வியாழன், 27 நவம்பர், 2014

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)
 
அன்புள்ள
அம்மா- அப்பாவுக்கு
நலமா.

நான் நலம் தங்களின் நலம்  சகோதரங்களின் நலமறிய ஆவலாக உள்ளேன். எந்த வித துன்பமும் இல்லாமல் நலமுடன
 வாழ இறைவனை வேண்டுகிறேன்.

 பாலைவனக் காற்றில் என் உதிர நாளங்கள் கொதிக்கிறது. 
வேதனம் என்ற காசுக்காக  சுட்டெரிக்கும் வெயிலில்  துடியாய்துடிக்கும் புழுவாக துடிக்கிறேன்.
என் சகோதரங்களை நினைத்து நினைத்து.. என் இதயக் கதவுகள் துடியாய் துடிக்கிறது
வேலை தளத்துக்கு சென்றால் அம்மா ஊட்டிய  சாப்பாடும் அப்பா காட்டிய அன்பும் சகோதரம் காட்டிய உறவும்  என்னை கண் கலங்க வைக்கிறது. விதியோ சதியோ செய்யும் திருவிளையாடல் என்றோ நான் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். நாள்முழுதும்.

 தூங்கும்போதும் விழிக்கும் போது உறங்கும் போது உங்கள் நினைவுகள் கடலில் கடலை அடிப்பது போல ஆர்ப்பரிக்கும் ஓசை என்  மனக்கதவை திறக்கிறது. பாசமாக பழகிய எம் ஊ றவுகாரன்
இறந்தான் என்ற செய்தியை கேட்கும் போது வர முடியாமல்  நான் விமானத்தில் பறந்து வந்த திசையை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.துன்பம் என்ற சிலுவையை நான் 
தினம் தினம் வெளி நாட்டில் சுமந்து வாழ்கிறேன் கவலை வந்தால் நான் வாழும் வீட்டின் நாகு சுவர்கள்தான் எனக்கு சொந்தக்காரன்.

 கவலை வேண்டாம் அம்மா.  நான் வருவதற்கு இன்னும் ஒருவருடங்கள் உள்ளது என்னை நினைத்து நினைத்து அப்பவும் .அம்மாவும் ஏங்கி தவிப்பீர்கள் என்பது எனக்கு நன்கு புரியும்.. என்ன செய்வது கஸ்டம் என்ற துன்பம் நம்மை ஆட்டி படைத்து விட்டது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில காலம் அர பு தேசத்தில் உழைக்கிறேன்.
 என்னைப் போன்று பல உறவுகள் அரபு தேசத்தில் முகவரி தெரியாமல்உறவுகளின் முகம் தெரியாமல் பாலஆண்டுகள் வாழ்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் செய்த புண்ணியத்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..

நன்றி
அன்புடன்
மகன்( கண்ணன்)
 
 மகனின் மடல் வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள். மடலை பார்த்த பின்புதான் தெரிந்தது படுகிற துன்பத்தை.. அம்மாஅப்பா சகோதரங்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்
கண்ணன் அரபு தேசத்தில் ஒரு தமிழ்ப்பெண் மீது காதல் வயப்பட்டு காதல் மோகத்தில் ஆழ்ந்தான். இப்படியாக 6 மாதங்கள் தங்களின் காதல்  பரிணாம வளர்ச்சியடைந்து மகிழ்ச்சி கடலில் பொங்கினான் ஒரு நாள் கண்ணனுக்கும் கமலவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது என்னை நீ கவனிக்க வில்லை. உன்னோடு இருந்து என்ன பலன் என்று தகாத வார்த்தை பிரயோகம் தாறும் மாறுமாக திட்ட கண்ணன் அன்று இரவு தூங்கவில்லை காலையில் வேலைக்கு போகவுமில்லை.

 தனது ரூமில் நின்றான். பல தடவை சிந்தித்து சோகத்தால் துவண்ட கண்ணன் தனது ரூமில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்தான்..  காதல் என்ற நட்பு வட்டத்தில் சங்கமித்த கண்ணன் இந்த காதலே அவனுக்கு இயமான வந்து...  கண்ணனுக்கு நடந்த துயரத்தை  அவனது நண்பர்கள் வீட்டுக்கு சொன்னார்கள்  அவனது வீட்டில் அழுகை சப்பதம் ஒலித்தது... எல்லோரும்
துயரத்தில் ஆழ்ந்தார்கள். சில நாட்கள் கழித்து கண்ணனின் வீட்டுக்கு அவனது உடல் கொண்டுவரப்பட்டது. அவனது குடும்பமும் ஊர் உறவுகளும் சோகத்தில் வாடினார்கள்
பின்பு கண்ணன் வந்த சவப்பெட்டியை  திறந்து பார்த்தால் அவன் தூக்கு மாட்டிய கயிறும் அப்பாவும் அம்மாவும் மற்ற சகோதரங்களும் ஒன்றாக இருக்கின்ற  புகைப்படம் ஒன்றும் இருந்தது. என்ன செய்வது  கண்ணனைப் போன்று பல ஆசைகளுடன் வெளி நாடு சொல்லும் பலரது வாழ்க்கை இப்படித்தான் போகிறது.. நிறை வேறாத ஆசையாக.....


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

புதன், 19 நவம்பர், 2014

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை)

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை)

எழில் கொஞ்சும் வயலும் வயல் சார்ந்த மருத நிலம் கொண்ட அழகிய கிராமத்தில் பிறந்து வளந்தவன் அவனுக்கு அம்மா -முத்தாயி அப்பா - செல்லப்பா. தங்கை-நிலா. அக்கா-மாலா.தம்பி-முரளி என்று மிகவும் அழகிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன்தான் கண்ணன். மூத்த பிள்ளை.

சின்ன வயதில் அவனுடைய தந்தை அவனையும் மற்ற சகோதரங்களையும் மிக அருமையாக பள்ளிக்கு அனுப்பி படிக்கவைத்தார் என்ன செய்வது காஷ்டம் யாரை விட்டு வைத்தது.. கஷ்டம் என்ற துன்பம் வந்த வேளையில் கண்ணன் தனது பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய நிலை வந்து. தந்தையுடன் அவனும் கருங்கல் குவாரியில் கருங்கல் உடைப்பது தொழிலாக செய்து வந்தார்கள். இப்படியாக செய்து வரும் காலத்தில் கல் உடைக்கும் போது. தந்தையின் கண்ணில் கல் பட்டு கண் ஒன்று தெரியாமல் போய்விட்டது. முத்தாயி என்ன செய்வது என்று தெரியாமல் இறைவனை வேண்டி தனது மனக்குமுறலை கொட்டுகிறாள்.

கண்ணனின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கந்தசாமி அண்ணாவின் மகன் கட்டாரில் வேலை செய்கின்றான் கை நிறைய சம்பளம் அதை பார்த்தவுடன் கண்ணன் சொல்லுகிறான் அம்மா நம்மட கந்தசாமி மாவின் மகன் வெளி நாட்டில் உள்ளான் அவனிடம் ஒரு விசா கேட்டுப்பார்க்கிறேன் என்றான் என்னமகனே சொல்லுகிறாய் நீ அப்பாவும் இந்த நிலை அம்மாவும் இப்படி சகோதரங்கள் எல்லாரையும் விட்டுப்போட்டு எங்க போகப்போகப்போகிறாய் நீ இல்லா விட்டால் நான் செத்து விடுவேன் மகனே என்று. தாய்கண்ணில் கண்ணீர் ததும்பச் சொன்னால்.

சரி அம்மா என்று சொல்லி தாயை சமாதானப்படுத்தி அம்மா அப்பாவின் ஒரு கண்தான் போய்விட்டது சுகப்படும் வரை வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு கண்ணன் கல்குவாரி நோக்கி நகர்ந்தான் ஒரு நாளைக்கு எவ்வளவு கல்லு உடைக்கிறோம் மிஞ்சிப் போனால் 300 ரூபாய்தான் கிடைக்குது இப்ப உள்ள காலத்தில் பொருட்களின் விலை ஏற்றம் இவற்றை எல்லாம் பார்தால் கட்டுப்படியாகாது.இவற்றை எல்லாம் விட்டுப் போட்டு வெளிநாடுதான் போக வேண்டும் என்று தனியா கல்குவாரியில் இருந்தபடி யோசிக்கின்றான்.

ஆண்டவன் வழியால் கண்ணனுக்கு அவனின் கந்த சாமி மாமாவின் மகன் விசா அனுப்பினான் விசா வந்துவிட்டது 3நாட்களில் விமானம் ஏறுவதுதான் தாமதமாக இருந்து. தாயிடம்விசாவை காட்டுகிறான் தாயும் என்னசெய்வது என்று தெரியாமல் மகனின் கதைக்கு தலையாட்டுகிறாள் தாயானவள் எல்லோரிடமும் பணம் கேட்டால் கொடுக்கவில்லை உனக்கு ஒரு நாளைக்கு சாப்பிட வழியில்லை எவ்வளவு பணத்தை உமக்கு எப்படி தர முடியும் என்ற வினாவை தொடுத்தார்கள் தாய் இந்த விடயத்தை மகனிடம்சொல்ல வில்லை தாய் தனது கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி ஒரு நகைக் கடையில் அடகு வைத்து பணத்தை கொடுத்தாள் மகனும் வாங்கி கொண்டு வெளி நாடு புறப்பட்டான்.

கண்ணன் வெளி நாடு சென்று ஒருமாதம் கழிந்த பின்பு ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பினான் அத்தோடு கடிதம் ஒன்றையும் அனுப்பினான்.கடிதம் வருமாறு. அந்த கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் எல்லாம்படிக்கும் உள்ளங்களை ஒரு கனம் கண்ணீர் வரவைக்கும்......அதுரை காத்திருங்கள்

தொடரும்......................

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-