புதன், 19 நவம்பர், 2014

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை)

நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை)

எழில் கொஞ்சும் வயலும் வயல் சார்ந்த மருத நிலம் கொண்ட அழகிய கிராமத்தில் பிறந்து வளந்தவன் அவனுக்கு அம்மா -முத்தாயி அப்பா - செல்லப்பா. தங்கை-நிலா. அக்கா-மாலா.தம்பி-முரளி என்று மிகவும் அழகிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன்தான் கண்ணன். மூத்த பிள்ளை.

சின்ன வயதில் அவனுடைய தந்தை அவனையும் மற்ற சகோதரங்களையும் மிக அருமையாக பள்ளிக்கு அனுப்பி படிக்கவைத்தார் என்ன செய்வது காஷ்டம் யாரை விட்டு வைத்தது.. கஷ்டம் என்ற துன்பம் வந்த வேளையில் கண்ணன் தனது பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்த வேண்டிய நிலை வந்து. தந்தையுடன் அவனும் கருங்கல் குவாரியில் கருங்கல் உடைப்பது தொழிலாக செய்து வந்தார்கள். இப்படியாக செய்து வரும் காலத்தில் கல் உடைக்கும் போது. தந்தையின் கண்ணில் கல் பட்டு கண் ஒன்று தெரியாமல் போய்விட்டது. முத்தாயி என்ன செய்வது என்று தெரியாமல் இறைவனை வேண்டி தனது மனக்குமுறலை கொட்டுகிறாள்.

கண்ணனின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கந்தசாமி அண்ணாவின் மகன் கட்டாரில் வேலை செய்கின்றான் கை நிறைய சம்பளம் அதை பார்த்தவுடன் கண்ணன் சொல்லுகிறான் அம்மா நம்மட கந்தசாமி மாவின் மகன் வெளி நாட்டில் உள்ளான் அவனிடம் ஒரு விசா கேட்டுப்பார்க்கிறேன் என்றான் என்னமகனே சொல்லுகிறாய் நீ அப்பாவும் இந்த நிலை அம்மாவும் இப்படி சகோதரங்கள் எல்லாரையும் விட்டுப்போட்டு எங்க போகப்போகப்போகிறாய் நீ இல்லா விட்டால் நான் செத்து விடுவேன் மகனே என்று. தாய்கண்ணில் கண்ணீர் ததும்பச் சொன்னால்.

சரி அம்மா என்று சொல்லி தாயை சமாதானப்படுத்தி அம்மா அப்பாவின் ஒரு கண்தான் போய்விட்டது சுகப்படும் வரை வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு கண்ணன் கல்குவாரி நோக்கி நகர்ந்தான் ஒரு நாளைக்கு எவ்வளவு கல்லு உடைக்கிறோம் மிஞ்சிப் போனால் 300 ரூபாய்தான் கிடைக்குது இப்ப உள்ள காலத்தில் பொருட்களின் விலை ஏற்றம் இவற்றை எல்லாம் பார்தால் கட்டுப்படியாகாது.இவற்றை எல்லாம் விட்டுப் போட்டு வெளிநாடுதான் போக வேண்டும் என்று தனியா கல்குவாரியில் இருந்தபடி யோசிக்கின்றான்.

ஆண்டவன் வழியால் கண்ணனுக்கு அவனின் கந்த சாமி மாமாவின் மகன் விசா அனுப்பினான் விசா வந்துவிட்டது 3நாட்களில் விமானம் ஏறுவதுதான் தாமதமாக இருந்து. தாயிடம்விசாவை காட்டுகிறான் தாயும் என்னசெய்வது என்று தெரியாமல் மகனின் கதைக்கு தலையாட்டுகிறாள் தாயானவள் எல்லோரிடமும் பணம் கேட்டால் கொடுக்கவில்லை உனக்கு ஒரு நாளைக்கு சாப்பிட வழியில்லை எவ்வளவு பணத்தை உமக்கு எப்படி தர முடியும் என்ற வினாவை தொடுத்தார்கள் தாய் இந்த விடயத்தை மகனிடம்சொல்ல வில்லை தாய் தனது கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி ஒரு நகைக் கடையில் அடகு வைத்து பணத்தை கொடுத்தாள் மகனும் வாங்கி கொண்டு வெளி நாடு புறப்பட்டான்.

கண்ணன் வெளி நாடு சென்று ஒருமாதம் கழிந்த பின்பு ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பினான் அத்தோடு கடிதம் ஒன்றையும் அனுப்பினான்.கடிதம் வருமாறு. அந்த கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் எல்லாம்படிக்கும் உள்ளங்களை ஒரு கனம் கண்ணீர் வரவைக்கும்......அதுரை காத்திருங்கள்

தொடரும்......................

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

25 கருத்துகள்:

  1. காத்திருக்கிறேன், அடுத்த பதிவுக்கு.

    பதிலளிநீக்கு
  2. ஆவலுடன் இருக்கிறேன் அடுத்த பகுதியை...காண....

    பதிலளிநீக்கு
  3. சரியான இடத்தில் தொடரும் போட்டு ஆவலை அதிகரித்துவிட்டீர்கள் தம்பி! எப்போது அடுத்த பகுதி?!!!

    பதிலளிநீக்கு
  4. எதிர்பார்ப்பை அதிகரித்தது உங்கள் கதையின் கடைசி வரி

    பதிலளிநீக்கு
  5. மிகையான ஆவல் உள்ள இடத்தில் தொடரும்....என்ன செய்வது..? காத்திருக்கிறோம்

    தம. 4

    பதிலளிநீக்கு
  6. சிறப்பாக இருக்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. கண்ணீர் விடக் காத்திருக்கிறோம் :)
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. Eniya vaalththu.
    Vetha.Langathilakam

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கச் செய்யும்
    அழுத்தமான துவக்கம்
    தொடர்கிறோம்
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. சமூகக் கதையில் ஒரு திகில் காத்திருப்புக்கான புள்ளியை வைத்துள்ளீர்கள் . காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  11. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. விறுவிறுப்பாக படித்துக்கொண்டே வந்தேன். திடீரென தொடரும் என்று கூறிவிட்டீர்கள். தொடர்கிறோம், ஆவலோடு.

    பதிலளிநீக்கு
  13. அடுத்த வாரம் வரை காத்திருக்கிறோம். கடிதம் என்ன சொல்லிச்செல்கிறது என/

    பதிலளிநீக்கு
  14. கதையின் ஆரம்பமே மனதை வருந்தச் செய்கிறதே. கண்ணனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சீக்கிரமே இறைவன் அருள் புரியட்டும். மகிழ்ச்சி தேடி வந்து அந்தக் குடும்பத்தை ஆட்கொள்ளட்டும்.
    நல்ல துவக்கத்திற்குப் பாராட்டுக்கள் ரூபன்.
    எப்போது நீங்கள் ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறினீர்கள்? உங்களை நான் wordpress -இல் தேடிக் கொண்டிருக்கிறேன்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  16. ஆஹா நன்றாக வருகிறதே சிறு கதை அத்துடன் எதிர்பார்க்கும் வண்ணம் முடித்த விதமும் அருமை வாழ்த்துக்கள்....! ஆவலோடு எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவை தாமதத்திற்கு மன்னிக்கவும் . வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  17. அருமை வாழ்த்துக்கள்
    தொடர்க

    பதிலளிநீக்கு
  18. ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ரூபன் !

    சிறுகதை வேந்தன் செயல்வீர ரூபன்
    பெறுக வையத்தில் புகழ் !

    அடுத்த பதிவுக்கு ஆவலுடன் .........!

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. ஸமயத்துக்கு உதவுவது தாலியாகவே இருக்கிரது. பெண்,பொன் இரண்டும் கலந்தததனாலோ? கஷ்டகாலம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள அய்யா,

    வெளிநாடு சென்று உழைத்து துயரும் தன் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தவே தூர தேசம் செல்கிறார்கள். தன் மகனைவிட தாலி முக்கியமில்லை.... மஞ்சள் கயிறு போதுமென எண்ணிய தாய்!
    நன்று.

    பதிலளிநீக்கு
  22. விறு விறுப்புடன் செல்கிறது ,அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ---சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்