செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014




வணக்கம் வலையுலக உறவுகளே.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டடிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன் & யாழ்பாவாணன்  நடத்தும் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.09.2014 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்...

போட்டியின் நெறி முறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு  அடிகளுக்கு  மிகாமல் எழுத வேண்டும்.
 
2.விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
 
3படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின் மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
 
4மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
 
5.கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப்    
பட்டிருக்கவேண்டும்.
 
6.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
 
7.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
 
8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.
 
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
 
10.உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com  
 
நடுவர்கள் :
1கவிஞர் கி. பாரதிதாசன். -பிரான்சு(http://bharathidasanfrance.blogspot.com )

2கவிஞர் இரமணி. -இந்தியா
(
http://yaathoramani.blogspot.com)

3.டொக்டர் திருமிகு முருகானந்தன். -இலங்கை
(
http://muruganandanclics.wordpress.com)
நிருவாகக்குழு

திரு.பொன்.தனபாலன்(அண்ணா)-      இந்தியா

திரு.இராஜ முகுந்தன் (அண்ணா)-      கனடா

திரு.
. பாண்டியன்-                                       இந்தியா

திரு.
கா. யாழ்பாவாணன்-.                            இலங்கை

திரு.
. ரூபன்
-                                                      மலேசியா

 

 
பரிசுகள்

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்கவாரீர்வாரீர்என்றுவரவேற்கிறோம்…!மேற்கொண்டுவிளக்கம்தேவையெனில்தயங்காது கீழ்குறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும்அன்பர்கள்தங்களின்பெயர்,மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும்

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-

rupanvani@yahoo.com &dindiguldhanabalan@yahoo.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

15 கருத்துகள்:

  1. தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் காலம் நீடிக்கப்படுகிறதா?

    பயனுள்ள தகவல், இப்பவே பதிவர்களுக்குச் சொல்லுவோம்!

    வலைப்பதிவர்களுக்கு நல்ல காலம் பிறந்திடிச்சு
    கவிதைப் போட்டியில் பங்கெடுக்கலாம் வாருங்கள்

    ரூபன் குழுவினர் அடுத்து
    தைப்போங்கலுக்கு நகைச்சுவைப் போட்டி
    சித்திரைப் புத்தாண்டுக்குச் சிறுகதைப் போட்டி
    என்றெல்லாம் பேசுறாங்கோ...
    அதனால தான் பாருங்கோ
    தீபாவளிக் கவிதைப் போட்டியில
    பங்கெடுக்க வாருங்கோ என
    அழைக்கின்றேன்

    பதிலளிநீக்கு

  2. கவிதை போட்டி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  3. நீடிக்கப் போவது நல்ல விடயம் தான் மேலும் பலர் கலந்து கொள்ளவதற்கு வழி வகுக்கும் என்பதில் மகிழ்ச்சியே தங்கள் நல்ல நோக்கம் தங்கு தடையின்றி நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. மென்மேலும் தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா !

    பதிலளிநீக்கு
  5. கவிதைப் போட்டி நன்றாக நடக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே!

    தமிழை வழர்க்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு
    என் உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

    காலம் நீடிக்கப்பட்டமை பங்குபெறத் தவறியோருக்கு நல்லதொரு சந்தற்பம்!
    முயற்சி பலிக்கட்டும்! வாழ்த்துக்கள் சகோ!

    பி.கு: தாங்கள் இட்ட மீள் பதிவில்..

    // 5.கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.//

    திகதி மாற்றப் படவில்லை. கவனத்தில் கொள்ளுங்கள்!!!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயம் தான், போட்டியை தவறவிட்டவர்கள் இணைந்துகொள்ள ஏதுவாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பங்கு பெறப் போகும் நண்பர்களுக்கும், வெற்றி பெறப் போகும் கவிஞர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் பங்கு பெறப் போகும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பணி பாராட்டத் தக்கது! தொடரட்டும் தங்கள் தொண்டு!

    பதிலளிநீக்கு
  12. தாமதித்தவர்களுக்கு பலன் தரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ..
    என்னுடைய சிறு முயற்சியை வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்..


    படக்கவிதை -- என்னழகி ...
    http://nallavankavithaigal.blogspot.in/2014/09/blog-post.html

    விருப்பக்கவிதை ...
    http://nallavankavithaigal.blogspot.in/2014/09/blog-post_9.html


    அன்புடன் ,
    ஜெயராம்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் தோழரே!

    தீபாவளி திருநாளை முன்னிட்டு கவிதைப்போட்டி நடத்தும் தங்களது முயற்சியை பாராட்டுகிறேன். போட்டிகளுக்கான கவிதைகளை எனது வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறேன். அதற்கான சுட்டிகள்...

    http://puthuvaipraba.blogspot.in/2014/09/2014_15.html

    http://puthuvaipraba.blogspot.in/2014/09/2014.html

    தாங்கள் கேட்டிருந்த மின்னஞ்சலுக்கும் கவிதைகளை அனுப்பிவைத்துள்ளேன். ஆனால் கவிதை கிடைக்கப்பெற்றமை குறித்தோ... போட்டிக்கு ஏற்கப்பட்டுள்ளமை குறித்தோ தகவல் ஏதுமில்லையே!

    தோழமையுடன்...
    புதுவைப்பிரபா

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்