேசி எடுத்திருந்தேன்
தொல்லைகளை தந்திருந்தேன்.
தொலை தூரம்
இருப்பதால் தொல்லைகளும் இல்லையடி.
மசமசத்த கைமணமும் மாறத சுவையும்
ஊசி மிளகாயும்
உள்ளேரெண்டு வெங்காயமும்
பழைய சோறும்
பழைய தயிரும்
கலையத்தில்
நீ எடுத்து காலையில நீ தந்தா
மாறாத உன் கைமணமும்
மனதளவில் நிக்குதடி.-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Labels:
கவிதைகள்,
நினைவலைகள்,
நூல் விமர்சனம்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




