புதன், 3 ஜூன், 2015

மனிதா வீறு கொண்டு பொங்கி எழும்........

 
துயரங்கள் துரத்தி வர
துவண்டு அழுகிறது எம் சகோதரம்
மதங்கள் என்ற பெயரால்
மாய வித்தைகள் காட்டி
மனித குலத்தின் உயிர்களை
குடிக்கும் பிசாசுகள்
பர்மா தேசத்தில் பட்டினியின்
பிடியில் சாவின் வழிம்பில்
மரணத்தின் அகோர தாண்டவத்தில்
வாடுகிறது எம் சொந்தங்கள்.

சகலதையும் இழந்து
நடுக்கடலில் சரணகதி அடைந்திருக்கு
எம் சகோதரத்தவர்கள்.
வாழ்க்கை பற்றி சிந்திக்காத
எம் உறவுகள்..ஒரு கனமாவது சிந்தியுங்கள்
உலகத்தில் செய்யாத
குற்றத்தையா செய்தார்கள் இல்லை
அவர்களும் ஒரு மனிதர்கள்தார்கள்

காவியுடை தரித்த கயவஞ்சகர்கள்
பாலுக்கு அழும் பிஞ்சுகளை.
துடிக்க துடிக்க கொலை வெறி
கொண்ட பாதகர்கள் தூக்கி வீசினார்கள்.
உடமைகளை தலையிலும்
தோளிலும் சுமந்தவண்ணம்
உயிரை கையில் பிடித்த வண்ணம்
கூடுவிட்டு கூடுபாயும் குருவிபோல


தேசம் கடந்து நடுக்கடலில்
தத்தளிக்குது எம் உறவுகள்
மதம் என்பதற்கு அப்பால்
மனிதா மனிதம் மடிந்து விட்டதா.
பர்மாவில் கேட்கும் கதறல்
சப்தம் கேட்கவில்லையா
சர்வதேச சமுகமே.உன்
கண்ணுக்கு தெரியவில்லையா.
 
அன்பார்ந்த எம்உறவுளே.
மதம் இனம் சாதி என்ற
இறுமாப்பு கொள்ளாமல்
மனித நேயம் என்ற ஆயுதத்தை
கையில் எடுத்து அணிதிரல்வோம்..
அவர்கள் வாழ்விலும் விடியல் புலரட்டும்
மிஞ்சுகிற சின்ன பிஞ்சுகள்லாவது
நாளை விடியும் உலகை பார்க்கட்டும்
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த கவிதை மேகம்NEWS.COM தளத்தில் வெளியான கவிதை....

42 கருத்துகள்:

  1. காலம் மாறட்டும். கனவுகள் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. அருமை தம்பி...

    மனித நேயம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அணிதிரள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. தற்போதைய நிகழ்வுகளில் நாம் வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வினைக் கவிதையாக்கித் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. உண்மைதான்
    வீறு கொண்டுதான் எழ வேண்டும்..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. மதம் ஒரு அபின் என்றார் கார்ல் மார்க்ஸ் ,அந்த அபின் இன்னும் எவ்வளவு உயிர்களைக் காவு கொள்ளுமோ :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. ஆவி யழியுதிந்தக் காவியுடை தரித்திட்ட
    பாவிகளால் எம்மினம் ஐயகோ - பூவினில்
    எமக்கிங்கு யாரிட்ட சாபமோ தூங்காமல்
    சுமப்பதை பாருங்கள் இங்கு!

    வேதனை நிறைந்த விடயம் ரூபன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. //அன்பார்ந்த எம்உறவுளே. மதம் இனம் சாதி என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனித நேயம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அணிதிரல்வோம்.. அவர்கள் வாழ்விலும் விடியல் புலரட்டும் மிஞ்சுகிற சின்ன பிஞ்சுகள்லாவது நாளை விடியும் உலகை பார்க்கட்டும்.//

    அருமையான வரிகள். அடுத்த தலைமுறையாவது இப்படி வரட்டும்.

    தங்கள் தளத்தில் இணைந்துள்ளேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. அன்பார்ந்த எம்உறவுளே. மதம் இனம் சாதி என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனித நேயம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அணிதிரல்வோம்//

    மனித நேயம் மலிந்து வருகிறது சகோ...வாழ்வு விடியட்டும்...தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. படத்துடன் கூடிய உணர்வுபூர்வமானக் கவிதை
    உலுக்கிப்போட்டது
    என்று நம் மனம் மாற்றம் கொள்ளும் ?
    ஜாதி மத மடமைகளைக் கொல்லும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. காலம் மாறவும் கனவுகள் நனவாகவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம் ரூபன்

    பதிலளிநீக்கு
  11. வேதனை சுமந்த வரிகள்.நல்லதே இனியாவது நடக்க இறை அருள் புரியட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. கண்ணீரே மையாக கவிதை கண்டேன்!
    காலம்வரும் காத்திருப்பீர்! உண்மை விண்டேன்
    தண்ணீராய் ஈழத்தில் இரத்தம் ஓட
    தலைவிரித்து சிங்களமாம் பேய்கள் ஆட
    மண்ணீரம் ஆனதனை மறக்கப் போமோ
    மாஉலகம் உள்ளவரை மறையா தாமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. மிஞ்சுகிற சின்ன பிஞ்சுகள்லாவது நாளை விடியும் உலகை பார்க்கட்டும்
    ஆம். உண்மைதான். கவிதை அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. கவி மிகவும் வேதனையாக இருக்கிறது நண்பரே.... உலகம் முழுவதுமே மனிதநேயம் செத்துக்கொண்டு இருக்கிறது என்றுதான் மாற்றம் வருமோ...

    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. கவிதையை படிக்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. காலம் என்று தான் மாறுமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. மனித நேயம் ஏன் இப்படி காணாமல் போகிறது தெரியவில்லையே சகோ :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. மனிதா வீறு கொண்டு பொங்கி எழும்.
    மனிதா மனிதம் மடிந்து விட்டதா? பர்மாவில் கேட்கும் கதறல்
    பாரதத்தில் கேட்கிறதா?
    செவி மடுக்க வேண்டும்
    மனிதத்தின் புனிதம் காக்கப் பட வேண்டும்
    கவி உணர்ச்சி கரை புரண்டுஓடட்டும்!
    பாவிகள் மிரண்டு போகட்டும்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. இலங்கையிலும் சரி, பர்மாவிலும் சரி, தமிழர்களை இன அழிப்பு செய்பவர்கள் புத்தமதத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்களே! புத்தமதம் இந்தியாவில் தோன்றிய மதம் என்றாலும் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் புத்தம் என்பது வன்முறையாளர்களின் மதமாக மாறிவிடும் என்ற தீர்க்கதரிசனத்தினால்தானோ இந்திய நாடு புத்த மதத்தை நாடு கடத்தியது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      பின்னுக்கு வரும் வினைவுகளை பாரத்துத்தான் அன்று நடந்தது... ஐயா வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. நாளை நிச்சயம் விடியும் நம்பிக்கையுடன் செயல்படுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. மனிதம் என்ற வார்த்தைக்குள்தான் மதம் மூழ்கிக்கிடக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!

    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

    ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

    மற்றும்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  22. உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    (தயவு செய்து இ.மெயில் பார்க்கவும் )

    பதிலளிநீக்கு
  23. அன்பார்ந்த எம்உறவுளே. மதம் இனம் சாதி என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனித நேயம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து அணிதிரல்வோம்..//

    ஆம்! பௌத்த மதம் எத்தனை எத்தனை நல்ல விடயங்களைப் போதித்தது! ஆனால் அதைக் கையாளும் மனிதர்கள் ஏன் இப்படி வன்முறையாளர் ஆகினர்? வெறி! மதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாற் செய்வதால் தான் மதங்களின் மீது மக்களுக்கு வெறுப்பி வருகின்றது. மதங்களுக்கும், மனிதர்கள் செய்யும் செயலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

    அருமையான வரிகள் தம்பி! மனிதம் வளர்ந்தால் தான் எதிர்கால தலைமுறையினர் தழைக்க முடியும் நல்ல சிந்தனைகளுடன் வளர்வார்கள்!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்