சனி, 25 ஜனவரி, 2014

உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது


 

நீ தலையில் சூடிய ஒற்றை –இதழ்
றோஜாப்பூ என்னுடைய காகித –அறையில்
பொக்கிஷமாக என்னும் –இருக்கிறது
உன்நினைவுகள் அப்போது அப்போது-வரும்போது.
அதை இரசித்துக் கொண்டே இருப்பேன்

 

 

 

உன் வீட்டில் .இருந்து –நீ
வெளியே செல்லும் போது –உன்
காலில் கட்டிய கொழுசின் மணி ஒன்று
உன்னை அறியாமல் நீ நடந்த பாதையில்
விழுந்து கிடந்தது உன்னிடம் –சொல்லாமல்
அந்த கொழுசின் மணி ஒன்றை –இன்னும்
என்டைய மணி பேசியில்-இருக்கிறது
உன்நினைவு. ஓடி வரும் போது.
அதை பார்தாலே என்மனதுக்கு மகிழ்ச்சிதானே

 

 

பூங்காவன(ச்) சோலையில்-நிதமான
குளிர்த் தென்றல் வீசும் போது.
நீ என்னை வருடியபோது- உன் தலை முடி
என் தங்க சங்கிலியில் சிக்கியது.
அந்த தலைமுடியும் உன் -ஞபகமாய்
என் பொங்கிஷங்களில் ஒன்றாய்
தங்க சங்கிலியாக-இருக்கிறது

 

 

நீ தொடர் வண்டியில் செல்லும் போது.
நானும் அந்த தொடர் வண்டியில் -சென்றேன்
அந்த வேலையிலே. உன் -தாவணியின்
ஒரு பகுதி தொடர் வண்டியின்
கண்ணடியில் சிக்கியது.
அதை நீ விட்டு விட்டுச் சென்றாய்.
எல்லாப் பயணிகளும் இறங்கிய பின்.
அவர்கள் யாரும் அறிய வண்ணம்
உன் ஞாபகமாய் அந்த தவணியின் துண்டு
இன்னும் என்மனசிலும் என் ஜீன்ஸ் பைக்கட்டிலும்
உன் ஞாபகமாய் இருக்கு தடி

 

 

நான் உன் வீட்டுக்கு உன் அண்ணாவை பார்க்க வந்தேன்
ஆனால் அண்ணாவை பார்க்க வரவில்லை.
உன்னைத்தான் பார்க்க வந்தேன்.
நீ எழுதும் மேசையில் உன்னுடைய
கருமேக கூந்தலுக்கு கவலனாய்-இருக்கும்
கருமேக வண்ணன் அவன்தான் உன் தலையில்
குத்தும் பின் (கிளிப்)அதில் இரண்டை
உன்னை அறியாமல். நான் திருடினேன்
அதுவும் என் பொக்கிஷமாய் உன் நினைவை
தினம் தினம் சொல்லுமடி.

 

 

என்னுடைய நாள் குறிப்பு டயரியில்-கூட
உனக்காக நான் எழுதிய
முத்து மணியான கவிகள்- எல்லாம்
உன்னை பார்தபோது- நான் உனக்கு
காதலர் நாள் பரிசாக தந்தேன்
அதை நீ இன்மனதுடன் எடுத்துக்- கொண்டாய்
அப்போதே நான் நினைத்தேன்.
நீதான் எனக்கு உரியவள் என்று….

 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

6 கருத்துகள்:

  1. பொக்கிச வரிகள்…

    எத்தனை பொருட்கள் சேர்த்து வைத்துள்ளீர்கள்…? ஹிஹி…

    ரசித்தேன்…

    வாழ்த்துக்கள் தம்பி…

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ரூபன்!
    ஞாபகங்கள் நெஞ்சலையில் அலைமோத
    கெஞ்சிடுதோ கண்கள் தினம் காண
    கருகூந்தால் காவலனார் கருவண்ணன்
    உம்அருகிருக்க கவலை ஏனோ!

    நெகிழ வைத்தன வரிகள் ஒவ்வொன்றும்.
    நன்றி ! தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  3. நீங்க அவளுக்கு கொடுத்த கவிதையில் ..இந்த கவிதையும் இருக்கா ?
    இருந்தா ,திருட்டுப் பய பிள்ளைக்கு தண்டனை நிச்சயம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!! நண்பரே!!

    த. ம.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் இன்றுதான் உங்கள் தளத்துக்கு வந்தேன் சிறப்பாக வடிவமைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்