கிழக்கின் கரையோரம் கீழ் வானில் ஏழு நிறங்கள் வளைந்து இசை பாடும் வானவில்லின் அழகும் .மேகங்கள் ஒன்றுடன்ஒன்று மோத. கதிரவன் ஒளிக்கீற்று பூமியெங்கும் பரவ மாநிறம் கொண்டு வளைந்தாடும் மங்கையின் வதனம் சனக் கூட்டத்துக்குள் என் கண்ணுக்கு தெரிந்தது .அவள்தான் என் மாலினி.
ஓடி விளையாடும் பிஞ்சுகள் .வயதில் முதிர்ந்த தாத்தாக்கள் நெஞ்சை பிடித்த வண்ணம் ஓலமிட்டு திரிகிறார்கள். விமானங்களின் இரைச்சல் சப்தங்களும் அங்கும்.இங்கும் குண்டுகளின் சப்தங்கள்,கேட்ட வண்ணம் இருந்தது,
மூட்டை மூட்டையாய் துணிகளும் மூட்டை மூட்டையாய் சமையல் பாத்திரங்களையும் தலையிலும் தோளிலும் சுமந்த வண்ணம் படுத்துறங்க கையில் ஓலைப்பாயுடனும் தன் ஊர் சொந்தங்களுடன் இடம் பெயர்ந்து போகிறாள்..
குண்டுகளின் ஆணவத் தாண்டவம் அவள் உடல் எங்கும் பதம் பார்த்தது. அவள் இரத்தம் துவைந்த உடையுடன் அழுத குரலுடன் தன் காதலனை பார்க்க வேண்டும் என்ற மன ஏக்கத்துடன் தன்னால் முடிந்தளவு அவள் போராடி ஒரு தன் நம்பிக்கையுடன் ஒரு பக்க கரையை அடைகிறாள்
அவள் பாதுகாப்பாக கரை ஒதுங்கிய இடத்தில் சிறு சிறு தார்ப்பாய் குடிசைகள் குனிந்து நிமிர முடியாதவாறு அந்த குடிசை அமைந்துள்ளது அவளின் சிந்தனை தன் உடம்பில் உள்ள குண்டுக் காயங்களை பற்றியோ, அல்லது அவள் வாழும் சின்னக் குடிசை பற்றியோ அல்ல.
அவள் உயிருக்கு உயிராக மனசார நினைத்த காதலன் (ஆனந்தன் )பற்றிய நினைவுதான் அவள் நினைவில் கடல் அலை கல்லில் மோதுவது போல அலையலையாய் ஓடிக் கொண்டிருந்தது ஆனந்தின் நினைவு
" என்ன பிள்ளை எப்ப பார்தாலும் ஏதோ யோசிக்கிறாய்,,,,,,,,,,,,
என்று கேட்டாள் மல்லிகா"
அதற்கு மாலினி சொல்லுகிறாள்,,,,,,,,,,,,,,நான் உயிருக்கு உயிராக நேசித்த என் (ஆனந்தின் ) நிலை என்னவென்று தெரியாது அவனைப் பற்றிய நினைவுதான் என் நெஞ்சை பிசைந்து எடுக்கிறது .சகோதரங்கள் அம்மா அப்பா எல்லோரும் இறந்தாங்கள் அந்த கவலை எனக்கு பெரிதா தெரியா வில்லை என் காதலன் (ஆனந்தன் .) பற்றிய கவலைதான் எனக்கு பெரிதாக தெரிகிறது என்று பதில் கூறினாள்,,,பின்பு
என்ன இறைவா இந்த சோகத்தையும் வேதனையும் ஒன்றாக என் வாழ்வில் அனுபவிக்க விட்டாயா? என்ற கேள்விக் கணையை தன் மனதுக்குள் தொடுத்தாள்.
குடிசையில் வாழும் மக்களின் வாழ்வு நிலை ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது பின்பு (மாலினி) தன் காதலன் (ஆனந்தை) தேடும் பயணத்தை தொடர்கிறாள் அவள் ஒவ்வொரு இடைத்தங்கல் முகாமாக அவன் முகவரியை கையில் பிடித்த வண்ணம் அலைந்து திரிகிறாள் பல உயர் அதிகாரிகளை சந்தித்து என் வாழ்வில் இழக்க முடியாத என்ன உறவுகளை இழந்தேன் அந்த வேதனை ஒருபக்கம் இருக்க
என் காதலன்(ஆனந்தத்திற்கு) இந்த நிலையா என்ற வினாவினை பேசுகிறாள். என் ஆனந் எப்படியாவது தேடி எடுத்து தாருங்கள் என்று கெஞ்சி மன்றாடினாள் அதற்கும் பதில் கிடைக்க வில்லை
பல மாதங்கள் கடந்த நிலையில் தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம் அவளால் கண்டு பிடிக்க முடியாமல் போனது,,,,,
மாலினி) யுத்தத்தால் தன் உடமைகளை இழந்தவள் அதே நேரம் அவளுடைய அடையாள அட்டையை யுத்தத்தில் இழந்தாள் அவள் தன்னுடைய அடையாள அட்டை எடுப்பதற்காக அடையாள அட்டை பெறும் திணைக்களத்துக்கு செல்லுகிறாள்.
அங்குள்ள அதிகாரியிடம்
அவளின்
விபரங்களை
ஒப்படைத்து
விட்டு
அங்கு அவள் வரிசையாக நின்று சில மணி நேரத்துக்குப் பின்பு அடையாள அட்டை கிடைத்தது அதை வாங்கிய வண்ணம் வீதியோரமாக சோகம் கலந்த முகத்துடன் போகும் போது எதேச்சையாக (ஆனந். வாருகிறான் என் ஆனந் மாமா )என்று பெரிய சந்தோச அழுகையுடன் கட்டிப்பிடித்தாள் பின்பு (ஆனந்தன்
) தன்
அம்மாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் பாசங்களை மாறி மாறி பகிர்ந்தார்கள் மாலினியின் மீது ஆனந்தன் குடும்பம்.அளவு கடந்த
அன்பு
வைத்தவர்கள்
மாலினியின் வாழ்க்கையில் யுத்தத்தில் பட்ட துன்பத்தை விட தன் காதலனை அடைய வேண்டும் என்ற ஒரு எழுச்சின் வடிவம் அவள் மனதில் காதல் ஒரு போராட்டமாக மாறியது அவள் இறுதி வரை போராடினாள் கடைசியில் அவள் தன் காதலில் வெற்றி வாகை சூடினாள் மாலினியைப் போன்ற பெண்கள் எத்தனை பேர் காதலுக்காக போராடி வெற்றியடைந்த பெண்களும் உள்ளார்கள் அதே போன்று காதலுக்காக வாழ்வில் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் எத்தனை பேர் அவர்களின் காதலும் வாழ வேண்டும் காதல் வாழ்க காதல் வாழ்க,,,,,,காதல் வாழ்க,,,காதல்
வாழ்க
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
10-06-2015 புதன்கிழமை தமிழ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை.
காதலை வாழ்த்தும் கதை நன்று. பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
இதழில் வெளியானறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தம்பி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரூபன் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...ரூபன்
பதிலளிநீக்குதம +1
அருமை.பத்திரிகையில் வெளியானமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநண்பருக்கு முதலில் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசோகமான, இக்கட்டான, உயிருக்குப் போராடும் சூழலிலும்கூட உலகெங்கிலும் காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது மனதை கசிய வைத்த அருமையான கதை மீண்டும் வாழ்த்துகள் ரூபன்.
தமிழ் மணம் 5
குண்டுகள் கூட கொல்ல முடியாது ...காதலை :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குத ம 9
தொடரட்டும் இலக்கியப் பணி.
பதிலளிநீக்குத ம 10
கதையின் தலைப்பும் சொல்லிச்
பதிலளிநீக்குசென்றவிதமும் அருமை
(காதலன் பெயரை தொடர்ந்து ஏன்
அடைப்புக் குறியில் )
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 11
பதிலளிநீக்குபடைப்புகள் தொடரட்டும்
பதிலளிநீக்குதம +
வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகாதலுக்கு அழிவில்லை ரூபன் தம்பி! எத்தனை எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை இடர்கள், துன்பங்கள் வந்தாலும், குண்டுகள் துளைக்கும் யுத்தமே வந்தாலும், அன்பும் காதலும் உண்மையானதாக இருந்தால் அது வாழ்வாங்கு வாழும்!
பதிலளிநீக்குவாழ்த்துகள் தம்பி!
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல கதை. உயிரோட்டமுள்ள பாசங்கள், அன்புகள் என்றுமே அழிவதில்லை. அதன் துளிர்கள் துளிர்த்து தினமும் உயிரூட்டிக் கொண்டேதான் இருக்கும். தமிழ் பத்திரிகையில் தங்கள் கதை வெளிவந்தமைக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.