திங்கள், 18 ஏப்ரல், 2016

அன்பு காட்டு மனிதா........


மரங்களை வேட்டையாடும் மனிதா.,..
மானிடனின் வாழ்வுக்கு ஆக்ஸிஜன்
கொடுப்பதும் மரந்தானே?
இயற்கையே காப்பவன் என்று.
இலை மறைவில் கூடுகட்டி
குடும்பமாய் வாழ்ந்த பறவை.
குஞ்சுகளை பொறித்து மகிழ்வாக வாழ்ந்த
அகில விருட்சம் காப்பவனை
ஏன் சிதைத்தாய் மனிதா?

 
மரத்தை துண்டு போடும் மனிதனே.
மனிதனையும் துண்டு போடுகிறான்
ஒரு கூட்டு பிள்ளைகள் நிலத்தில் அழுகிறது....
இந்த அழுகுரல் கேட்க வில்லையா.?
இலையாலே கூடுகாட்டி
இமைக்கும் பொழுதெல்லாம்
இமைகாத்தாளே அம்மா.
அலகினால் சீவி அழகு பார்த்த நாங்கள்
வீதியோரம் அழுகிறோம்.

 
மண்ணின் அழகை மனங்கொண்டு பார்க்க
நல்ல மனம் படைத்த மூதாதையர்
நட்டுவைத்த இயற்கையை
நம்மவன் சிதைக்கின்றான்-இன்று
மாட மாளிகைக்கு மகுடம் பதிக்க
அகில விருட்சத்தை சிதைக்கும் –மனிதா.
அதை நம்பி வாழும் பறவைகள் இடத்திலும்
அன்புகாட்டும் மனிதா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
17-4-2016 மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ்மலரில் வந்த கவிதை இதோ.

16 கருத்துகள்:

  1. #ஆக்ஸிஜன் கொடுப்பதும் மரந்தானே?#
    இந்த மர...இல்லை இல்லை . மட மனிதன் அதையும் மறந்தானே :)

    பதிலளிநீக்கு
  2. மனிதன் தன் சுயத்தை இழக்கின்றான் வேட்டையாடியே . அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே அருமையான கவி....
    மேலே புகைப்படம்
    நெஞ்சை சுடுகிறது....

    பதிலளிநீக்கு
  4. வேதனைதான் ...ஆக்சிஜன் கொடுக்கும் மரங்களையும் வெட்டுவது...சுயநலம் அறிவை மழுங்க அடிக்கிறது

    பதிலளிநீக்கு
  5. வேதனையான வரிகள் கவிஞரே மனிதம் மரித்து விட்டது

    பதிலளிநீக்கு
  6. உலகப் படைப்புக்கள் அனைத்தும் உயர்வானவையே. அழிக்க நினைப்பவர் அவற்றை ஆக்கிப் பார்க்கும் போதுதான் அதன் உன்னதம் புரியும் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை மனிதனின் சுயநலம் இயற்கை சமநிலையை பாதிக்கிறது. அரசாங்கம் மட்டுமல்லாமல் மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்

    பதிலளிநீக்கு
  8. சுயநல மனிதன் உலகை அழிக்காமல் விடமாட்டான்

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு
    உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்!
    எனவே,
    மரங்களை அழிப்பதை நிறுத்துவோம்!

    பதிலளிநீக்கு
  10. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்