புதன், 22 ஏப்ரல், 2015

நிலவே நீ முகம் காட்டு...


நிலவே ஒரு நாள் முகம் காட்டு
உன் முகவரி எனக்கு தெரியட்டும்
தவழ்ந்து தவழ்ந்து நீந்துகிறேன்.
நினைவு உள்ளே வரும் வரை
தவமாய் இருந்து துாங்குகிறேன்
தாவித்தாவி பிடிக்கிறேன்
தள்ளித்தள்ளி போகிறாய்
தவமும் கலைந்து போகுதடி
தாவி அணைக்க துடிக்கிறேன்.


இருட்டறை கொண்ட மாளிகையில்
இருளும் சூழ இருக்கின்றாய்
ஒற்றப்பார்வை பார்க்கிறாய்
ஓரக்கண்ணாய் தெரியுதடி.
ஓடி ஓடி வருகிறேன்
உள்ளம் அணைத்து. பிடிப்பதற்கு.
கையும் ஒன்றை ஊன்றுகிறாய்
கருணையுள்ளம் தெரியுதடி.


சிவந்த சேலை உடுத்துக்கிட்டு
சிவத்த சூரியன் வருகையில்
மேனியும் அக்கினி நிறத்தில் தெரியுதடி.
வருவேன் வருவேன் இருந்திடுவாய்
காலம் விரைவில் பதில் சொல்ல
கனப் பொழுதில் வந்திடுவேன்.
சொந்தம் நட்பும் பலம் கொள்ள
இணைவோம் வாழ்வில் ஒன்றாக.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

குறிப்பு-சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடைபெற உள்ள போட்டியின் விதிமுறைகள் அடங்கிய பதிவு நாளை வலம் வரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்.
 

 
 

16 கருத்துகள்:

  1. ஏக்கமுற தந்தகவி துக்கத்தின் தாக்கமதை
    நீக்கும் விரைந்து மகிழ் !

    அருமை அருமை வாழ்த்துக்கள் ரூபன் ...!

    \\\\\சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடைபெற உள்ள போட்டியின் விதிமுறைகள் அடங்கிய பதிவு நாளை வலம் வரும் என்பதை மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன். ///////
    ஆவலோடு எதிர்பார்க்கிறேன் . நன்றி !

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே புரிந்து கொண்டேன்... அட்வான்ஸ் வாழ்த்துகள்.
    விரைவில் தவமும் ரூபமாய் இணையட்டும்.
    தமிழ் மணம் மூணாவது.

    பதிலளிநீக்கு
  3. நிலவு கவிதை அழகு கவிதை----சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  4. நிலவு கவிதை அழகு கவிதை--சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு முகம்காட்டிய இந்நிலவு மிக அருமை.
    உங்கள் தளத்தினைத் திறந்தால் வேறு தளத்திற்கு திருப்பப்படுகிறது.
    கவனிக்கவும்.

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே.

    அழகு தமிழில் எழுதிய கவிதை அருமை.

    \\சொந்தம் நட்பும் பலம் கொள்ள
    இணைவோம் வாழ்வில் ஒன்றாக.//

    அந்த நாள் தங்களுக்கு விரைவில் வந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பரே அருமை
    தம +1
    சொந்தம் நட்பும் பலம் கொள்ள இணையுங்கள் வாழ்வில் ஒன்றாக.

    பதிலளிநீக்கு
  8. #இணைவோம் வாழ்வில் ஒன்றாக. # அந்த இனிய நாள்,விரைவில் வரட்டும் :)

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்