அவள் பாதுகாப்பாக கரை ஒதுங்கிய இடத்தில் சிறு சிறு தார்ப்பாய் குடிசைகள் குனிந்து நிமிர முடியாதவாறு அந்த குடிசை அமைந்துள்ளது அவளின் சிந்தனை தன் உடம்பில் உள்ள குண்டுக் காயங்களை பற்றியோ, அல்லது அவள் வாழும் சின்னக் குடிசை பற்றியோ அல்ல.
அவள் உயிருக்கு உயிராக மனசார நினைத்த காதலன் (ஆனந்தன் )பற்றிய நினைவுதான் அவள் நினைவில் கடல் அலை கல்லில் மோதுவது போல அலையலையாய் ஓடிக் கொண்டிருந்தது ஆனந்தின் நினைவு
அவள் தனிமையில் இருந்து யோசிக்கும் போது தன்னுடன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மல்லிகா வந்து.
" என்ன பிள்ளை எப்ப பார்தாலும் ஏதோ யோசிக்கிறாய்,,,,,,,,,,,,
என்று கேட்டாள் மல்லிகா"
அதற்கு மாலினி சொல்லுகிறாள்,,,,,,,,,,,,,,நான் உயிருக்கு உயிராக நேசித்த என் (ஆனந்தின் ) நிலை என்னவென்று தெரியாது அவனைப் பற்றிய நினைவுதான் என் நெஞ்சை பிசைந்து எடுக்கிறது .சகோதரங்கள் அம்மா அப்பா எல்லோரும் இறந்தாங்கள் அந்த கவலை எனக்கு பெரிதா தெரியா வில்லை என் காதலன் (ஆனந்தன் .) பற்றிய கவலைதான் எனக்கு பெரிதாக தெரிகிறது என்று பதில் கூறினாள்,,,பின்பு
என்ன இறைவா இந்த சோகத்தையும் வேதனையும் ஒன்றாக என் வாழ்வில் அனுபவிக்க விட்டாயா? என்ற கேள்விக் கணையை தன் மனதுக்குள் தொடுத்தாள்.
குடிசையில் வாழும் மக்களின் வாழ்வு நிலை ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது பின்பு (மாலினி) தன் காதலன் (ஆனந்தை) தேடும் பயணத்தை தொடர்கிறாள் அவள் ஒவ்வொரு இடைத்தங்கல் முகாமாக அவன் முகவரியை கையில் பிடித்த வண்ணம் அலைந்து திரிகிறாள் பல உயர் அதிகாரிகளை சந்தித்து என் வாழ்வில் இழக்க முடியாத என்ன உறவுகளை இழந்தேன் அந்த வேதனை ஒருபக்கம் இருக்க
என் காதலன்(ஆனந்தத்திற்கு) இந்த நிலையா என்ற வினாவினை பேசுகிறாள். என் ஆனந் எப்படியாவது தேடி எடுத்து தாருங்கள் என்று கெஞ்சி மன்றாடினாள் அதற்கும் பதில் கிடைக்க வில்லை
பல மாதங்கள் கடந்த நிலையில் தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம் அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போனது,,,,,
மாலினி) யுத்தத்தால் தன் உடமைகளை இழந்தவள் அதே நேரம் அவளுடைய அடையாள அட்டையை யுத்தத்தில் இழந்தாள் அவள் தன்னுடைய அடையாள அட்டை எடுப்பதற்காக அடையாள அட்டை பெறும் திணைக்களத்துக்கு செல்லுகிறாள்.
அங்குள்ள அதிகாரியிடம்
அவளின்
விபரங்களை
ஒப்படைத்து
விட்டு
அங்கு அவள் வரிசையாக நின்று சில மணி நேரத்துக்குப் பின்பு அடையாள அட்டை கிடைத்தது அதை வாங்கிய வண்ணம் வீதியோரமாக சோகம் கலந்த முகத்துடன் போகும் போது எதேச்சையாக (ஆனந். வாருகிறான் என் ஆனந் மாமா )என்று பெரிய சந்தோச அழுகையுடன் கட்டிப்பிடித்தாள் பின்பு (ஆனந்தன்
) தன்
அம்மாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் பாசங்களை மாறி மாறி பகிர்ந்தார்கள் மாலினியின் மீது ஆனந்தன் குடும்பம்.அளவு கடந்த
அன்பு
வைத்தவர்கள்
மாலினியின் வாழ்க்கையில் யுத்தத்தில் பட்ட துன்பத்தை விட தன் காதலனை அடைய வேண்டும் என்ற ஒரு எழுச்சின் வடிவம் அவள் மனதில் காதல் ஒரு போராட்டமாக மாறியது அவள் இறுதி வரை போராடினாள் கடைசியில் அவள் தன் காதலில் வெற்றி வாகை சூடினாள் மாலினியைப் போன்ற பெண்கள் எத்தனை பேர் காதலுக்காக போராடி வெற்றியடைந்த பெண்களும் உள்ளார்கள் அதே போன்று காதலுக்காக வாழ்வில் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் எத்தனை பேர் அவர்களின் காதலும் வாழ வேண்டும் காதல் வாழ்க காதல் வாழ்க,,,,,,காதல் வாழ்க,,,காதல்
வாழ்க
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10-06-2015 புதன்கிழமை தமிழ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை.