புதன், 4 பிப்ரவரி, 2015

ஏளனம்


தீயினால் சுட்ட புண் ஆறும்
நாவினால் சுட்ட வடு ஆறாது.
ஏழையை கண்டு பணக்காரன் சிரிப்பது.
பணக்காரனை கண்டு ஏழை ஏங்குவதும்
கடும்சொல் வாசகம் காட்டாத்து தண்ணீர்போல்

மேல் வர்க்க நாடுகளை விட
வளர்ந்து வரும் நாடுகளில்
ஏளனம் சிரித்து மகிழ்கிறது.
ஏளனம் என்ற  வார்த்தை
ஏணி போல் உயர முயற்சிப்பவனை
சறுக்கிவிழ வைப்பதும் ஏளனம்.


ஆசிரியரால் மாணவன் ஏளனம்
பெற்றோரால் பிள்ளைகள் ஏளனம்
பணக்காரனால் பிச்சைக்காரன் ஏளனம்
நண்பர்களால் சக நண்பர்கள் ஏளனம்

 மக்களால் நடிகர்களுக்கு ஏளனம்
ஊனப்பிறப்பால் மக்களால் ஏளனம்
ஏளனம் என்ற கடும் சொல் வாசகம்
அதையும் தாண்டி நீச்சல் போட்டால்
வாழ்க்கையில் உயர்வது நிச்சயம்.


ஏளனம் என்ற சொல்வீச்சால்
மரணம் என்ற வாழ்க்கையும்
எந்த மனிதனுக்கும் வந்தடையும்.
ஏளனம் செய்தவன் தானக திருந்த வேண்டும்


உண்மையாக ஏளனம் செய்யப்பட்டவன்
மனதில் இறுமாப்பு கொண்டு
முன்னேறியவர்கள் பலர்
ஏளனம் செய்தவன்தாழ்வான்
என்ற நிலைஉறுதி…

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

25 கருத்துகள்:

  1. தான் வல்லவன், தன்னைப்போல யாரும் இல்லை என்ற இருமாப்புக் கொள்பவர்களால்தான் ஏளனம் ஆபரணமாகவே அணியப்படுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் ஆழம் நிறைந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள் ரூபன்

    பதிலளிநீக்கு
  3. ஏளனம் என்ற வார்த்தை
    ஏணி போல் உயர முயற்சிப்பவனை
    சறுக்கிவிழ வைப்பதும் ஏளனம் //

    100/100 உண்மை சகோ

    தம 2

    பதிலளிநீக்கு
  4. சரி தான் தம்பி...

    பலருக்கும் ஏளனம் படிக்கட்டுகள்...

    பதிலளிநீக்கு
  5. சிந்தனைக்குறிய நல்ல வரிகள் நண்பரே.... அனைத்தும் அருமை

    //மக்களால் நடிகர்களுக்கு ஏளனம்//

    இந்த வரிகள்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது காரணம் பண்டைய காலத்தில் இவர்களை //கூத்தாடிகள்// என்று ஏளனம் செய்தது உண்மையே ஆனால் ? இன்று கடவுளை போல பாலாபிஷேகம் செய்கின்றானே மானிடன்.

    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  6. ஏளனம் அருமையாய் வந்திருக்கிறது...
    வாழ்த்துக்கள் ரூபன்....

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனை, ரூபன். ஏளனம் என்பதை நாம் தவிர்க்க முடியாது. மனம் வருந்தாமல் அதனை நேர்மறையாக எடுத்துக் கொண்டு முன்னேற உதவும் படிக்கட்டுகளாக எடுத்துக்கொண்டு ஏளனத்தை நம் காலடியில் போட்டு மிதித்துத் தள்ளிவிட்டு நேர்பாதையில் நாம் நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. ஏளனம் கண்டு படுத்து விட்டால் எழ முடியாது ,சாதித்துக் காட்டி அவர்களின் முகத்தில் கரி பூச வேண்டும் :)
    த ம 5

    பதிலளிநீக்கு
  9. ஏளனம் என்ற வார்தையை தூக்கிவீசி விட்டு
    வீருகொண்டு எழுபவன்தான் மனிதன் தனது
    முயற்சியால் தரணியையும் ஆளும் வள்ளமை
    பெற்றிடுவான்சகோ.

    பதிலளிநீக்கு
  10. உண்மை உண்மை!

    ஏளனம் கொண்ட உள்ளம்
    தாழ்ந்து போகக் கூடாது
    ஏணிப் படியாய் எண்ணி
    ஏறிப் போக வேண்டும்
    எதிர் நீச்சல் தனைப்
    போட்டால் முன்னேறி விடலாம்
    என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    அருமை! பதிவுக்கு நன்றி ரூபன் !

    பதிலளிநீக்கு
  11. ஏளனம் என்ற வார்த்தை
    ஏணி போல் உயர முயற்சிப்பவனை
    சறுக்கிவிழ வைப்பதும் ஏளனம்.//

    சிறப்பான வரிகள்! கவிதையும் அவ்வாறே! நாங்கள் சொல்ல நினைத்ததை கில்லர்ஜி சொல்லிவிட்டார்...

    பதிலளிநீக்கு
  12. ஏளனத்தை ஏளனம் செய்வோம். அருமையான நேர்மறைக் கருத்தினைக் கொண்ட வரிகள். நன்று.

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான தலைப்பு ஏளனத்தைக் கண்டு பயப்பட்டால் நம்மால் வாழ முடியாது ஏனெனில் இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் ஏசும் பிறரின் ஏளனங்களையே நமது வெற்றிக்கல்லாகக் கொண்டு மேலே போகத்தான் நாம் எப்போதும் முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. பெருமைத்தனத்தின் உச்சக்கட்டம் ஏளனம்
    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை.
    ஏளனம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது பெரிய சாதனைதான்.

    பதிலளிநீக்கு
  16. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. தீயினால் சுட்ட புண்.............
    தொடர்கிறேன் ரூபன்.
    த ம 9

    பதிலளிநீக்கு
  18. ஏளனம் தவிக்க வேண்டிய ஒரு குணம். கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ஏளனம் செய்பவர்களை ஏளனம் செய்யும் கவிதை.
    த.ம.11

    பதிலளிநீக்கு
  20. ஏளனம் என்ற கடும் சொல் வாசகம்
    அதையும் தாண்டி நீச்சல் போட்டால்
    வாழ்க்கையில் உயர்வது நிச்சயம்.
    well said Rupan....
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  21. அர்த்தம் பொதிந்த கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்