புதன், 24 செப்டம்பர், 2014

அத்தை வீட்டுசின்னக் கிளி..


என் அத்தை வீட்டு சின்னக் கிளி
நீயே மாமரத்து இளம் குயிலே
மாமன் வரு வான் வென்று.
மல்லிகைப்பூ தலையில் சூடி
மந்தாரப் பொழுதினிலே.
ஒய்யாரம் செய்கிறாய்

ஒற்றை வழி போறேன் னென்று
ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
உன் உச்சந்தலையில் ஏற ஏற
என் ஞாபகமே உன் மனக் கடலில்
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட
நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில்
திக்கு தடுமாறும் என் இதயம்
நிம்மதியாய் உறங்கிறதே.
அத்த வீட்டு சின்ன கிளியாலே.
 

கடல் அன்னையின் மடியில் இருந்து
துள்ளிக் குதித்து ஓடிவரும்அலைகள் எல்லாம்
கரையை வந்து முத்தமிட்டு செல்லுமல்லவா.
அது போல் உன்னை விட்டு நான் பிரிந்து.
நெடு நாட்கள் வாழ்கிறேன். கடல் கடந்த தேசத்தில்.
நீ காட்டும் கருணை உள்ளம்
நீ காட்டும் அன்பு மொழியால்
நான் தினம் தினம் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரிக்கிறேன்.
அத்த வீட்டு சின்னக்கிளியாலே...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
குறிப்பு
மீண்டும் விருது ஒன்றை எனக்கு உகந்தளித்த
        திருமதி  கமலா ஹரிஹரன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்

 
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
                                முடிவுகள் மிக விரைவில் வெளியாகும்.....

27 கருத்துகள்:

  1. அத்தை மகள்கள் மகிழ்ச்சி அளிப்பவர்கள் தான்...
    அருமை

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை பார்த்ததும் சின்ன மாமியே உன் சின்ன மகள் பாடல் நினைவிற்கு வந்து விட்டது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ""ஒற்றை வழி போறேன் னென்று
    ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
    காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
    உன் உச்சந்தலையில் ஏற ஏற
    என் ஞாபகமே உன் மனக் கடலில்
    ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... ""

    நான் ரசித்த வரிகள் சார், மெட்டுப் போட்டுப் பாடும் அளவிற்கு எளிமையான கவிதைப் பாடல் சார்...

    பதிலளிநீக்கு
  4. அத்தைமகள் செல்லக்கிளிக்கு அருமையான பாடல் சகோதரரே...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா அத்தைமகள்+ மாமன்மகள் களை நினைத்தாலே இனிக்கும் கவிதைகள் பிறக்கும் ஸூப்பர் நண்பா,,,

    பதிலளிநீக்கு
  6. ""ஒற்றை வழி போறேன் னென்று
    ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
    காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
    உன் உச்சந்தலையில் ஏற ஏற
    என் ஞாபகமே உன் மனக் கடலில்
    ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... ""

    நான் ரசித்த வரிகள் சார், மெட்டுப் போட்டுப் பாடும் அளவிற்கு எளிமையான கவிதைப் பாடல் சார்...

    பதிலளிநீக்கு
  7. அடுத்த தேசத்தில் அத்தை மகள்
    மலேசியாவில் மாமன் மகன்
    மணக்க மணக்க கவிதைப் பூக்களை
    அள்ளி அள்ளி வீசுகிறார்...

    கவிதை இனிமை.

    த.ம ஓட்டுப் பட்டையைக் காணவில்லையே..? சகோ.

    பதிலளிநீக்கு
  8. நினைவு மறக்காதவளை
    நினைந்து நினைத்து
    மனம் தோயும் வரிகள்
    அருமை

    பதிலளிநீக்கு
  9. அத்தை மகள் மீது ஆசைப்படுவதெல்லாம் அறிவியல் பூர்வமா தப்புப்பா.... இருந்தாலும் கவிதை பாடிக்கலாம்....நல்லாயிருக்கு கவிதை

    பதிலளிநீக்கு
  10. மனதில் நிறைந்தவளுக்கு மழை பொழிவாய் ஒரு அருமையான காதல் கவிதை!!

    பதிலளிநீக்கு
  11. அழகிய உணர்வுகளின்....அப்பட்டமான கோர்வை...யாரந்த அத்தை மகள்?

    பதிலளிநீக்கு
  12. அத்தை மகள் மீதான பிரியத்தை காட்டும் அழகான கவிதை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி

    பதிலளிநீக்கு
  15. அன்பால் விளைந்த நல்ல காதல் கவி!
    அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  16. அருமையான அத்தைமகள் கவிதை வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. அழகான கவிதை...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. அற்புதமான கவிதை ரூபன்...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. அத்தை வீட்டு சின்னகுயிலை பற்றிய அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்..
    சீக்கிரம் அத்தை பெண் வீட்டுக்கு வரட்டும்.

    பதிலளிநீக்கு
  20. ரூபன் தம்பி! தங்கள் அத்தை வீட்டுச் சின்னக் குயில் அழகாக விரிந்துள்ளாள் தங்கள் இதயத்திலிருந்து!!

    அது போல் உன்னை விட்டு நான் பிரிந்து.
    நெடு நாட்கள் வாழ்கிறேன். கடல் கடந்த தேசத்தில்.// நீங்கள் இருவரும் சீக்கிரம் இணைந்திட எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! எங்களுக்கு எல்லாம் அந்தச் சின்னக் குயிலைக் காட்டுவீர்கள் தானே!!! தம்பி!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா.

      நிச்சயம்கூட்டில் அடைபட்டுக்கிடக்கும் சின்னக்குயில்மிக விரைவில் சிறகை விரிக்கும்... வெளியில்
      தங்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்துவேன்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  21. அத்தை வீட்டு சின்னக்கிளி
    காதல் கொள்ளுதோ
    இஷ்டப்பட்டு உந்தனுக்கு
    சொந்தமாகுதோ
    வாழ்த்துக்கள்! ரூபன் விரைவில் தங்கள் எண்ணம் பலிக்க.

    காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்
    உன் உச்சந்தலையில் ஏற ஏற
    என் ஞாபகமே உன் மனக் கடலில்
    ஆர்ப்பரிக்கும் ஆரவாரம் மிக மிக நன்று !

    பதிலளிநீக்கு
  22. ஒற்றை வழி போறேன் னென்று
    ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய்
    காதல் வசந்தம் கல்பனா சக்தியாய்...
    Enithu...enithu.....valarka...vaalka!
    Vetha.LANGATHILAKAM.

    பதிலளிநீக்கு
  23. நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்