வியாழன், 18 ஜூன், 2015

இலங்கையில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் நான்

இலங்கையில் இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்ற வசந்தம்  தொலைக்காட்சியில் என்னைப்பற்றிய அறிமுக உரையும் மற்றும் எனது வலைப்பூக்கள் பற்றியும் தூவானம் நிகழ்ச்சியில் அடையாளம் என்று தலைப்பிட்டு காட்டியுள்ளார்கள் 13-06-2015 அன்று அந்த வீடியோவை கண்டு மகிழவும்
 





புதைக்கப்பட்ட வாழ்க்கை


வாழ்வில் புதிய விடியல் தேடி

வாழ்வை உயர்த்த சென்றவள்

பாலுக்கு அழும் பிஞ்சு குழந்தையை

கை விரல் பிடித்து நடந்து செல்லும் சேய்

 
செல்ல மகனையும் அன்பு கனவனையும்

அருவியாய் கொட்டும் கண்ணீருடன்.

பாசத்தை நெஞ்சில் சுமந்தவண்ணம்

ஆகாய விமானத்தில் பறக்கிறாள். அரபு தேசம்

 
பாலைவனக்காற்று. பதம் பார்க்க

பாலைவன வெம்மையில் பொறிகிறாள்

அழும் பிஞ்சு குழந்தைக்கு.

அழுதமாய் கொடுக்கும் பால்சுரக்க.

 

பாலைவன மண்ணில் வீச்சுகிறாள்

தாய் பாசம் பாலைவன மண்ணில் புதைகிறது.

அவளின் நெஞ்சு குழிக்குள்  ஏங்கி தவிக்கும்

பிள்ளை மனம் அரபு தேசத்தில் தீச்சுடர்ராய் எரிகிறது

 
காலங்கள் கடக்க. அவள் வாழ்வில்

சுகந்தங்கள் வீசவில்லை.

வீட்டுக்கார முதலாளி கொடுமை

வாய் விட்டு சொல்ல முடியாத துன்பம்

 
நான்கு சுவர்களுமே. அவளின் உலகம்

உருண்டு புரண்டு படுத்தாலும்

துங்கம் களையாத வழிகளுடன்

குடும்பத்தை சுமந்த வண்ணம்

 
நன்னீர் என்னும் வென்னீரில் வேகுகிறாள்

அரபு தேசமே ஆர்ப்பரிக்கும் கடலலையே

ஆண்டவன் போட்டது தண்டணையா

இல்லை அவளே தேடிக் கொண்ட தண்டனையா.
 
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டி முடிவுகள் மிக விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்

19 கருத்துகள்:

  1. கண்டேன். ரசித்தேன். தாங்கள் மென்மேலும் சாதனை புதிய மனம்நிறைந்த வாழ்த்துக்கள். புதைக்கப்பட்ட வாழ்க்கைக் கவிதை மனதில் ஆழப் புதைந்தது.

    பதிலளிநீக்கு
  2. பத்திரிகை தொலைக்காட்சி இணையம் என்று கலக்கி வரும் ரூபனுக்கு வாழ்த்துகள். தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ரூபன்
    சாதனைகள் தொடர
    வாழ்த்துக்கள்
    தம +

    பதிலளிநீக்கு
  4. அருமையான அறிமுகம்
    சிகரத்தில் தொடர்ந்து நிலைக்க
    மனமாந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இனிமையான வாழ்த்துக்கள்
    இமயமளவு உயர வாழ்த்துக்கள்
    தொடர்ந்து கலக்குங்கள் சகோ....நன்றி

    தம +1

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் இன்னும் சிகரம் தொட தொடர்ந்து உழைக்க பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  7. முதலில் வாழ்த்துகள் ரூபன்.


    புதைக்கப்பட்ட வாழ்க்கை
    வேதனை மிகுந்த விடயங்கள் இங்கு நான் நேரில் காணும் காட்சிகள் தங்களது பதிவால் மேலும் மனம் கணத்தது
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. அறிமுகம் மிக அருமை. தாங்கள் மென்மேலும் சாதனை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  9. மனமார்ந்த நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
    த ம 10

    பதிலளிநீக்கு
  11. ரூபன்,

    காணொளியைக் கண்டு ரசித்தேன். உங்களின் இலக்கியப் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களும் !

    பதிலளிநீக்கு
  12. அடேங்கப்பா !இணையத்தில் கலக்கும் ரூபனை தொலைக்காட்சியில் கண்டவுடன் பெரு மகிழ்ச்சியே. மேலும் வளர என் வாழ்த்துக்கள் !
    \\\நன்னீர் என்னும் வென்னீரில் வேகுகிறாள் அரபு தேசமே ஆர்ப்பரிக்கும் கடலலையே ஆண்டவன் போட்டது தண்டணையா//// இல்லை அவளே தேடிக் கொண்ட தண்டனையா.
    நியாயமான கேள்வி தான். வேதனையான விடயம் எடுத்து வந்தீர்கள் உலகறிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை தொடர வாழ்த்துக்கள் ...!

    Copy and WIN : http://ow.ly/KNICZ

    பதிலளிநீக்கு
  13. எந்த தாய்க்கும் வரக்கூடாது இந்த நிலை!

    வசந்தம் தந்தது நல்ல அறிமுகம் ,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  14. மனமார்ந்த வாழ்த்துகள், ரூபன்!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்