ஈழத்துக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்துக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உரிமையைத் தேடி


ஈழ தேசத்தில் தமிழனின்
அபயக்குரல் வீதி எங்கும் ஒலிக்கிறது.
உயிரை இழந்தோம் உடமை இழந்தோம்
உறவை இழந்தோம் சொந்தம் இழந்தோம்
வாழும் மண்னை இழந்தோம்.


சொந்த காணி நிலம் வேண்டி
தாயக உறவுகள் தயங்காமல்
போர்க்கொடி ஏந்தி வெற்றிக் கொடி நாட்ட
தமிழினம் வீதி வலம் வருகிறான்
பதாதைகள் தாங்கிய கலர் எழுத்துக்களில்

துயரங்கள் துரத்தி வந்தாலும்
கொட்டும் வெயிலிலும் பிஞ்சுக்குழந்தைகளை
மடிஏந்தி வாழ இடம் தேடும் எம் உறவுகள்
நல்லாட்சி நாயகனின் செவிப்பறை
கிழியும் வரை ஊர்ரெங்கும் உரிமைக்குரல்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும்
மக்கள் பலத்தில் வென்ற மக்கள்
நாயகன் எங்கே?
அவர்களின் காதுக்கு கேட்க வில்லையா.
துயரங்கள் தீர துரிதமாய் புறப்படும்.நாயகா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சனி, 27 பிப்ரவரி, 2016

சுதந்திரக் காற்று வீசுமா.?

சுதந்திர நாடே சுதந்திர நாடே
எங்கள் சுதந்திரம் எங்கே போனது.
சுடெரிக்கும் எறிகணைகள்
சுடுகுழல் பிரங்கி சுத்தமாய் பதம் பார்த்தது.
சுதந்திர தேசத்தில் ஈழத்தமிழனின்  உடலை
வீதி எங்கும் கோயில் எங்கும்
சுடுகாடாய் போனதப்பா
சுதந்திர தேசத்திசத்தில்

 
பாலுக்கு அழுத பாலகன்
தாய்முலையில் குடித்தபால்
சொட்டுச் சொட்டாய்
உதிர வெள்ளத்தில் உறைந்தம்மா
பாலுக்கு அழும் பாலகன்
இறந்த பிணம் என்று பாராமல்
உயிரற்ற தாயின் முலையில்
பால் குடித்த பாலன் வாழ்வது
எங்கள் ஈழ தேசத்தில்தான்.

 
வீதி எங்கும் மரண ஓலங்கள்
சப்தம்மிட குடிமனைகள்
விகாரமாய் எரிந்தம்மா
சுதந்திர தேசம் என்று
உலக அரங்கிற்கு பறைசாற்றும்
எம் நாட்டு அரசியல் வித்தகர்களே.
வருகிற சுதந்திர நாளி மட்டுமாவது
எம்மின சுதந்திரமாய் வாழுமா?

 
சிறை அறைகளிலும் சொல்ல முடியாத
துன்ப சிலுவையை சுமந்த வண்ணம்.!
சொந்த பாசங்களை தவிக்க விட்டு!
சிறை கம்பிகள்  பூட்டு போட.
கண்ணீர் சிந்திய வாழ்வாக வாழ்கிறது.
எம் ஈழ தேசத்து தமிழினம்

 
வருகிற சுதந்திர தினத்தினலாவது
சுதந்திரம் மலருமா?
என்ற ஏக்கக் கனவுடன்
நாளைய விடியல்.மலர்கிறது.
சுதந்திர தேசத்தில்.

இக் கவிதை மலேசியாவின்  தேசிய நாள் ஏடு தமிழ்மலரில் வெளிவந்த கவிதை 21-02-2016.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

புதன், 2 டிசம்பர், 2015

வானம் அழுததால் இந்த நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.



வியர்வை சிந்திய நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.

நித்தம் நித்தம் பள்ளி சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால் பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம் காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.










































29-11-2015 அன்று தமிழ் மலேசியாவின் தேசிய நாள் ஏடு மலரில் வந்த எனது கவிதை

-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-
 


 

புதன், 27 மே, 2015

மனிதா மனிதத்தை இழந்தாயடா..


சிறகடித்து பறக்கும் வெண்புறாவே.
உன் சிறகுடைந்து கிடக்குது. வெண்புறாவே.
மாலை நேரம் வந்ததனால்
உன் மனையை தேடி சென்றாய் வெண்புறாவே
வெண்மையின் தூய்மையில்.
கயவஞ்சகர்கள் காம வலைக்குள்
சிக்குண்டுதுடியாய் துடித்தாய் வெண்புறாவே.

கால்(க்)கட்டு கை(க்)கட்டு போட்டு
உயிர் இருக்க உயிர் இருக்க
ரணம் ரணமாய். வெள்ளை சிறகை
உடைத்தான் வெண்புறாவே.
வேதனையால் எப்படி
துடி துடித்திருப்பாய் வெண்புறாவே.
தாயின் வயிற்றில் முறை தப்பி
பிறந்த மூதேவி நாய் பயல்கள்

முன்னுக்கு பின்னாக நின்று.
காமப்பசி தீர்த்த கயவர்கள்.
சிறகு விரித்து பறந்த வெண்புறாவை
சிறகுடைத்து போட்டீர்கள்
சகோதர பாசம் என்றால்
என்னவென்று தெரியாத. மிருங்கள்.
உங்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டான்
மனிதனும்கூட மன்னிக்க மாட்டான்.

 செய்வினை செய்தவன்
தன் வினை தானே அனுபவிப்பான.
கையிலும் காலிலும் விலங்கு போட்டு
வாழ் நாள் முழுதும் உலகத்தை
பார்க்க முடியாத அளவுக்கு
மண்ணின் அடியில் உயிருடன்
புதைக்க வேண்டும் காம வெறியர்களை.

ஒரு வெண்புறாவின் சிறகை உடைத்தான்
இன்று பலநூறு வெண்புறாக்கள்
அகிலமே அதிரும் வண்ணம்
கூட்டை விட்டு ரோட்டை மறித்து
நீதி கேட்கும் வெண்புறாக்கள். எத்தனை
நீதி தேவதை உறங்க வில்லை.
அவளும் ஒரு பெண்தான்
சரித்திரத்தில் எழுதட்டும் நீதி


எமக்கு கிடைக்கட்டும் நிம்மதி
சிறகுடைந்த வெண்புறாவே. நீதி வரும்
வரை உன் உறவுகள் தூங்காது

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 29 ஏப்ரல், 2015

ஈழம்...

ஈழம் என்ற வார்த்தை
சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது
பாடல் பாடிய புலவரின் பெயரும்
ஈழத்து பூதந் தேவனார்
அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு
ஈழம் என்ற நாமம் வந்தது.
ஒரு தேசத்தின் யுத்தம்
முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம்

 
வடக்கு –கிழக்கு எங்கள் தாயம்
வாழ்வோம் அதில் மட்டுமே
என்ற எண்ண குமுறல்கள்
ஈழத்து தந்தை செல்வா தொடக்கம்
ஒவ்வொரு தமிழனின் காதிலும்
எழுச்சி குரலாக எழுந்தது
அந்த எழுச்சியின் வளர்ச்சிதான்
தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது.

 
உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம்
எப்போது ஈழம்  என்ற சொல்லாலே
ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கு
முகவரியை கொடுக்கிறது.
சேர சோழ பாண்டியன் ஆண்ட பரம்பரை போல
தமிழனால் ஆண்ட இராச்சியம்
ஈழக்கனவுகள் பல தேசங்களில் திசை திரும்பி
சர்வதேசம் எங்கும் ஈழத்தின் எழுச்சிக்குரல்
ஆர்ப்பரிக்கும் கடலலைபோல் பொங்கி எழுகிறது….

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

புதன், 1 ஏப்ரல், 2015

ஜீவநதி இதழே


ஈழ மணித் திரு நாட்டில்

இரு தினங்கள்  பவனி வருவாய்
ஏழைகளின் வீடுகளில் ஒளியேற்றும்
மாதம் இருமுறை தோரணமாய்
வலம் வந்து சொல்லிடுவாய் நற் செய்தி.
கடல் கடந்தும் உன் புகழ்
புலம் பெயர்ந்த தமிழருக்கு.
செந் தமிழை வளர்த்திடுவாய்
 
தரணியெங்கும்  இலைமறை காயாக 
தமிழை வளர்க்க துணிந்து போராடும்
இளம் தலைமுறையை  கவிஞர்களின்
சிந்தனை ஆற்றலுக்கு சிறகு விரிக்கிறாய்..
எங்களின் ஆற்றலை  நீயே சிகரம் ஏற்றுகிறாய்..
எப்பவோ நீ பிரசவமாகிவிட்டாய்.
இப்போ 75வது இதழாக சிறகு முளைத்து.
 
பவள விழா என்ற பெயர் தாங்கி
அழகிய அட்டைப்படத்துடன்
உலக வலம் வருகிறாய்.
பல தடைகளை  தகர்த்தெறிந்த இதழே
தார்மிக உணர்வோடு தமிழ் என்ற
தாரக மந்திரத்துடன் உன் புகழ்
ஊர்ரெங்கும் பார்ரெங்கும் செழிக்கட்டும்...
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 குறிப்பு-ஜீவ நதி இதழுக்கு எழுதிய கவிதை...
சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் சிலர் தங்களின்விபரங்களை அனுப்புவதில் தாமதமாகிவிட்டது.. தற்போதும் 2 நபரின் விபரங்கள் வந்து கிடைக்க வில்லை.. தயவு செய்து அனுப்பிவைங்கள் சம்மந்தப்பட்ட போட்டியாளர்கள்... மற்றவர்களுக்கு 6.4.2015  பரிசுப்பொருட்கள் தபாலில் அனுப்பபடும் என்பதை அறியத்தருகிறேன்..
 
 
 

 

புதன், 25 மார்ச், 2015

வாழ்விடம் இழந்த அகதிகள்.


 
 





















சிட்டுக்குருவி போல்சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று

சிதர்உண்டு சிதையுண்டு
சுதந்திரக் காற்றினை ஓரளவு
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்

இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.

வாழவேண்டுமென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகிறாள்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.

ஏர்பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலமாக மாறி விட்டது………….
இந்த அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட

தமிழ் இனம் வந்தாரை வா..வா.. என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட  தமிழ்இனம்


இன்று வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்.
இன்றுநமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்
.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது
.
இறைவனின் தண்டனையா
?
அன்றும் இன்றும் தமிழ் இனம்

வாழ்விடம் இழந்த அனாதைகள்

இதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா?????
அடிமைகள் போல வாழ்விடம்

இழந்த அனாதைகள் போல


வாழ்கிறார்கள்.எம் தமிழ்இனம்


 


-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

பட உதவி -GOOGLE.COM