புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழன் முகவரி இழந்தோம்.....


பாரத தேசத்தின் சோக நாள்.
புன்னகை தவழ்ந்த வதனம்.
தமிழன் என்ற அடை மொழிக்கு.
அடையாளம் தந்த முகவரி.நீ அல்லவா?

இன்று எம்மை விட்டு பிரிந்த துயரம்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது-போல.
உலககெங்கும் வாழும் 
தமிழன் முகவரி -இழந்த நாள்.

ஆறாத  துயரங்கள் 
அலையலையாய் அடிக்கிறது.
கண்ணீர்க் கடலும் 
அலையலையாய் ஓடுகிறது.

வீதி எங்கும் ஊர்ரெங்கும்
 சோகக் கீதங்கள் இசைக்க.
பட்டொலி வீசும் தேசிய கொடிகள் 
அரைக்கம்பத்தில்

ஆடி ஆடி துக்கத்தை சொல்லுகிறது.
ஏழையின் வயிற்றில் பிறந்த. மகன்
ஏழையின் தோள் நின்று துன்பத்தை அறிந்தவன்.
துயரங்கள் துரத்தி வர  நெஞ்சசை நிறுத்தி

வெற்றி மேடை ஏறிய வெற்றித் திலகம்.
உன்னை இழந்த துன்பத்தால் வாடுகிறோம்.
பொன் மொழி வித்தகா.! உன் பூவுடல் 
சந்தன பேழையில் 

சரித்திரம் சொல் அடைக்கப்பட்டது.
நீ மடிய வில்லை.   நீ விதைக்கப்பட்டுள்ளாய் 
நீ ஏழைகளின் நெஞ்சில்.குடியிருக்காய்.
ஏழ்மை வாழ்வை கற்றுக் கொடுத்ததும் நீதான்.

ஏணியில் உயர வைத்ததும் நீதான்.
நீ மறைந்தாலும் நீ விட்டுச்சென்ற தடயங்கள்.
உன் ஞாப நினைவை தினம் தினம் 
வீசிக் கொண்டே இருக்கும்.


2-08-2015.மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு ( தமிழ் மலரில் வெளிவந்த கவிதை. இது. 

9-08-2015 இல் ஞாயிறு அன்று தேசிய நாள் ஏடு மக்கள் ஓசையில் எனது நேர்காணல் வருகிறது அதையும் விரைவில் தருகிறேன் பார்வைக்காக.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

19 கருத்துகள்:

  1. விதைக்கப்பட்டார். விருட்சமாய் எழுவார் . அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. தடயங்கள் மறையாது. மறைக்கவும் முடியாது. இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். நன்றி.
    இதுவரை பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அடுத்த திவ்யதேசம் செல்ல காத்திருக்கிறோம்.
    இம்மாதப்பதிவாக புத்தர் தொடர்பான ஒரு வரலாற்று நாடகத்தைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. தமிழன் என்ற அடை மொழிக்கு.
    அடையாளம் தந்த முகவரி

    அருமை அருமை
    உண்மை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. பிறப்பை சரித்திரம் ஆக்கிய கலாம் அவர்களுக்கு கலக்கல் சலாம் !

    பதிலளிநீக்கு
  5. நீ மடிய வில்லை. நீ விதைக்கப்பட்டுள்ளாய் //

    அருமை.
    விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் ரூபன் வேதனையான தினமே... அவர் வழி நடப்போம்.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் சகோதரரே!
    மாமேதை மறைவு இன்னும் இதயத்தில் தீரா வலியாக இருக்கிறது.

    உணர்வுகளைக் கொட்டிவிட்டீர்கள்!
    நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  8. வேதனையான தருணம் தான்.அவர் மடிந்தாலும் எல்லோர் மனங்களிலும் என்றும் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  9. மறவாத வேதனை! கலாம் மறைவை காலம் கூட மாற்றாது

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

    தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?
    தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?
    வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா...?


    உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா...?
    உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...?
    தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

    விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்


    விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்...?
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..?
    நன்றி.
    த.ம.7

    பதிலளிநீக்கு
  11. தமிழன் என்ற அடைமொழிக்கு
    விடை கண்டு தந்த வித்தகரின் சரித்திரம் சாகாது விழித்திருக்கும்
    வீர காவியம் பாடும்.
    வணக்கத்தை பெற்றுத் தந்த கவிதையும் நினைவில் வாழும் கவிஞரே!
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  12. அவர் எல்லோர் மனங்களிலும் என்றும் வாழ்வார்

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் ரூபன் ...
    தொடர்க உங்கள் பணி
    தம +

    பதிலளிநீக்கு
  14. விருட்சம் வளரும் நாள் தொலைவில் இல்லை..நம் மனங்களில் வாழ்கின்றார்....தாமதத்திற்கு மன்னிக்கவும்...வாழ்த்துகள் தம்பி!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்