வியாழன், 23 ஜூலை, 2015

பொறாமை


மனிதவாழ்வியல் தந்துத்தில்
மரணப் படுக்கை வரை.
நினைவோடு நெஞ்சோடு
முட்டி மோதி விளையாடும்
கடலலைபோல் 
பொறாமைஎன்னும் ஆணிவேர்
குற்றுயிராய் கிடக்கும் போது.
பிறர் கண்டு சீற்றம் அடிக்கிறது.

மனிதன் இடத்தில் இருந்தா.?,
பறவையிடத்தில் இருந்தா....?
விலங்கிடம் இருந்தா...?
பொறாமை பிறந்தது.

குயிலுக்கும் காக்கைக்கும் பகை.
பாம்புக்கும் கீரிக்கும் பகை.
மனிதன் மனிதனுக்கு பகை.
மனிதன் எதில் இருந்து கற்றானோ.
தெரியாத புதிராக என் மனம்.
அலையடிக்கும் தாமரை போல.
நிமிடத்துக்கு நிமிடம் தத்தளிக்குது.

பொறாமை என்ற வன் சொல்லை.
ஆயுதமாக எடுத்து.
எத்தனை மனிதர்களின் வாழ்க்கை.
புயலடித்த தேசம் போல. சிதர் உண்டு கிடக்கிறது.
ஆழ்மனதில் புதையுண்டு கிடக்கும்
ஆணவச் சொல் பொறாமையை.
புதிய ஆடையை கண்டவுன்
பழைய ஆடையை களைவது போல.
போகியில் போடுங்கள். 
நல்ல மனிதராய் வாழுங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உறவுகளே.
 கவிஞர் வல்வை சுஜேன் அவர்களின் வலைப்பூ பக்கம் சென்று கவிகளை படித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள்...நிச்சயம் செல்லுங்கள்.

21 கருத்துகள்:

  1. நன்று சகோ, பொறாமையைக் களைய வேண்டும் .
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக பொறாமையை விட்டு விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. தீயாகி தன்னையே தீய்க்கும் பொறாமை
    ஓயாமல் தொல்லை மிகும்!

    நன்றாக சொன்னீர்கள் பொறாமையை விலக்கினால் வாழ்வு இனிக்கும்.!நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. பொறாமையை பொசுக்கச்சொன்ன விதம் சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  5. பொறாமை களைதல் எல்லோர்க்கும் நன்றுதான்! அருமையான கவிதை! சில எழுத்துப்பிழைகள் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.( உ-ம்) காக்காக்கும்- காக்கைக்கும், காற்றானோ- கற்றானோ

    பதிலளிநீக்கு
  6. போறாமையை போகியில் போடுவோம்
    அருமை நண்பரே
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  7. இந்த போகியில் நானும் பங்கு பெறுகிறேன் :)

    பதிலளிநீக்கு
  8. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று இந்த ஆமையைத்தான் சொன்னார்களோ?!
    அருமை ரூபன்

    பதிலளிநீக்கு
  9. பாடலின் மையக்கருத்து அருமை! இந்தப்பொறாமையால் அன்பு அழிகிறது. துரோகம் பிறக்கிறது. மனிதம் மரணிக்கிறது! இப்படி எத்தனையோ!

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை ரூபன்...
    சிறுகதைப்போட்டிக்கான பரிசு கிடைத்ததை ஒரு பதிவின் மூலமாகவே சொல்லியிருந்தேன்.
    தாங்கள் பார்க்கவில்லை போலும்... சிரத்தையுடன் போட்டி நடத்தி பரிசையும் அனுப்பி வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பொறாமை, பொறாமைப்படும் அளவிற்கு நாம் அதனை ஒதுக்கிவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  12. பொறாமையை விட்டொழித்து வாழ்வோம்.அருமை சகோநன்றி
    தம 11

    பதிலளிநீக்கு
  13. பொறை வேண்டும் பொறாமை வேண்டாம்.

    அருமை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  15. பொசுக்குவீர் உங்கள் பொறாமையை என்றே
    விசுக்கினீர் பாட்டில் விரைந்து!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  16. போட்டி இருக்கலாம் பொறாமை கூடவே கூடாது....நல்ல கருத்தை முன் வைத்தமைக்கு தம்பி ரூபன் வாழ்த்துகள்! அருமை!

    பதிலளிநீக்கு
  17. பொறாமையை விரட்டி அடிக்கச் சொல்லும் உங்கள் கவிதை அருமை சகோதரா...

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்