புதன், 29 ஏப்ரல், 2015

ஈழம்...

ஈழம் என்ற வார்த்தை
சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது
பாடல் பாடிய புலவரின் பெயரும்
ஈழத்து பூதந் தேவனார்
அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு
ஈழம் என்ற நாமம் வந்தது.
ஒரு தேசத்தின் யுத்தம்
முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம்

 
வடக்கு –கிழக்கு எங்கள் தாயம்
வாழ்வோம் அதில் மட்டுமே
என்ற எண்ண குமுறல்கள்
ஈழத்து தந்தை செல்வா தொடக்கம்
ஒவ்வொரு தமிழனின் காதிலும்
எழுச்சி குரலாக எழுந்தது
அந்த எழுச்சியின் வளர்ச்சிதான்
தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது.

 
உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம்
எப்போது ஈழம்  என்ற சொல்லாலே
ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கு
முகவரியை கொடுக்கிறது.
சேர சோழ பாண்டியன் ஆண்ட பரம்பரை போல
தமிழனால் ஆண்ட இராச்சியம்
ஈழக்கனவுகள் பல தேசங்களில் திசை திரும்பி
சர்வதேசம் எங்கும் ஈழத்தின் எழுச்சிக்குரல்
ஆர்ப்பரிக்கும் கடலலைபோல் பொங்கி எழுகிறது….

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

30 கருத்துகள்:

  1. இனியாவது நல்ல காலம் சீக்கிரமே மலரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. காலம் ஒரு நாள் மாறும் கவலைகள் யாவும் தீரும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்

    பதிலளிநீக்கு
  3. காலம் தான் பதில் சொல்லணும் சூழும் என்று நம்புவோம் . தொடர வாழ்த்துக்கள் ரூபன் ...!

    பதிலளிநீக்கு
  4. ஆம் தம்பி! ஈழம் தமிழர்களின் நாடுதான்....விரைவில் நலம் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம் என்றாலும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தங்கள் எல்லோரது உணர்வுகளும் மிகவும் நன்றாகவே புரிகின்றது....

    பதிலளிநீக்கு
  5. காலம் மாறும் நண்பரே
    தங்களின் கவலைகள் தீரும்
    தம +1

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ஏக்கத்தை நானும் புரிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. விரைவில் தனி ஈழம் பிறக்கும்...

    பதிலளிநீக்கு
  8. அன்பு ரூபன்,
    உணர்ச்சிகளைச் சொல்லும் கவிதை அருமை.
    முகவரிகள் மாறலாம் . நம் முகமும் அகமும் இன்னொன்றாய் ஆவதில்லை.
    கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

    த ம 7.

    தமிழ்மனம் தமிழ்மணத்தில் இணைய!

    பதிலளிநீக்கு
  9. துடிப்பான உம் கவிதை
    துயர் துடைக்கும் தூயவரே!
    துன்பத்தை துடைத்தெறிந்தே
    துள்ளும் ஈழம் இனி!
    த ம 8
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  10. துடிப்பான உம் கவிதை
    துயர் துடைக்கும் தூயவரே!
    துன்பத்தை துடைத்தெறிந்தே
    துள்ளும் ஈழம் இனி!
    த ம 8
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  11. விரைவில் நல்ல காலம் வரட்டும் கண்டிப்பாக வரும். நம்பிக்கை தானே வாழ்க்கை !

    பதிலளிநீக்கு
  12. ஈழவரலாறு சொல்லும் கவிதை அருமை! உங்கள் துயரங்கள் ஒரு நாள் தீரும்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஒருநாள் ஈழம் உருவாகும்-நம்
    உணர்வுகள் அதற்குக் கருவாகும்
    திருநாள் ஆகும் அந்நாளே-உலகம்
    திரும்பிப் பார்க்கும் பொன்னாளே

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே.

    நல்ல ஆழ்ந்த பொருள் உணர்த்தும் கவிதை. உங்கள் மன ஏக்கம் கவிதையில் தெரிகிறது. காலம் மாறும்.! அந்நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லையென நம்புவோம். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    என் பதிவாக "நால்வரின் மனம் இறுதிப் பகுதி" நேரம் இருப்பின் கண்டு கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இனியெனும் நல்லது நடக்கும் என நம்புவோம் நண்பரே...
    தமிழ் மணம் ஐந்தாவது

    பதிலளிநீக்கு
  16. இனியாவது பிறக்கும் ஒரு நல்லநேரம்

    பதிலளிநீக்கு
  17. வ்வ்வ் தம+? எங்கே அந்த பட்டை ?

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ.
    உணர்ச்சி மிகுந்த வரிகள். விரைவில் அமைதி கிடைக்கட்டும். வாழ்த்துகள்
    த.ம.10

    பதிலளிநீக்கு
  19. அருமையிலும் அருமை
    தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே !

    பதிலளிநீக்கு
  20. விரைவில் நல்ல காலம் பிறந்து எங்கும் அமைதி தவழட்டும்.

    பதிலளிநீக்கு
  21. உணர்ச்சி மயமான கவிதை. நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லதே நடக்க வேண்டும்.
    த.ம.11

    பதிலளிநீக்கு
  22. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  23. மண்ணின் மைந்தர்கள் புதைக்கப் படவில்லை ,விதைக்கப் பட்டிருக்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  24. உங்களது மனச்சுமையைப் பகிர்ந்துள்ளீர்கள். காலம் மனப்புண்ணை ஆற்றும். நல்ல விடிவு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  25. ஈழப் புதல்வர்கள் ஈந்த குருதிகளால்
    வாழும் நிலங்கள் வளமாகும் - சோழப்
    பரம்பரை சேர்த்த புகழெலாம் சேர்ப்பர்
    உரமான வீரர் உயிர்த்து !

    ஆழமான உணர்வுகளின் ஆதங்கம் கண்டு அதிசயித்து நிற்கின்றேன் ரூபன் அருமை தொடர இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    வலையுலக நட்புகள் அனைவருக்கும் இனிய மேதின நல்வாழ்த்துக்கள்

    தம 14

    பதிலளிநீக்கு
  26. நல்ல காலம் விரைவில் மலரும் சகோ. தம +1

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்