வியாழன், 26 பிப்ரவரி, 2015

உன்னைப்பற்றிய விசாரிப்பு........


உன்னை பார்த்த நாள்முதலாய்
உன்னை பற்றிய விசாரிப்பு தொடங்கியது.
காலங்கள் நாட்கள் மெதுவாக நகர
உன் மீது வைத்த பாசமும்
கரை புரண்டு ஓடியது.
ஆகாய நட்சத்திரங்கள் எல்லாம்
விட்டு விட்டு எரியும்
நட்சத்திரங்களாக காட்சியாக விரிகிறது.

படுக்கை அறையில் கண்மூடி தூங்கயில்
உன் விம்பங்கள் சுவர் எல்லாம் தெரிகிறது
பல் துலக்கப்போனால்  நீண்ட நேரம் எடுக்கிறது.
உன் நினைவுதான் நெஞ்சறையை வருடுகிறது.
வற்றாத ஜீவ நதி போல  உன்
நினைவை வினாடிக்கு வினாடி
ஞாபகமாய் வீணை ஒலி மீட்கிறது.
என் இதய நாளங்கள்.



என் கணினியின் திரையில் கூட
உன் உருவந்தான் மின்னுகிறது.
என் கணினியின் என்றர்(ENTER) கீயை
அழுத்தும் போது. உன் நினைவை
அழுத்துவது போல ஒரு உணர்வு
என்றென்றும் காதல் நட்பினால்
காலம் கடக்கிறது. உன் காந்தப் பார்வை
எப்போதும் என்மீது வீசட்டும்…….

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தைப்பொங்கல் சிறப்பு சிறுகதைப்போட்டி முடிவுகள் மிக விரைவில்....

 

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  2. ஆஹா காதல் வந்திடுச்சி ரூபனுக்கு.
    காதல் பொங்கும் கவிதை

    பதிலளிநீக்கு
  3. சிந்தனையெல்லாம் சிவ மயம் என்பதுபோல் சிந்தனையெல்லாம் காதலிமயமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. சிந்தனையெல்லாம் நிறைந்து வேறெந்த சிந்தனைக்கும் இடம் இல்லாமல் செய்யும் இந்தக் காதலி யாரோ? காதல் ரசம் ததும்பும் வரிகள் பாராட்டுக்கள் ரூபன்

    பதிலளிநீக்கு
  4. என்ட்டர் கீ - மனதில் நுழைந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காதல் நட்பினால் விளங்கவில்லையே?. மறந்து பக்கத்தில் இருக்கும் டேலிட் ( Delete) ல் பட்டுவிடாதே?. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மனதில் அவள் என்ட்டர் ஆனதினால்
    ரூபன் தம்பி நமக்கு கவிதைகள் பொழிகிறார்....

    ரசித்தேன் தம்பி.
    தம 5

    பதிலளிநீக்கு
  7. என்றும் (ENTER) தட்டாமல் வாழ்வேது என்று பாடிய சோத்துக்குடி சுவாமிகளின் பாடலொன்னு நினைவு வருகிறது நண்பரே.... அருமையான வரிகள்.
    தமிழ் மணத்தில் நுளைக்க..... 7

    பதிலளிநீக்கு
  8. முடிந்து போனவரா ,அணுகியவரா ..enter என்பதற்கு எந்த அர்த்தம் பொருத்தம் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  9. அருமை!பாடல் காதலுக்கே பெருமை!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் ரசித்தோம்....அதுவும் அந்த எண்டர் கீ...அருமை! தம்பி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அருமை அருமை
    எண்டர் கீயை அழுத்தினாலே
    நினைவுகளும் என்டர் ஆகிறதோ
    அருமை நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு

  12. "வற்றாத ஜீவநதி போல - உன்
    நினைவை வினாடிக்கு வினாடி
    ஞாபகமாய்" என அழகாக
    உள்ளத்தில் ஊறும்
    எண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

  13. "வற்றாத ஜீவநதி போல - உன்
    நினைவை வினாடிக்கு வினாடி
    ஞாபகமாய்" என அழகாக
    உள்ளத்தில் ஊறும்
    எண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. நட்சத்திரங்களின் ஒளி மேலும் பிரகாசிக்கட்டும் சகோ.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு. நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பூவுக்கும் வரலாமே !

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்