உன்னை காதலித்த நாள் முதலாய்
என் நெஞ்சறையில் ஆயிரம் வார்த்தைகள்
புரையோடியுள்ளது. அதை எழுத முடியாமல்
உனக்காக எழுதுகிறேன் மன்னிப்பாயா என்னை
அன்பாக பழகிய காலங்களில்
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
விட்டுச்சென்றாய் அந்த ஆசைகள்
ஒவ்வொரு கணப்பொழுதும் துள்ளி வருகிறது
கடைத் தெருவில் சனக் கூட்டத்தில்
கை தவறிய குழந்தை போல.
உன்னை நினைத்து நினைத்து
தினம் தினம் வாடுகிறேன்
பருவ காலங்கள் மாறி மாறி
வருவது போல. உன் நினைவும்
வினாடிக்கு வினாடி
வந்துகொண்டுதான் இருக்கிறது
என் கவிதைக்கு எவ்வளவு
வாசக நெஞ்சங்கள் வருகின்றார்கள்
இவை எல்லாம் என்னால் இல்லையடி
உன் காதல் அழகை என் கைப்பட
எழுதும் போது உன் நினைவால்
உயிர்பெறுகிறது என் கவிதை
நேரம்
காலம் இருக்கும் போது
என்கவிதையாவது
நீ படித்து பார்
என்
உணர்வுகள் உன்னை
நிதானப்படுத்தும்
உன்னை
அப்போதாவது
உணர்வாய்
என்
கண்ணீரும் உன் புன்னகையும்
நம்
காதலுக்கு முகவரியாக இருக்கிறது.
காதல்
வேண்டாம் என்று
நான்
தனிமையாகினேன்
உன்னை
கண்ட நாள் முதல்
காதல்
என்ற பாசவலையில் வீழ்ந்தேன்
பாசத்தால்
ஒன்றாய் சேர்ந்தாய்
பாசம்மெனும்
வேசம் காட்டி
என்னை
தனிமைப்படுத்தி விட்டாய்
இறுதியாக
சொல்லுகிறேன்
என்
இதயத்தை நீ விலை கொடுத்து
வாங்க
வில்லை பாசத்தால் வேண்டினாய்
உன் பாதச் சுவடுகள் பதிந்து இருக்கிறது.
வேற
ஒருத்தி அழித்து விட்டு
விளையாட
முன் நீயே வந்து
என்இதயத்தில்
விளையாடுவாயாக
இல்லை
என்றால்
ஆயுள்
முழுதும் கண்ணீர்வடிப்பாய்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முடிவில் என்னிந்த சாபம் தம்பி...?
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... நன்றி...
பதிலளிநீக்குஆகா முடிவில் சாபம் கொடுத்து விட்டீர்களே
பதிலளிநீக்குவணக்கம்
நீக்குவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தம 2
பதிலளிநீக்குஇவ்வளவு பேர் நாங்கள் உங்கள் கவிதையை படிக்கிறோம், ஆனால் உங்கள் காதலி படிப்பதில்லையா, என்ன கொடுமை சார் இது...
பதிலளிநீக்குஇந்த பெண்களே இப்படித்தான்பா, நம்மை அழ வைத்து பார்ப்பதில் அவுங்களுக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ(//"என் கண்ணீரும் உன் புன்னகையும்//")
ஆனா கடைசியில இப்படி சாபத்தை கொடுத்துட்டீங்களே..
வணக்கம்
நீக்குவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி
அவள் படித்த பின்புதான் பதிவேற்றம் செய்கிறேன் எல்லாம் கற்பனைதான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எழுதும் போது உன் நினைவால்
பதிலளிநீக்குஉயிர்பெறுகிறது என் கவிதை
நேரம் காலம் இருக்கும் போது
என்கவிதையாவது நீ படித்து பார்!..
இதுவரைக்கும் அவங்க படிக்கவில்லையா?..
அவங்களுக்கு படிக்க - பிடிக்க - ஒரு கவிதை எழுதுங்களேன்!..
என்ன இது சோக கீதம் பாடிவிட்டீர்களே ரூபன். காலம் மாறும் கனவுகள் பலிக்கும். நிச்சயமாக dont worry ok வா ! வேதனையான கவிதை கஷ்டமாக உள்ளது.
பதிலளிநீக்குபுதிய வருடத்தில் அனைத்தும் சிறப்புற வாழ்த்துக்கள் ....! கவிதை நன்றாக உள்ளது.
// என் இதயத்தில் நீ நடந்து விளையாடிய
பதிலளிநீக்குஉன் பாதச் சுவடுகள் பதிந்து இருக்கிறது.
வேற ஒருத்தி அழித்து விட்டு
விளையாட முன் நீயே வந்து
என் இதயத்தில் விளையாடுவாயாக//
காதலி இடத்தில் வேறொருவர் வரலாம். ஆனால் உங்கள் இதயத்தில் பதிந்த அவளின் பாதச்சுவட்டை அழித்து விளையாட வேறொருத்தியால் எப்படி முடியும்?
வணக்கம் சகோ!
பதிலளிநீக்குஊற்றாய்ப் பெருகும் உமதன்பைத் தானுணர்ந்தே
போற்றுவாள் பாரும் பொறுத்து!
கலையும் சோகம் விரைவில்! நலமே சூழும் தொடர்ந்து!
வாழ்த்துக்கள் சகோ!
கைக்கிளையாய் ஒரு காதல் கவிதை.
பதிலளிநீக்குத.ம.5
அழ வைத்து பார்ப்பதில் ஆனந்தம்
பதிலளிநீக்குதங்களை இதுபோன்று எழ(எழுத) வைத்து பார்ப்பதில்
பேரானந்தம் போல் உள்ளதே!
கவலையற்க!
கண்ணீர் - இனி
பன்னீர் ஆகும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
வலைப் பூ நண்பருக்கு,
பதிலளிநீக்குவணக்கம்!
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr
ஏன் ? நண்பா சோககீதம்.....
பதிலளிநீக்குத.ம.ஆறுதலுக்காக.... 6
வாசக நெஞ்சங்களை துணைக்கு அழைத்துப் போனமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகாதலுடன் ஆரம்பித்த கவிதை சாபத்தில் முடிந்தது ஏனோ?
பதிலளிநீக்குசகோவைகவிதைஎழுதவைத்த அந்த அன்பு நெஞ்சத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குகாதல்...சுகமும் தரும்,வலியும் தரும்.நல்ல கவிதையும் தரும்!
பதிலளிநீக்குதங்னளின் வலைக்கு முதல் முறை வருகிறேன். ஏன் இந்த சாபம்.
பதிலளிநீக்குரூபன் தம்பி என்ன இது! இப்படிக்க் காதலில் கசிந்துருகிவிட்டு இறுதியில் சாபம்? அத்தனை வலிகளா? வலிகள் வந்தாலும் சாபம் வேண்டாமே தம்பி!
பதிலளிநீக்குமற்றபடி கவிதை அருமை!