பட்டு வானம்
பளபளக்க உன்
பட்டு மேனி ஒளி ஒளி ஒளிக்க
என் உள்ளமது துள்ளி விளையாட
எண்ணக் கிடைக்கைகள் துள்ளி இசைபாட
உந்தன் நினைவுதான் என்னை
தினம் தினம் வாட்டுகிறது.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.
உவமை கொண்டவளே
உன்னை அகிலமே போற்றிடுமே.
காதல் மொழியால் என்னை
காயப்படுத்தியவள் நீ அல்லவா.
அதில் அன்புமொழி
சொல்லியவள் நீ அல்லவா.
வெள்ளை உள்ளம் கொண்டவளே
என்னை வேடந்தாங்கும் வெண் புறவே
உன் காதல் வலையில்
சிக்குண்டு
தவியாய் தவிக்கிறேன்
விடை தெரியாமல்.
விண்னில் பாயும் எறிகணைகள்
இலக்கை தாக்கா விட்டாலும்
நீ என்மீது பார்க்கும் காதல்(ப்)பார்வை.
அணையாத தீயாக எரிகிறது…
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பருவமாறி பாதை மாறினேன். காதலாலே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பட்டு மேனி ஒளி ஒளி ஒளிக்க
என் உள்ளமது துள்ளி விளையாட
எண்ணக் கிடைக்கைகள் துள்ளி இசைபாட
உந்தன் நினைவுதான் என்னை
தினம் தினம் வாட்டுகிறது.
வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறளுக்கு சிறந்தவளே.
காதல் மொழியால் என்னை
காயப்படுத்தியவள் நீ அல்லவா.
அதில் அன்புமொழி
சொல்லியவள் நீ அல்லவா.
வெள்ளை உள்ளம் கொண்டவளே
என்னை வேடந்தாங்கும் வெண் புறவே
விண்னில் பாயும் எறிகணைகள்
இலக்கை தாக்கா விட்டாலும்
நீ என்மீது பார்க்கும் காதல்(ப்)பார்வை.
அணையாத தீயாக எரிகிறது…
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பருவமாறி பாதை மாறினேன். காதலாலே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஏக்கத்தின் பிதிபலிப்பு எல்லாம் பருவக்கோளாறு அருமை நண்பரே... வலைச்சரம் காண வருக...
பதிலளிநீக்குத.ம. 2
பாவை அவள் செய்தது சரியில்லைதான் ,இப்படி பருவச் சிறகை ஓடிக்கலாமா ?
பதிலளிநீக்குத ம 3
ஏக்கம் எழுத்தில் தெரிகிறது
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பதிலளிநீக்குபருவமாறி பாதை மாறினேன். காதலாலே.//
காதல் தழும்பல்... கவிதையாய்..இங்கு வழிந்ததுவே...நன்று
தம 4
ஏக்க வரிகள் பாராட்டுகள் தொடருங்கள்
பதிலளிநீக்குஉளம் கொண்ட கவிவரிகள் அய்யா!
பதிலளிநீக்குத ம5
பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்....
பதிலளிநீக்குகாதல் ஏக்கம்....
வெல்லட்டும்.
வேதா.இலங்காதிலகம்.
"//உன் காதல் வலையில் சிக்குண்டுதவியாய் தவிக்கிறேன் விடை தெரியாமல்.//"
பதிலளிநீக்குகாதல் வலையில் சிக்கிக்கொண்டால், அப்புறம் எப்படி அதிலிருந்து வெளியே வரமுடியும் சகோ?
உங்கள் ஏக்கங்களை அருமையாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
விரைவில் விடை கிடைக்கும் தம்பி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html
பதிலளிநீக்குஅய்யா ! உங்கள் கவிதை இளமை உணர்வுகளை எட்டிப்பார்க்க வைக்கிறது!நீ என்மீது "பார்க்கும் காதல்(ப்)பார்வை.
பதிலளிநீக்குஅணையாத தீயாக எரிகிறது…"....
அந்தத் தீயை அணைக்கவும்(!?) காதலிதானே வரவேண்டும்! அருமை!அருமை!!
ஆகா! ஆகா! ரூபன் அருமை!
பதிலளிநீக்குஅன்னைத் தமிழில் காதலின் பெருமை
வாகாய் எடுத்து வரைந்தது நன்றே
வாழ்த்தினைக் கூறியே வியந்தேன் இன்றே
சாகா உணர்வே காதலும் ஆகும்
சரித்திரம் அதனையே சாற்றியே போகும்
வேகா வெய்யிலின் வெம்மையும் உண்டாம்
வெண்மதி தந்திடும் குளுமையும் உண்டாம்
பதிலளிநீக்குகவிதையை இரசித்தேன். பாராட்டுக்கள்!
ஏக்கம் இப்படியாகத்தான் இருக்கும் போலும். ரஸனையான ஏக்கக் கவிதை. அன்புடன்
பதிலளிநீக்குகாதல் கவிதையில்
பதிலளிநீக்குவள்ளூவனுக்கும் வாய்ப்பு உண்டா?
வழங்கி உள்ளீர்கள் கவிஞரே!
"வள்ளல் குணம் கொண்டவளே.
வள்ளுவனின் குறலுக்கு சிறந்தவளே. - வரிகளின் மூலம்
ஏக்கத்தின் எதிரொளி திக்கெட்டும் கேட்கிறது
திகட்டாத கவியின் மூலம்.
நன்றி!
புதுவை வேலு
(எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாராய்!)
//பருவம் அறிந்து பருவச்சிறகை விரித்தேன்
பதிலளிநீக்குபருவமாறி பாதை மாறினேன். காதலாலே.//
காதல் ரசம் சொட்டும் கவிதை. பாராட்டுகள்.
அருமையான காதல் கவிதை! சிறப்பாக இருந்தது! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குபடித்ததும் எங்களது உணர்வுகளும் தீயாக எரிய ஆரம்பித்துவிட்டது. நல்ல கவிதை. நல்ல ரசனை.
பதிலளிநீக்குஆஹா யாருக்கோ சொல்வது போல இருக்கே சகோ...வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆகா துள்ளிவிளையாடும் எண்ணங்கள்...
பதிலளிநீக்குதம எட்டு
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவண்ணமிகு வலைச் சரத்தில்
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
அன்புள்ள ரூபன்
பதிலளிநீக்குமாமலையும் ஓர் கடுகாம் என்று பாவேந்தன் காதலின் வேகத்தைப் பாடியிருக்கிறர்ர். உங்கள் காதலின் வேகமும் அப்படித்தான். இருப்பினும் வேகத்தில் நேர்ந்த சிறு பிழைகளைச் சரிசெய்துவிடுங்கள்..
குறலுக்கு அல்ல குறளுக்கு....எறிகனைகள் அல்ல எறிகணைகள்...
கவிதையில் எப்போதும் தவறு நேரக்கூடாது...
வாழ்த்துக்கள்.
அன்புள்ள ரூபன்
பதிலளிநீக்குஎன்னை வேடந்தாங்கும் வெண்புறவே...... என்ன பொருள் இவ்வரிக்கு?
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
என்னை வேடம் தாங்கும் வெண்புறவே......
வேடம் என்பதற்கு-மனிதனாக இருப்பவன் பல வேடம் போட்டு நடித்தல் என்று சொல்ல முடியும்
தாங்கும் என்பதற்கு-பேச்சுவழக்கில் ஒரு பாரத்தை தாங்குதல் என்றும் சொல்வார்கள்
அதைப்போல இன்னும் ஒரு கருத்தை சொல்வார்கள் என்னவென்றால்
தாங்கும்=தாட்கூழ்=பேப்பர் போல .என்ற கருத்தும் உள்ளது
கருத்து
----
காதலியனவள் தன் காதலனை பல வேடங்கள் போட்டு காதலிக்கிறார்கள்..அப்படி காதலிக்கும் காதலி தன் காதலனை ஒரு பழைய காகிதம் போல கசக்கி ஏறியாமல் அன்பாக பார்க்க வேண்டும் அத்தோடு தன் காதலியை காதலன் இன்னும் ஒரு விதமாக கற்பனை செய்கிறான் எப்படி என்னால்
இரு நாட்டுக்கு இடையில் சமாதான செய்தியை தாங்கி செல்லும் வெண்புறா போல... தன் காதலனுக்கு அன்புமொழியை சுமந்து பேச வேண்டும் என்பதுதான் இதன் கருத்து...
இது என் அறிவுக்கு எட்டி வகையில்சொல்லியுளேன் ஐயா. ஏதும் கருத்து இருப்பின் சொல்லுங்கள்...
--------------------------------------------------------------------------------------------------------------------
என்னும் ஒரு கற்பனையாக
என்னை வேடந்தாங்கும் வெண்புறவே.
கருத்து- நாடு விட்டு நாடு வரும் பறவையினங்கள் தங்கி நின்று செல்லும் இடம் என்றும் சொல்ல முடியும்
காதலியனவள் எப்படி இருந்தாலும் தன் காதலனுடன் வாழ்வேண்டும் என்ற கற்பனையில் எழுதியுளேன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கவிதை.காதலி, காதலனுடன் நீண்டகாலம் மகிழ்ச்சியாக வாழட்டும்.
பதிலளிநீக்குஆஹா காதல் படுத்தும் பாட்டை அழகாக கவிதையா வடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபருவம் அறிந்து பருவச்சிறகை விரிக்கலாம்
பதிலளிநீக்குநன்றே காதல் வானில் பறக்கலாம்
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
உதித்ததை உதிர்த்த விதம் அருமை
பதிலளிநீக்குசகோ.
காதல் சிறகு முளைத்த கவிதை அழகு ரசித்தேன்.
பதிலளிநீக்குகாதல் ஏக்கம் மிகுந்த வரிகள்! ரசித்தோம் தம்பி!
பதிலளிநீக்கு