அவளின் சங்குப் பல்லி ன்
சிரிப்பில் சிதையுண்டு
வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன்
அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில் குளிக்கும் போது –
கமகமத்த சீயக்காய் வாசனைத் திரவியம்
என் மூக்கில் நுகர்ந்த -போது
வஞ்சியவளின் மெய்யழகு என்னை-.வஞ்சிக்கவைத்தது.
மெல்லத்திறந்த வாயினால் மௌனம் கலந்த புன்னகை
ஏதோ ஒன்றின் அடையாளத்தின் அறிகுறி.
அப்போது இதயம் திறந்தது.
அவள் சிரிப்பு இதயத்தில் புகுந்தது.
வானில் பறக்கும் காற்றாடி போல
என்னவளின் நினைவில் பறந்து கொண்டு இருக்கிறேன்
காதலர் தினம் வருகிறது.
வருவாள் என்ற நம்பிக்கையில்
பூங்கா வனத்தில் ரோஜா மலருடன்
தனியாக காத்திருக்கேன்.........
-நன்றி--அன்புடன்- -ரூபன்- |
வியாழன், 13 பிப்ரவரி, 2014
என்னவளின் வருகைக்காக
Labels:
கவிதைகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மண் வாசனை மாறாத அந்த மங்கை விரைந்து வர என் இனிய
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரா :)
வணக்கம்
நீக்குமுதல் வருகையும் முதல் கருத்தும் கண்டு என் மனம் மிக மகிழ்ச்சியடைந்தது... நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசனை...
பதிலளிநீக்குசிறப்புக் கவிதை வெகு அருமை
பதிலளிநீக்குநிச்சயம் அவள் வருவாள்
கவிதைக்காகவும்,,,,,
tha.ma 1
பதிலளிநீக்குஆகா... அசத்தல் தம்பி..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
இதோ காதல் செய்...! காதல் செய்...!
http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html
வாழ்த்துக்கள் உங்களுக்கும் காதலர் தினத்துக்கும்
பதிலளிநீக்குகாதலர் தினம் வருகிறது.
பதிலளிநீக்குவருவாள் என்ற நம்பிக்கையில்
பூங்கா வனத்தில் றோஜா மலருடன்
தனியாக காத்திருக்கேன்.........//
மலரோடு தனியாக நில்லுங்கள் மகராணி கண்டிப்பாய் வருவார்கள்.
வாழ்த்துக்கள் ரூபன்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
எண்ணங்கள் வண்ணமாக
பதிலளிநீக்குஇன்பங்கள் பன்மடங்காய்
பெருகிட காத்திருப்பு கைகூட
காதலுடன் கன்னியவள்
கண் முன்னே தோன்றிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!.
காதல் இனிக்குதய்யா! அருமையான கவிதை! இதைப் படிக்க வேண்டியவர்கள் படித்தார்களா??!!!!!!!
பதிலளிநீக்குதங்களின் காதலி கண்டிப்பாக தங்களின் க பிடிக்க ஓடோடி வருவார்! காத்துக் கொண்டிருக்கிறாரே!
தங்களுக்கும் தங்கள்.......காதலிக்கும்...எங்கள் மனமார்ந்த காதல்ர்தின வாழ்த்துக்கள்!
த,ம.
அருமை
பதிலளிநீக்குகுத்தாலம் அருவியில் கண்ட அவளா
பதிலளிநீக்குவாயினால் மௌனம் கலந்த புன்னகையா
சங்குப் பல்லின் சிரிப்பு அழகா
அவள் - அந்த
அவளே தான் வருவாள்!
சிறந்த கற்பனை ஓட்டம்
நல்லெண்ண வெளிப்பாடு
சிறந்த கவிதை!
காத்திருப்பது நீங்கள் ,வாழ்த்துக்கள் எங்களுக்கா ?
பதிலளிநீக்குத ம 7
பூங்காவனத்தில் 'தனியாக' இருப்பதாகப் பொய் சொல்லலாமா இளம் நண்பரே? உங்களைப்போலவே இன்னும் நிறைய இளைஞர்கள் கையில் பூங்கொத்துக்களோடு ம் கனவுகளோடும் காத்திருப்பார்களே! (புதிய 'கவர்போட்டோ' மிக இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ? )
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குஐயா...
எல்லாம் மனதில் மலர்ந்த கற்பனை வரிகள் ஐயா..... உண்மைதான் நிறைய இளைஞர்கள் வாழ்வு இப்படித்தான் ஓடுகிறது.... மனதில் மகிழ்ச்சி புயல் வீசினால் 70 வயது தாத்தாக்கள் கூட இளமையாக இருப்பார்கள்.முதுமை வயதுக்கு போகவில்லை... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..(இளமையின் இரகசியம் பற்றி மின்னஞ்சல் செய்கிறேன் ஐயா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் காதல் கவிதைகளால் ... .. வர .. வர... காதல் இனிக்குதய்யா!
பதிலளிநீக்குதனியாக காத்திருக்கேன்....//ஆஹா நச்சு என்று கவிதையில் குருவே நீங்கள் தான்!ம்ம் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமை. வாழ்த்துகள் !
பதிலளிநீக்குகாதல் உணர்வுகளை அழகாக சொல்கிறது கவிதை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//அவளின் சங்குப் பல்லி ன்
பதிலளிநீக்குசிரிப்பில் சிதையுண்டு
வீட்டுக்கு ஒளியேற்ற
மின்மினி பூச்சியை தேடும்
தூக்கணாம் குருவி போல
அவளைத் தேடி தேடி அலைந்து திரிந்தேன் //
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்து அதன் அர்த்தத்தை எண்ணி ரசித்தேன் ரூபன்..... மிக்க அருமை !
-- நன்றி, எனது தளம் வலை சரத்தில் அரிமுகபடுதபட்டு இருந்தது உங்கள் மூலம் அறிந்து மகிழ்ந்தேன் --
அருமை......
பதிலளிநீக்குவிரைவில் வரட்டும் அந்த மங்கை....
Super. Did she come?
பதிலளிநீக்கு