புதன், 27 மே, 2015

மனிதா மனிதத்தை இழந்தாயடா..


சிறகடித்து பறக்கும் வெண்புறாவே.
உன் சிறகுடைந்து கிடக்குது. வெண்புறாவே.
மாலை நேரம் வந்ததனால்
உன் மனையை தேடி சென்றாய் வெண்புறாவே
வெண்மையின் தூய்மையில்.
கயவஞ்சகர்கள் காம வலைக்குள்
சிக்குண்டுதுடியாய் துடித்தாய் வெண்புறாவே.

கால்(க்)கட்டு கை(க்)கட்டு போட்டு
உயிர் இருக்க உயிர் இருக்க
ரணம் ரணமாய். வெள்ளை சிறகை
உடைத்தான் வெண்புறாவே.
வேதனையால் எப்படி
துடி துடித்திருப்பாய் வெண்புறாவே.
தாயின் வயிற்றில் முறை தப்பி
பிறந்த மூதேவி நாய் பயல்கள்

முன்னுக்கு பின்னாக நின்று.
காமப்பசி தீர்த்த கயவர்கள்.
சிறகு விரித்து பறந்த வெண்புறாவை
சிறகுடைத்து போட்டீர்கள்
சகோதர பாசம் என்றால்
என்னவென்று தெரியாத. மிருங்கள்.
உங்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டான்
மனிதனும்கூட மன்னிக்க மாட்டான்.

 செய்வினை செய்தவன்
தன் வினை தானே அனுபவிப்பான.
கையிலும் காலிலும் விலங்கு போட்டு
வாழ் நாள் முழுதும் உலகத்தை
பார்க்க முடியாத அளவுக்கு
மண்ணின் அடியில் உயிருடன்
புதைக்க வேண்டும் காம வெறியர்களை.

ஒரு வெண்புறாவின் சிறகை உடைத்தான்
இன்று பலநூறு வெண்புறாக்கள்
அகிலமே அதிரும் வண்ணம்
கூட்டை விட்டு ரோட்டை மறித்து
நீதி கேட்கும் வெண்புறாக்கள். எத்தனை
நீதி தேவதை உறங்க வில்லை.
அவளும் ஒரு பெண்தான்
சரித்திரத்தில் எழுதட்டும் நீதி


எமக்கு கிடைக்கட்டும் நிம்மதி
சிறகுடைந்த வெண்புறாவே. நீதி வரும்
வரை உன் உறவுகள் தூங்காது

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

40 கருத்துகள்:

  1. நீதி விரைவில் எழுதப்படும்
    சரித்திரத்திலும் விரைவில் இடம் பிடிக்கும் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. கவிதை மிக அருமை.விரைவில் நீதி கிடைக்கட்டும் .

    பதிலளிநீக்கு
  3. கவிதையை ரசித்தேன்..நீதி விரைவில் வரும்...
    நன்றி...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  4. மனிதனின் மனிதம் செத்து விட்டது நண்பரே... மிருகங்களைவிட கொடுமையானவனாக மனிதன் மாறிக்கொ(ன்)று இருக்கின்றான் நீதி கிடைக்குமென நம்புவோம்.

    தமிழ் மணம் காலையிலேயே மூன்றாவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி நிச்சயம் நீதி கிடைக்கும்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. சமீபத்தில் உங்கள் ஊரில் நடந்த சம்பவத்தை அறிந்து நானும் வேதனை அடைந்தேன் ,நீதி வெல்லும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. கொலை வெறி மிருகங்கள் --காலம் ஒரு நாள் மாறும் நீதி தருவார் கடவுள்-கவிதை நன்று

    சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. நீதி விரைவில் கிடைக்கட்டும்..

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. நித்திரை நீங்கி
    நீதி விழிக்கட்டும்!
    நன்றி!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. மனிதம் மரித்து தான் போய் விட்டது ரூபன்
    மதியழிந்து மாபாதகம் செய்யும் அரக்கர்களை
    அழியோடு அழிக்கவேண்டும் நீதிக்காய் குரல்கள் இன்னும் ஓங்கட்டும் !
    ஆதங்கம் புரிகிறது ரூபன். வேதனை நிறைந்த கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி உண்மைதான் அம்மா.. காலம் பதில் சொல்லும் விரைவில்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. சமகால நடப்பைச்சாடும் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறோம். கையாலாகாத நிலை. சட்டங்கள் சரியில்லையா? சட்டங்களைக் கையாள்பவர்கள் சரியில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி
      சட்டத்திலும் ஒரு ஓட்டை உள்ளது என்பார்கள் அதன் வழி தப்பிக்க வாய்ப்பு இருக்கலாம்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. நீதி வரும். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கைகள் வீண் போகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. மனிதம் எப்போதோ மாண்டு போனதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      உண்மைதான் ஐயா வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  15. கவிதை அருமை. அதனுள் உள்ள வலி நீங்க, நீதி வரும். நம்புவோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  16. மனதை உருக்கும் வரிகள் கவிதை வெகு அருமை விரைவில் நீதி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனையும் நீதி தேவதையையும் வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  17. நீதி கிட்டும் வரை
    அமைதி இல்லை என்றாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      நாம எதற்கும் அஞ்சமாட்டோம்..... 6லும் சாவு 100லிலும் சாவு வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. மனதை உலுக்கிவிட்டது உங்கள் கவிதை. எல்லோருக்கும் விரைவில் நீதி கிடைக்கட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வேறெதுவும் செய்ய முடியாத நிலை. என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  19. கல்வி கலாச்சாரா அறிவினை வளர செய்வதே இதற்கு தீர்வு

    பதிலளிநீக்கு
  20. தேவதை ஒன்றின் திரும்பாப் பயணம்
    சாவதை ரசித்த சண்டாளர் கூட்டத்தால்
    பொல்லா வலியுடன் போனாய் மீண்டும்
    பூவிதை ஆகிப் பிறந்திடு மகளே !

    உன் ஆத்மா சாந்தியடையட்டும் !

    கண்ணீர் சுமந்த வரிகள் ரூபன்
    தொடரட்டும் தங்கள் பணி
    தம கூடுதல் ஒன்று




    பதிலளிநீக்கு
  21. சோக உணர்ச்சி மிக்க கவிதை புனைந்தமைக்குப் பாராட்டு .

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே.

    மனதை உருக்கும் வண்ணம் வடித்த தங்கள் கவிதை கண்டு கண்ணீர் பூக்களை சம்ர்பிக்கிறேன். காலங்கள் மாறி வர ஆண்டவனைப் பிராத்திக்கிறேன். வேறு என்ன சொல்ல.?
    காலங்கள் விரைவில் நல்ல விதமான நீதிகள் பிறந்திட கனியட்டும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. சகோதர பாசம் என்றால் என்னவென்று தெரியாத

    என்று தணியும் இம் மூடத்தனம்!!!!

    பதிலளிநீக்கு
  24. கல்வியும், பண்பாடும் வளர்ந்தால் இவை எல்லாம் மாறிவிடும் இல்லையா தம்பி!?

    பதிலளிநீக்கு
  25. கவிதையை ரசித்தேன்..தீயதை சூது கவ்வும் ...தர்மம் வெல்லும்...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்