பள்ளியறை-முதல்
கட்சியறை-வரை
ஈழத் தமிழரின் மரணக் –கோலத்தின்
உதிரம் துவைந்த
பதாதைகள் ஏந்தியபடி
தமிழக பாதைகள் அதிர்ந்த வண்ணம்
உலக அரங்குக்கு பறைசாற்றும்
உரிமைக்குரல் தமிழகம் எங்கும் -ஒலிக்கிறது,
எம் தொப்புள் கொடி உறவாம்
இரக்கமற்ற மரணத் தாண்டவத்தின்
விளிம்பில் சாய்ந்தவர்கள்.
கோர முகத்தை கிழிக்கும்
கோடித் தமிழர்களின்-உணர்ச்சிக்குரல்
தமிழகத்தில் அங்கும் இங்கும்-வெடிக்கிறது,
உணர்ச்சிகளின் உத்வேகத்தில்
உணர்வுகள் மேல் எழுந்து
உரிமைக்காக வீர காவியமான
வீர மைந்தர்களின் உயிர்கள்-எத்தனை
அவர்களே
எங்களின் காவல்-தெய்வங்கள்
அவர்கள்
காட்டிய பாதையை-நிலை நிறுத்தி
ஊர் எங்கும் சோக கீதங்களும்
சோகக் கொடிகள் அரைக்- கம்பத்தில்பறக்க
கடைகளும் கல்லூரிகளும் பூட்டுப் போட்டு
புனிதமான அறவழிப் போராட்டம்
தமிழகம் எங்கும் பூக்கிறது,
சுதந்திர
தமிழீழத்தாயகம் மலரும்வரை
எங்களின்
போராட்டம் ஓயாது
என்ற
ஆண்ம சுத்தியுடன்
உண்ணா
விரதம்மென்றும்
சாலை
மறியல் என்றும்
சார்த்வீக
வடிவில் மாணவர்-புரட்சி வெடிக்கிறது,
சுதந்திர
தமிழீழம் மலரும் வரை
எங்களின்
தீப்பிழம்பு
எரிந்துகொண்டேயிருக்கும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உணர்வின் வெளிப்பாடு தகிக்கும் கவிதைவழியாக.
பதிலளிநீக்குதீப்பிளம்பாய் எரிந்து கொண்டே இருக்கட்டும்
பதிலளிநீக்குதம +1
தீர்வு விரைவில் வரும் தம்பி...
பதிலளிநீக்குஉணர்ச்சிகரமான வார்த்தைகள் தீயாய் எரிகின்றது..
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
சுதந்திர தமிழீழம் மலரும் வரை
பதிலளிநீக்குஎங்களின் தீப்பிளம்பு
எரிந்துகொண்டேயிருக்கும்
நல் வழி பிறக்கும் வரை தீ கொழுந்து விடட்டும்
தகிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடாய் ஒரு கவிதை (கவனிக்கவும்: பிளம்பு > பிழம்பு & மணவர் > மாணவர் )
பதிலளிநீக்குத.ம. (4 )
உணர்ச்சிகளின் குவியல் தீப்பிழம்பாக, விரைவில் துன்பங்கள் தீர்ந்து நமது தொப்புள் கொடி உறவுகளின் நிலைமை முன்னேற்றம் அடைந்து இன்பம் காணும் நாள் வரும்.
பதிலளிநீக்குநெய்யில் எரிகின்ற நெருப்பல்ல
பதிலளிநீக்குஇது
இலங்கைத் தமிழர்
செந்நீரில் எரிகின்ற நெருப்பல்லவா
இதனை எப்படி அணைப்பது?
ஐ.நா. தான்
அதற்கான தீர்வைக் கூறவேண்டுமே!
நல்ல தீர்வு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்போம். உணர்ச்சிகளின் கொந்தளிப்பு வார்த்தைகளில் எதிரொலிக்கிறது நம்பிக்கை வைப்போம் நல்லதே நடக்கும்
பதிலளிநீக்குமனம் சுட்டது
பதிலளிநீக்குஅற்புதமான ஆக்கம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
பதிலளிநீக்குஉணர்ச்சிகளின் குவியல் கவிதை வடிவில்... விரைவில் நல்லது நடக்கும் தம்பி
பதிலளிநீக்குதம+1
உணர்வின் வெளிப்பாடு அருமை...
பதிலளிநீக்குவிரைவில் அந்நாள் மலரட்டும்.
இனியும் ஆளுவோர் நாள் கடத்தும் நாடகமாட ஐநா சபை இடம் தரக்கூடாது ,போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டு தமிழர்களுக்கு சம உரிமை தரப் படவேண்டும் !
பதிலளிநீக்குத ம 8
ஆற்றாமையின் அனல்க்கொதிப்பு கவிதையாக!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகொந்தளிக்கும் கொப்புளங்கள்
வெடித்தே சிதறியதோ?
எரிமலை!
பிழம்பாய் உருவெடுத்து!
கக்கிய தீக்குழம்பு!
திக்கெட்டும் பரவி சென்று
கொடியவனின் விக்கெட்டை
வீழ்த்தட்டும்!
விடியலை...
நாம்!
பெற வேண்டும்
நலமாக!
நன்றியுடன்,
புதுவை வேலு
உணர்வுபூர்வமான கவிதை ரூபன்.
பதிலளிநீக்குநல்ல தீர்வு கிடைக்கும் விரைவில்.
வாழ்த்துக்கள்.
நண்பரே!
பதிலளிநீக்குநல்வணக்கம்!
தங்களது இந்த பதிவு இன்றைய
"வலைச்சரம்" பகுதியில்
சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
வாழ்த்துக்கள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
ஆறாத ரணங்கள் ஆரும் நாள் எதிர் நோக்கியே உள்ளோம்.
பதிலளிநீக்குஆறாத ரணங்கள் ஆறும் என்ற மலையளவு நம்பிக்கையுட்ன் காத்து இருப்போம்.
பதிலளிநீக்குஎதிர்பார்ப்பு நிறைவேறட்டும்
பதிலளிநீக்குஉணர்ச்சிமயமான கவிதை ..நம்பிக்கையுடன் காத்திருப்போம்
பதிலளிநீக்குஎரியட்டும் தீ...
பதிலளிநீக்குஎதிர்பார்ப்பது
நிகழும்வரை.
கருப்பும் வெண்மையுமாய்
வண்ணமற்றுக் கிடக்கிண்றது உறவுகள்.
நல்ல தீர்வு விரைவில் கிடைக்கட்டும்.....
பதிலளிநீக்கும்ம்ம் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு....நல்லதொரு தீர்வு விரைவில் கிட்டட்டும்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் அருந்தகையீர்!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் கருத்தினை தருக!
http://blogintamil.blogspot.fr/
நட்புடன்,
புதுவை வேலு
முதல் முறையாக தங்கள் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன்,
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு!
நல்ல தீர்ப்பு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை!
த ம 10
தீயாய் சுட்டது உங்கள் கவிதை -எரியும் நெருப்பு அணையும் விரைவில்
பதிலளிநீக்குசரஸ்வதி ராசேந்திரன்