ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து
ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி.
ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில்
ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய்
காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது.
உன் மெல்லிய கூந்தலை தடவிட
என் மெய்யோடு நீ சாய்ந்தாய்
மேகமது குடை பிடிக்க
உன் மெல்லிய மூச்சுக் காற்று
எனக்கு சுவாசம் தந்தது.
என்னை விட்டுப்பிரிந்த போது
வாழ்க்கை நிர்க்கதியாகியது
இலையுதிர் காலம் போல.
வாழ்க்கை உதிர்கிறது.
நேற்றைய காற்றை.
உனக்கு தூது விடுகிறேன்
இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய்
இளவேனிக்காலம் போல்
என் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக
இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ரூபன்.
பதிலளிநீக்குஅடடா பெரிய கில்லாடி தான் காற்றையே தூது விடுவதென்றால் பாருங்களேன்.ம்..ம்..ம். வீசும் தென்றலே வேலியாகிறது என்றும் சொல்வீர்கள் போல் இருக்கிறதே ரூபன் வர வர கற்பனை அமர்க்களம் தான். நன்று நன்று வாழ்த்துக்கள் ரூபன் ....!
பதிலளிநீக்குஇளவேனிக்காலம் போல்
பதிலளிநீக்குஎன் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக
இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்
வரிகளில் வடிவது நுட்பமான உணர்வுகள்!
த.ம 3
பதிலளிநீக்குஆயிரமாவது.நாளில்ஆசை மனதில்
ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய் //
காதல் கவிதையை வாசித்தால் காதலி....
சுகந்தங்கள் வீசவைத்திட ஓடிவருவாள்...//
நல்ல கற்பனை ...
அருமை ...
பதிலளிநீக்குஅழகான வரிகள்.
பதிலளிநீக்குஇலையுதிர் காலம் போனால் இளவேனில் காலம் தான் காதலுக்கும்.
பதிலளிநீக்குஉணர்வுகள் வார்த்தைகளானக் கவிதை மனதைத் தொடுகிறது.
வாழ்த்துக்கள்.......
காற்றினைத் தூதென்று காதலிக்குப் பாட்டெழுதி
பதிலளிநீக்குஏற்றினீரோ உள்ளுணர்வை இட்டு!
அருமையான வரிகள்!
வாழ்த்துக்கள் சகோதரரே!
ஆஹா ரூபன் தம்பி! மனதைத் தொடும் வரிகள்! அதுவும் இறுதி இரு பத்திகள்!சூப்பர்!
பதிலளிநீக்குகவிதையை செதுக்கியது உமது உலி
பதிலளிநீக்குகலங்கச்செய்தது உம் மனதின் வலி
இதைக்கண்டு கலங்கிடும் அவள் விழி
இனியாவது கிடைக்கட்டும் உமக்கு வழி
இல்லாவிடில் உலகம் ஏசும் அவளை பழி
இறுதியாக அவளின் நினைவுகளை அழி
இல்லாவிடிலும் கொடுக்காதே உம்மை பலி
போதுமே கில்லர்ஜி கொடுத்த தலை வலி.
நல்ல கவிதை ரூபன்.
பதிலளிநீக்குArumaiyaana kavithai, ungalin ekkam ithil therikirathu. Ilai uthir kaalam endru irunthaal, athu meendum valarum..... nambikkaithaane vaalkkai !
பதிலளிநீக்குஉங்கள் கவிதையும் ,அதற்கு,கில்லர்ஜியின் கமென்ட் கவிதையும் பிரமாதம் !
பதிலளிநீக்குத ம 6
உங்கள் கவிதையும் ,அதற்கு,கில்லர்ஜியின் கமென்ட் கவிதையும் பிரமாதம் !
பதிலளிநீக்குத ம 6
அருமையான படைப்பு .
பதிலளிநீக்குஅருமை கவி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//நேற்றைய காற்றை.
பதிலளிநீக்குஉனக்கு தூது விடுகிறேன்// அருமையான வரிகள்!
காதல் வாழ்க !
பதிலளிநீக்குகாற்றைத் தூது விட்டுக் கனிந்த காதல்
சாற்றும் வரிகள் அனைத்தும் சிறப்பு !
வாழ்த்துக்கள் சகோதரா .
கவிதை அருமை ரூபன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
காற்றுவிடு துாதுவாய்க் கன்னல் கவிபடைத்தீா்!
போற்றுமுயா் பூந்தமிழைப் போந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நண்பா.....
பதிலளிநீக்குஇன்பத்தேன் அள்ளி இதயத்திள் சேர்த்துன்னில்
பதிலளிநீக்குஅன்பாய் இருந்தாளோ ஆங்கு !
அழகான உணர்வுகள் வாழ்த்துக்கள் ரூபன்
வாழ்க வளமுடன்
வணக்கம் !
பதிலளிநீக்குஅன்புச் சகோதரனே அடுத்த கவிதையையும் வெளியிட்டு விட்டேன் .
எனது ஆக்கங்கள் இரண்டும் குறித்த மின்னஞ்சலிற்கு அனுப்பப்பட்டுள்ளது .
இதோ பகிர்வுக்குத் தங்களையும் அன்போடு அழைக்கின்றேன் .
http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html#comment-form
மிகவும் ஆழத்தை உணர்த்தும் வரிகள்
பதிலளிநீக்குகவிதை அருமை சகோ..
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உங்கள் எண்ணங்கள் தொடர்ந்து கவிதையில் வரட்டும் ..
அருமையான கவிதை அதில் எனக்கு பிடித்த ஒரு வரி
பதிலளிநீக்குஇளவேனிக்காலம் போல்
என் வாழ்க்கையில் சுகந்தங்கள் வீசவைப்பாயாக
இல்லை என்றால் என்னை நினைத்து நினைத்து
ஆயுள் வரை கண்ணீர் வடிப்பாய்
அருமை அன்பு ரூபன் அவர்களே