புதன், 29 அக்டோபர், 2014

குடிகார அப்பாக்கள்


குடியும் குடித்தனமும் செந் தமிழும் நாற்பழக்கம்
சில அப்பாக்களின் மறையா விழுமியங்கள்
வாழ்நாள் முழுதும் சாலையோரம்
வரம் பெற்ற மனிதனாய்
கவலையற்று தூங்குகிறார்கள்
பல அப்பாக்கள்
இவர்களிடம் ஏன்?அப்பா என்றால்
அகராதியில் இல்லாத  செந்தமிழ் பிறந்திடும்


பகலவனின் ஒளிக்கீற்றின் வெம்மையை தாங்கி
பொண்டாட்டி களத்துக்கு களம் போய்
பிச்சை எடுத்து வரும் நெல்மணியை
சாராய கடையில் விற்றுப் போட்டு
சாராயம் குடிக்கும் குடிகார அப்பாக்கள் எத்தனை பேர்
பிள்ளைகள் கிழிந்த உடுப்புடுத்து
நாலு பேர் ஏழ்மையாய் சிரிக்க
தாங்க முடியாமல் வீட்டின் மூலையில்
இருந்து கொண்டு அழும் பிள்ளைகள் எத்தனை பேர்


தொட்டிலிலே பச்சிளம் குழந்தை பாலுக்கு அழ
புருசனை நம்பி பால்மா வேண்டி வா என்று.
காசி கொடுத்தால் சாராயக் கடையில்
மதுசாரம் ஊற்றும் அப்பாக்கள் எத்தனை பேர்
பொண்டாட்டி பிள்ளைகள்
நாளெல்லாம் பட்டினியாக் கிடந்தாலும்
பத்து ரூபாய் இருந்தாலும் பக்குவயமாய்
குடித்திடுவர் மதுசாரம் நம் அப்பாக்கள்


மதுசாரம் ஒழித்திடுவோம் மதுசாரம் ஒழித்திடுவோம்
ஊர் அதிர பறையடித்தாலும்
மறுநாள் காலையிலே.திர்ப்பக்கம்
மறு கடையும் திறந்திருக்கும்
குற்றங்களை சொல்லி! மேல் இடத்தில் முறையிட்டால்
முறையிட்ட மறு கனமே அவர் உயிர் போய் விடுமே.
இந்த நிலை தொடர்ந்தால் குடிகார அப்பாக்கள்
ஊரெல்லாம் குடியும் குடித்தனமும்
கும்மாளம் தொடருமையா.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

20 கருத்துகள்:

  1. இதனால் குடும்பமே சீரழியும் அவலநிலைத் தெரிந்தும் குடிக்கிறார்கள்அதனால் குடும்பத்தைக் கெடுக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல விடயம் ரூபன்! வலியையும் வேதனையையும் உணர்ந்து வடித் துள்ளீர்கள் .நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் இந்த மதுவை ஒழிப்பது எப்படி என்று தான் தெரியவில்லை. மிக நன்று வாழ்த்துக்கள் ரூபன் !

    பதிலளிநீக்கு
  3. குடியைக் கெடுக்கும் என்பதை அறிந்தும் ஏன் தான் குடித்துத் தங்களையும் தங்கள் குடியையும் கெடுத்துக் கொள்கின்றார்களோ?! மிக அருமையான வரிகள் ரூபன் தம்பி!

    பதிலளிநீக்கு
  4. சில அப்பாக்களின் மறையா விழுமியங்கள்
    வாழ்நாள் முழுதும் சாலையோரம்
    வரம் பெற்ற மனிதனாய்
    கவலையற்று தூங்குகிறார்கள் //

    வீதியோரம் கோனலாய் கிடப்பார்கள்...

    நெல்மணியின் அருமை தெரியா..குழந்தையின் அழுகை தெரியா குடியே தெரியும் இவர்களுக்கு...

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  5. குடிக்க பிறந்து விட்டு குடியில் ஏறுவது ஏனோ இவர்களுக்கு ...

    பதிலளிநீக்கு
  6. திருடனாப் பார்த்து திருந்தணும்,இது குடிகாரனுக்கும் பொருந்தும்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை வருண்...

    குடிகாரர்கள் அவர்களாகப் பார்த்துத்தான் திருந்தணும்...

    பதிலளிநீக்கு
  8. விழிப்புணர்வு எப்போது வருமென்று தெரியவில்லை..
    அவனவன் திருந்த வேண்டும்...

    தோழரே தீபாவளி கவிதை போட்டி முடிவுகள் வெளி வந்துவிட்டதா..

    பதிலளிநீக்கு
  9. அவர்களாகத் திருந்தாவிடில் இதற்கு முடிவு ஏது......

    நல்ல கவிதை ரூபன்.

    பதிலளிநீக்கு
  10. இவர்கள் அப்பாக்கள் அல்ல தப்பாக்கள்.
    குடிகாரர்கள் அப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு இதுவரை விஞ்ஞானம் சரியான வழி சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதை... பாராட்டுக்கள் கவிஞரே....


    அது சரி...தீபாவளி கவிதை போட்டி என்று ஒன்று அறிவித்து நடத்தினீர்களே .... அதன் முடிவுகள் என்னாயிற்று தோழர்.... முடிவு வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை...அது தொடர்பான பதிவினையாவது இடுங்கள் தோழர் ... தீபாவளி முடிந்து பத்துநாட்கள் ஓடியபின்னும் அது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தத்தையும் ஒருவித வெறுப்பையும் மனதில் வளர்த்துவருகிறது. இந்த கருத்திற்கு பின்னால் இருக்கும் உணர்வினை உணர்ந்து உடனே ஒரு பதிவு இடுவது அதில் பங்கேற்ற என்போன்றவர்களுக்கு ஆறுதலாகவாது இருக்கும் தோழர் ......

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே.!

    தீயப்பழக்கங்கள், குடும்பத்தினரையும், தங்கள் உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் நல்ல சிந்தனையில் இருக்கும்போது உணர்ந்தாலும் ௬ட, மறுபடியும் அதே தவறான பாதைக்குதான் செல்கிறார்கள்.! தாங்கள் எழுதிய கவிதையில் அந்த உண்மைகள் தெறிக்கின்றன.அவர்கள் தானாக புரிந்து திருந்தினால் நல்லது.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.



    பதிலளிநீக்கு
  13. மதுவினை எதிர்த்துத் தாங்கள் எழுதிய இக்கவிதை அருமை.
    ஆனால் இக்கொடுமை தீர வழியே இல்லையா..?

    பதிலளிநீக்கு
  14. //இவர்களிடம் ஏன்?அப்பா என்றால்
    அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்
    //
    அருமை தோழர் வாழ்த்துக்கள் தொடர்க ..

    பதிலளிநீக்கு
  15. நல்ல கவிதை...
    பின்னூட்டத்தில் பதியப்பட்டள்ள புதுவைப்பிரபாவின் கருத்துக்கள் மிகச்சரியானதே... படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி..

    பதிலளிநீக்கு
  16. நல்ல கவிதை...
    பின்னூட்டத்தில் பதியப்பட்டள்ள புதுவைப்பிரபாவின் கருத்துக்கள் மிகச்சரியானதே... படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    நன்றி..

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    குடி கெடுககும் குடியினால்
    துடிதுடிக்கும் மனைவி மக்களின்
    துயரினைக் கவிதையாய் யாத்திட்ட
    தூயவருக்கு வாழ்த்துப் பாவிசைக்கின்றோம்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி!)

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்