வியாழன், 2 ஜூலை, 2015

சருகான வாழ்க்கை.


பாசம் வைத்த அன்பான உறவை பிரிந்து
பரதேசி வாழ்க்கையாக போனது பலர் –வாழ்வு
ஊட்டி வளர்த்த அன்புத் தங்கையும்
கூடி வாழ்ந்த உடன் பிறப்புக்களையும்
பணம் என்னும் காகிதத்துக்காக
வாழ்வை தொலைத்தவர்கள் எத்தனை
அம்மாவோ அப்பாவோ உடன் பிறப்புக்கள்
மண்ணின் மடியில் சங்கமித்தாலும்

இறுதியாய் முகம் கூடப்பார்க்க முடியாத
கண்ணீர் கரைந்த வாழ்க்கையாக
சதா துன்பச்சிலுவையை சுமந்து- வாழ்கிறார்கள்
பணம் என்னும் துயரம் துரத்தினால்
அடுத்தவன் வீட்டில் வட்டிக்கு பணம் –வேண்டி
விமானம் ஏறி வெளிநாடு போனவர்கள்.
நெஞ்சில் அணைத்து தூக்கிய
புன்னகை செல்வங்களின் நினைவுகள்.

பாசம் காட்டி அரவணைத்த மனைவியின்
அன்பு நெருடல் வாட்டி வதைக்க - சிந்தனை சிதற.
எல்லாம் பொறுமை காத்துக்கொண்டு.
கனவு தேசத்தில் மாய புன்னகையுடன்-வாழ்கிறார்கள்.
உடல் அங்கு இருக்க உயிர் மட்டும்
சொந்த தேசத்தில் நிழலாடுகிறது.
எல்லாம் பணம் என்னும் –காகிதத்துக்காக….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

24 கருத்துகள்:

  1. கஷ்டம்தான். நெகிழ்ந்தேன் ரூபன்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே பணத்துக்காகத்தான். என்ன செய்வது? நிலைமை அவ்வாறு ஆகிவிட்டதே. நன்னாளை எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல வரிகள்...தம்பி!

    அதே சமயம்...பணம் என்பது மட்டுமல்ல காரணம் பலரும் தாயகத்தைப் பிரிந்து தூர தேசத்தில் வாழ்வது....தங்களைப் போன்றோர்.....மற்றும் தாயகத்தில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு வராமல் போவதால், வறுமை, தனது கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ள, தாயகத்தில் சில விருப்பங்கள்...ஆராய்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்ற முடியாமல் அவ்வாய்ப்புகள் தூர தேசத்தில் கிடைக்கப்பெற்றால் அதற்காகப் புலம் பெயர்தலும் இருக்கின்றது என்பது எமது தாழ்மையான கருத்து...

    பதிலளிநீக்கு
  4. சருகான வாழ்க்கையை உழைப்புதான் மெருகேற்றும் !

    பதிலளிநீக்கு
  5. கனவு தேசத்தில் மாய புன்னகையுடன்-வாழ்கிறார்கள். உடல் அங்கு இருக்க உயிர் மட்டும் சொந்த தேசத்தில் நிழலாடுகிறது. எல்லாம் பணம் என்னும் –காகிதத்துக்காக….

    உங்கள் உணர்வுகள் புரிகிறது. நம்பிக்கையுடன் உழையுங்கள் . நாளை வெற்றி நிச்சயம்

    பதிலளிநீக்கு
  6. பணம் மானங்கெட்டதென்றால் நாம் வாழும் வாழ்வும் அப்படித்தான்...

    நல்வாழ்வு அமையட்டும் உறவுகளுக்கு

    பதிலளிநீக்கு
  7. உண்மையை உரைக்கும் வேதனை வரிகள்! அருமை!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்,
    அது மட்டுமா?
    கடமையும் என்று கானல் வாழ்க்கை வாழ
    கண்கானா தேசத்தில் கண்ணீர் கோடுகளுடன்,
    தங்கள் கவி கலங்க செய்யும் மனதை,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அச்சடித்த காகிதத்தை அடுக்கி வைக்க
    முடியாது அல்லாடிப் போகிறது வாழ்வு
    எட்டிப்பிடிக்கவும் முடியாமல்
    முட்களாய் நாட்கள் நகர தூரமாய்போய்
    தொலைகிறது இனிய பொழுதுகள்.
    கடமை கண்ணெதிரே தோன்ற
    கவலையும் நடக்கிறது காரிருள் அகற்ற
    கை கூடும் என்றொரு கணிப்பு
    பிழைக்காதெனும் நினைப்பில்
    நடை பயில்வோம் .
    நன்றி ரூபன் ! எல்லாம் வெல்லலாம் dont worry ( All is well )அழகைக் சொன்னீர்கள் ஆதங்கத்தை. வாழ்க வளமுடன் ...!.

    பதிலளிநீக்கு
  10. யதார்த்தம்!திரைகடலோடியும் திரவியம் தேடித்தானே ஆக வேண்டியுள்ளது?

    பதிலளிநீக்கு
  11. உண்மை... உண்மை ரூபன்...
    எல்லாம் பணம் என்னும் காகிதத்திற்காகத்தான்...

    பதிலளிநீக்கு
  12. பொருள் வழிப் பிரிவு என்றுமே துயரம் தான் ரூபன்!

    பதிலளிநீக்கு
  13. //உடல் அங்கு இருக்க உயிர் மட்டும் சொந்த தேசத்தில் நிழலாடுகிறது.// வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசிப்பவர்களின் வலியை ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  14. உயிர் மட்டும் சொந்த தேசத்தில் நிழலாடுகிறது. எல்லாம் பணம் என்னும் –காகிதத்துக்காக….
    கவலை தீர இறையருள் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
  15. பணம் என்னும் காகிதாமே
    குணம் என்னும் குன்றேறி
    தினம் கும்பிடுவோர் எவருண்டு?-பிணம்
    திண்ணும் பணத்தின்பின் பலருண்டு?

    மனதை துன்பத்தில் உழல வைத்த நிகழ்வுகள்நினைக்கையிலே வேதனையே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம 10

    பதிலளிநீக்கு
  16. காகிதம் படுத்தும் பாடு இருக்கே சொல்லி மாளாது தான்...
    தம 11

    பதிலளிநீக்கு
  17. உயிர் சருகாய் சந்தையில் விற்பனை செய்கிறது உறவுச் சோலை..

    பதிலளிநீக்கு
  18. உண்மை. பணம் என்னும் மாயப் பிசாசு பல இதயங்களைக் கூட பிரித்து வைத்துப் பேயாட்டம் ஆடுகிறது

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்