புதன், 13 ஆகஸ்ட், 2014

இதயத்தை திருடியது நீதானே.....

 
 
உன் கருமேக கூந்தலில் நான் மயங்கி
நாழிகை இழந்த பொழுதாக
நான் உன்நினைவில்
நீரில் மூழ்கியமர்ந்திருக்கும் செங்கமலம்
நீரில் மெல்லிய இடையை
அசைத்து நடனமிடுவது போல.
நான் அலைபாய்கிறேன்
உன் நினைவில்...


உன் கற்பனையை 
கவியாக பாட்டெழுத
நாள் முழுதும்
தனியாக நானிருந்தேன்
வில்லழகு நெற்றியிலே
திலகமிட்ட மங்கையவள்
பூப்போட்ட உன்கரம்
பூபாளம் பாடுதடி


கருமேக இருளிலே
உன்பல்லழகின் வெண்மையை
பளிச்சிடவைத்தடி
மின்சாரம் இல்லைஎன்று
மின் குமிழ் அணைந்தது
உன் கயல் விழிக்கண்ணழகே.
எனக்கு இரவில்
மின்சார ஒளி தந்ததடி


கீறீட்ட மையழகு
உன்னுதட்டை முத்தமிட
பட்டழகு  உன்
மெய்யழகை போர்த்திட
வட்டமிட்ட உன் வதனம்
சித்திரை நிலவுபோல்
சிங்காரம் செய்யுதடி.
சிந்தையில் உன் நினைவு
சிலுங்காரம் செய்யுதடி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


 

 


48 கருத்துகள்:

  1. திருடிய இதயத்தை திருப்பிக் கொடுன்னு கேட்டு வாங்கிடுங்க ,ரூபன் ஜி !

    பதிலளிநீக்கு
  2. உன் கற்பனையை
    கவியாக பாட்டெழுத
    நாள் முழுதும்
    தனியாக நானிருந்தேன் அடடா நிஜம்மா ஓஹோ அப்புறம்.

    வில்லழகு நெற்றியிலே
    திலகமிட்ட மங்கையவள்
    பூப்போட்ட உன்கரம்
    பூபாளம் பாடுதடி அட அது வேறயா ம்..ம்..ம்....
    என்ன இது பக்குவமா வைக்கிறதில்லையா ரூபன் திருடு போறமாதிரியா கண்ட இடத்தில போட்டு வைப்பீங்க. என்ன ரூபன் சின்னபுள்ள தனமால்ல இருக்கு. பத்திரமா வையுங்க ok வா . கற்பனையும் கவிதையும் அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ....!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  3. ஆஹா அருமையான காதல் கவிதை!

    //சித்திரை நிலவுபோல் சிங்காரம் செய்யுதடி.
    . சிந்தையில் உன் நினைவு// நஸ்ரியாவா?!!!!! ஹாஹாஹாஹ........சும்மா தம்பி உங்களைக் கலாய்த்தோம்...தங்களது கவிதைப் பின்னணி தெரியும்......உங்கள் நினைவுகள், கனவுகள் மெய்ப்படும்......

    அதென்னவோ தெரியவில்லை.... பதிவுலகத்தில், காதல் கவிதை என்றால் பெரும்பாலும் நஸ்ரியாதான் புகழ்பெற்ற மாடலாக வலம் வருகின்றார்.......

    ஆவி where are you?!!!!







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ வந்திட்டேன் சார்.. அதான் நாம இப்போ ஆலியாவுக்கு மாறியாச்சே..! ஹிஹிஹி..

      நீக்கு
    2. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      அழகு.....அழகு..
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    3. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி அண்ணா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. தீபாவளி போட்டி கவிதைக்கு நீங்களும் ரெடியாயிட்டீங்க போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      நான் நடத்துனர்.. அதனால் பங்கு பற்ற முடியாது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  5. ரூபன்,
    உங்களிடம் கவிதா மனம் உண்டு. மொழியும் கைகொடுக்கிறது. இன்றைய நவீனக் கவிதைகளை உள்வாங்கப் பாருங்கள். உங்கள் முகவரி கொடுங்கள் நான் நவீனக் கவிதைகள் தொடர்பாக எழுதிய நூல் ஒன்றை அனுப்புகிறேன்.
    அன்புடன் கோ.புண்ணியவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      நான் முகவரி அனுப்புகிறேன் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  6. தங்களுக்கு நல்ல கற்பனை வளம் நண்பரே.

    நீங்களும் அவருடைய இதயத்தை திருடி விடுங்களேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இது நல்ல ஐடியா தான் இல்ல. see ஐடியா தரவும் ஆட்கள் இருக்கிறார்கள் ரூபன்.

      நீக்கு
    2. வணக்கம்
      நாங்கள் யார் அம்மா விழுந்தால் மீசையில் மண் ஓட்டாத மனிதர்கள்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  7. மனதை ஈர்க்கும் கவிதை.

    இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்; எனக்கும் பிடித்திருக்கிறது ரூபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. அருமையான கவிதை . இதற்க்கு ஒரு இசை அமைத்து பாட முயலாம் என்று இருக்கிறேன். தங்களுக்கு சம்மதமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா.

      வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி. நிச்சயம் செய்யுங்கள் அழகான வீடியோவாக(YOUTUBE)ஆகா செய்தால் நன்று...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  11. நல்ல கற்பனை ரூபன், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      நீண்ட நாட்களுக்கு பின்பு வருகை மகிழ்ச்சி... அண்ணா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  13. //நீரில் மூழ்கியமர்ந்திருக்கும் செங்கமலம்
    நீரில் மெல்லிய இடையை
    அசைத்து நடனமிடுவது போல.
    நான் அலைபாய்கிறேன் // ஆஹா என்ன ஒரு அழகிய உவமை!
    //கவியாக பாட்டெழுத
    நாள் முழுதும்
    தனியாக நானிருந்தேன்// ஓ அதுதான் வலைப்பக்கம் காணவில்லையா? :)
    //மின் குமிழ் அணைந்தது
    உன் கயல் விழிக்கண்ணழகே.
    எனக்கு இரவில்
    மின்சார ஒளி தந்ததடி// அப்பாடா, உங்களுக்காவது மின்வெட்டு பிரச்சினை எப்பொழுதும் இல்லை. மகிழ்ச்சி சகோதரரே..
    அருமையான கவிதை, ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்..வாழ்த்துக்கள் சகோதரரே!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      சகோதரி
      தங்களின் இரசிப்புக்கும் இரனைக்கும் மிக்க நன்றி
      த.ம வாக்கிற்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  14. கவிதையை ரசித்தேன். சிலுங்காரம் - புதிய வார்த்தை உபயோகம் கூடுதல் ரசனை...

    பதிலளிநீக்கு
  15. ''..நான் உன்நினைவில்

    நீரில் மூழ்கியமர்ந்திருக்கும் செங்கமலம் ...

    ஓ.கே முன்னேற்றம் தெரிகிறது...
    வாழ்த்துகள் ரூபன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. "உன் கற்பனையை
    கவியாகப் பாட்டெழுத
    நாள் முழுதும்
    தனியாக நானிருந்தேன்" என
    பாவரிகள் எடுப்பாக மின்னுகின்றன.

    கவிதைப் போட்டி
    வெற்றி பெறுமென நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  17. உன் கற்பனையை
    கவியாக பாட்டெழுத
    நாள் முழுதும்
    தனியாக நானிருந்தேன்...

    கவிதை எழுத இதுதானே நண்பரே தருணம்,,,, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  18. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  19. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  20. அருமையாக இருக்கு ரூபன்.. தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  21. கற்பனை அபாரமாக கவிதைபொழிகிறது.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  22. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  23. அருமையானதொரு கற்பனை! அசத்துகின்றன கவி வரிகள்!
    தொடர்ந்து அசர வைக்கும் திறமை பெருமைதான்!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  24. அழகான கவிதை.
    வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்