புதன், 21 ஜனவரி, 2015

ஆராரோ பாடிடுவோம்

அலையோசை கேட்ட போது.
உன் குரலோசை கேட்டது.
உன் மடி மீது தவழத்தான்
தனியாத தாகமாய் எண்ணங்கள்
புயலாக எழுகிறது.
கண்ணாடி முன்னாடி நிற்கையில்
உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி.
தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில்.

 
தோப்போரம்  மானாட மயிலாட
தோகை யெல்லாம் விரித்தாட
உன் கரு மேக தோப்போரம்.
மல்லிகைப்பூ வாசனையில்
மதுவுண்டு களிக்குது. வண்டுகள்.
மதுவுண்டு களிக்கும் வண்டு போல.
நானும் உன் தலை முடியை
கோது காலம் எப்போது.

 
சிலகாலம் காதலித்து.
சிந்தை குளிர பேசினோம்
பல காலம் பிரிந்து வாழ்கிறேன்.
தணியாக சிறையறையில்.
மீண்டும் கரம் பிடித்து நடை பழக
சில காலம் காத்திருங்கள்.
நம் காதல் சாட்சியாம் ஆலமரத்தின் கீழ்
ஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிடுவோம்…


வணக்கம்
உறவுகளே.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டுநடை பெறும்உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது.. மீண்டும் காலம் நீடிக்கப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்.தயவு செய்து இப்படியான சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்... மீண்டும் வருவதில்லை...  உச்சாகத்துடன் தங்களின் படைப்புக்களை எழுதி அனுப்புங்கள்... கதை அனுப்ப வேண்டிய காலம்.31.01.2014. இரவு 12 மணிக்கு..(இந்திய நேரம்)

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

32 கருத்துகள்:

  1. பிரிவின் தாக்கம் சொல்லும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிகிறதோ
    தீர்க்குமும் ஏக்கம் விரைந்து !

    அருமை அருமை கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் ரூபன்...!

    பதிலளிநீக்கு
  3. காதலிக்கு தாலாட்டுப் பாடும் புதுக்காதலன். உங்கள் பிரிவின் ஏக்கம் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. விரைவில் இணைய ஆசிகள் அருமையான கவிதை ரூபன்

    பதிலளிநீக்கு
  4. ஏக்கம் விரைவில் தீரட்டும்.....
    காதல் கற்கண்டாய் இனிக்கட்டும்...
    பொங்கும் புது வாழ்வு...
    விரைந்து வந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  5. காதலிக்கான தாலாட்டுப்பாடலில் தவிப்பான வரிகள் அருமை.. பார்த்து, ரொம்பவே தூங்கிடப்போறாங்க அப்புறம் எப்படி,
    “மதுவுண்டு கழிக்கும் வண்டு போல.
    நானும் உன் தலை முடியை
    கொய்யும் காலம் எப்போது.?’ என்பதெல்லாம் நடக்க முடியும்?:)

    பதிலளிநீக்கு
  6. ஏக்கம் தந்த தாக்கம்!
    நல்ல சிந்தனை! சிறப்பு!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  7. அருமையான காதல் கவிதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. ஏக்கத்தின் தாகம் கவிதையில் நிறைவேறட்டும் எண்ணங்கள் விரைவில்

    தமிழ் மணம் 6
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  9. நிவவுகள் சில நேரங்களில் இன்பத்தையும் சில நேரங்களில் துன்பத்தையும் தருகிறது.
    கவிதை நன்று ரூபன்

    பதிலளிநீக்கு
  10. இணைய நண்பர்களின் சார்பில் நீங்களும் இணைந்து மகிழ வாழ்த்துகிறேன் !
    த ம 8

    பதிலளிநீக்கு
  11. ஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிட
    காலம் கனிந்து வருகிறதோ...

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. அடாடா, உள்ளுக்குள் இவ்வளவு ஏக்கத்தை வைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமையாக உள்ளது! ரூபன்!

    பதிலளிநீக்கு
  14. ஆராரோ பாடிட ஏங்கும் உள்ளத்து உணர்வு வரிகள் அருமை அருமை

    பதிலளிநீக்கு
  15. மீண்டும் கரம் பிடித்து நடை பழக
    ஆலமரத்தின் கீழ்
    ஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிட
    காலம் கனிந்து வரும் கவிஞரே!
    கவி சிறப்பு!

    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  17. 350 வார்த்தைகளுக்குள் கதை எழுதச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் எழுதுகிறேன்... 600 வார்த்தைக்கு மேல வருதே ரூபன்... எப்படிச் சுருக்குறதுன்னு தெரியலையே...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    அண்ணா.

    தகவலை கேட்டதும் மிக மிக மகிழ்ச்சி... சுருக்கும் அளவுக்கு சுருக்கவும்...எழுதியதை அனுப்புங்கள்.. பார்க்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  20. ஏக்கம் மிகுந்த வரிகள் தம்பி! தங்களது ஏக்கம் விரைவில் தீர வேண்டுகின்றோம்.

    பதிலளிநீக்கு
  21. அழகான் கவிதை.
    ஊரில் இருக்கிறேன், அதனால் மெதுவாய் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்