வியாழன், 2 அக்டோபர், 2014

வீதியெங்கும் குழந்தையின் அவலக்குரல்......





குப்பைத் தொட்டிகள் இன்று

தாயின் புனித கருவறையாக மாறிவிட்டது.
தாயின் புனிதக் கருவறை என்று குப்பை
தொட்டிகளாகிவிட்டது.
காமச் சுகம் கண்ட பாதகத்தியால்
நடத்தைப் பிறல்வால்
சீர்கெட்டுப் போகிறது சமுகம்
விடைதெரியாமல் திக்குத் தடுமாறுகிறது.

 
கசங்கிய காகிதத்தை தூக்கி வீசுவது போல்.
என்னை ஏன் தூக்கி வீசினாய்
தெருவோரம் வரிசை வரிசையாய்
உள்ள குப்பைத் தொட்டிகளில்
என் போன்ற குழந்தையின் அழுகைச் சப்தம்
ஊர் ரெல்லாம் அவலக் குரலாக ஒலிக்கிறது
என்ன செய்தோம் தாயே.???
உன் மானம் போய்விடுமோ.???
அல்லது உன் முகவரி தெரிந்து விடும் என்றா


ஆமாம் மகனே ஆமாம்
உன்னை குப்பைத் தொட்டியில் வீசினேன்
இல்லை அம்மா.இல்லை
என்னை ஒரு அனாதை இல்லத்தின்
வாசல் படியில் போட்டிருந்தால்
நான் உயிர் பிழைத்திருப்பேன்
ஊர் அறிய உலகறிய முகவரி அறிய
என் தாய் யார் என்று சொல்லிருக்க மாட்டேன்


உனக்காக ஒரு எச்சரிக்கை.தாயே
உன்நடத்தை பிறல்வால் காமச் சுகம் கண்டு
இனியாவது ஒரு உன் வயிற்றில் இருந்து.
ஒரு குழந்தையை பிரசவித்தால்
குப்பைத் தொட்டியில் போட வேண்டாம்
அனாதை இல்லாத்தின் வாசல் படியில் போட்டுவிடு
உன்னை யார் என்று சொல்ல மாட்டான்
நான் உயிர் பிழைத்து வாழ்ந்திடுவான் தாயே

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

20 கருத்துகள்:

  1. //குப்பைத் தொட்டிகள் இன்று தாயின் புனித கருவறையாக மாறிவிட்டது.//

    மனதில் அறையும் வாசகம்! நிஜம் என்றும் மனதைக்கலங்க வைக்கும் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. தப்பு செய்தவள் தன் தப்பை மறைக்க குப்பைக் கூடையை தஞ்சமடைகிறாள்

    கவிதை அருமை====சரஸ்வதிராஜேந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. அறியா பிஞ்சுகளின் மூச்சு விடும் முன்னே முடிவாகிவிடுகிறது...

    கொடுமை..இன்றையநிலை ...

    மனம் கனக்கிறது.

    ஓட்டுப் பட்டையை காணவில்லையே... தம். 1 என போட...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. நெஞ்சை உருக்கும் வரிகளால் நல்லொதொரு அறிவுரையும் புக்கட்டியுள்ளீகள்
    சகோதரா வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  5. பாவம் பிஞ்சு நெஞ்சங்கள்.

    பதிலளிநீக்கு
  6. சமூகத்தின் அவலநிலை இன்று இப்படித்தான் இருக்கிறது நண்பரே,,, வெட்கித் தலைகுனிவதைத் தவிற வேறறியேன் இந்த தமிழன்.

    தமிழனும், தமிழச்சீயும் செய்த தவறு கண்டு.

    பதிலளிநீக்கு
  7. நெஞ்சுருக்கும் படமும் நெத்தியடி வரிகளும்!..

    பாவம் பிஞ்சுகள்!..

    சமூகச் சீர்கேட்டைக் கவிச் சாட்டை கொண்டு தாக்கினீர்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  8. தப்பை செய்தவள் இவள் .பரிதவிப்பது பிஞ்சுகளா ?அரக்கிகள் அழியட்டும் !

    பதிலளிநீக்கு
  9. படங்கள் மனதை உலுக்கி விட்டன!

    பாவம் பிஞ்சுகள்! தங்கள் கவிதை வரிகளும் நெஞ்சை பிசைகின்றன!

    இறுதி வரிகள் நச்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ரூபன் ! எங்க போயிற்று என் கருத்து நான் தான் 10 நிமிடத்தில் போட்டேனே ம் ம்....ம்... எலி ஏதாவது உலவுதாஎன்ன ஹா ஹா ...
    கலங்க வைக்கும் படமும் கவிதையும் விழிப்புணர்வு தரும் வகையில் அமைந்த கவிதையும் அருமை யாருக்கும் வர வேண்டாம் இந்த நிலமை. தொடர வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
  11. தேடற்கரிய படமும்
    படத்தின் மொழிபெயர்ப்பாக
    சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. இப்படியும் இருக்கிறார்களே என்று வேதனைப் படத்தான் முடிகிறது. இன்பம் இருவருக்கு துன்பம் மட்டும் ஒருவருக்கு. இந்த நிலைக்கு ஆளாக்கியவனும் பழிக்கப் பட வேண்டியவன்தான்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோ,
    உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

    பதிலளிநீக்கு
  14. கடவுளே படம் பார்க்க என்னமோ செய்யுது.. வேறு படம் போட்டிருக்கலாமோ.. கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  15. சமூகத்தில் நடக்கும் அவலத்தை அருமையான கவிதையாக்கி விட்டீர்கள்.
    ஏன் இப்படி மனம் கல்லானது?
    தாய்மை என்றால் கருணை அல்லவா!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்