புதன், 8 அக்டோபர், 2014

உன் மரணத்தின் வலிகள்....



என்னவளே என்னவளே.
எனக்காக பிறந்தவளே.
உன் ஞாபகங்கள் தீயாக எரிகிறது.
உன்னுடன் பழகிய காலங்கள்
என் வாழ்வில் வசந்த காலங்கள்.
 
தனியாக வாழும் நாட்கள் எல்லாம்
ஏதோ ஒன்றை இழந்தது போல 
ஞாபக கீற்றுக்கள்
மனவானில் மையலிடுகிறது.
 
இதயத்தின் துடிப்புக் கூட
உன் ஞாபகங்கள் அலையடிக்கிறது.
அன்பே அன்பே ஒரு கணம். திரும்பிப்பார்
இரவுப் பொழுதில் நிலா வெளிச்சத்தில்
 
முற்றத்தில் கைபிடித்து நடந்த காலங்கள்.
திருவிழாக் காலங்களில்
கோயில் வீதியெங்கும்
நடை பயின்ற காலங்கள்.
 
வீதியில் நான் நடந்து செல்லும் போது
வான் மேகம் கண்ணீர் வடித்த போது
ஓடோடி வந்து குடை பிடித்த ஞாபங்கள்
என்னை தனியாக தவிக்க விட்டு
 
விண்ணுலகம் அடைந்து விட்டாய்
எப் போதும் உன் கல்லறையில்.
என் கண்ணீர்த் துளிகள்
மழைத்துளிகளாக பிரவேசம்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவுகள் மிக விரைவில்..........

16 கருத்துகள்:

  1. விண்ணுலகை அடைந்தாலும்- உன்
    மனவானில் வாழ்கின்றாள்
    எண்ணங்கள் இனிதாக
    வாழ்த்திடுவாள் என்றும் !

    பொருத்தமான படம். மனதை. கனக்க வைத்த பதிவு.
    தங்கள் சோகத்தை பகிர்ந்த மையால் மனம் இலேசாகி இருக்கும் என்று நினைக்கிறன். நன்றி ரூபன் !

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அம்மா.
    முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா. யாவும் கற்பனைதான்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  3. கற்பனையானாலும் மிகவும் உயிரோட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள் சார், அது தான் இந்தக் கவிதையின் சிறப்பே... வெரி நைஸ்..

    பதிலளிநீக்கு
  4. மரணத்தின் வலிகள் மனதை வலிக்கச் செய்தது சகோதரரே!

    கவிவரிகளில் கரைந்தது உணர்வோடு உயிரும்!
    அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  5. கவியில் பிரிவின் பின்னும் தொடரும் நேசிப்பை சொல்லிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. விண்னுலகம் அடைந்து விட்டாய்
    எப் போதும் உன் கல்லறையில்.
    என் கண்ணீர்த் துளிகள்
    மழைத்துளிகளாக பிரவேசம்.//

    அருமையான வரிகள் தம்பி!

    அது சரி என்னாயிற்று தம்பி! பொதுவாகத் தங்கள் கவிதையில் சில சமயம் சோகம் இழைந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் ஒலிக்கின்றதே என்று நினைத்த போது அது கற்பனைதான் என்றதும்தான் மனதுக்கு நிம்மதி தம்பி!

    பதிலளிநீக்கு
  7. வார்த்தைகள் மனத்தினை வலித்திடச் செய்கிறது..

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை....
    வாழ்த்துக்கள் ரூபன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே.!

    \\ தனியாக வாழும் நாட்கள் எல்லாம்
    ஏதோ ஒன்றை இழந்தது போல
    ஞாபக கீற்றுக்கள்
    மனவானில் மையல்லிடுகிறது.//
    அற்புதமான வரிகளுடன் ௬டியக்கவிதை.!

    பகிர்ந்தமைக்கு நன்றி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை. பாராட்டுக்கள். சில printing mistakes குறிப்பிடலாமா?-மையலிடுகிறது, ஒரு கணம், வீதியில், ஞாபகங்கள், விண்ணுலகம்...

    பதிலளிநீக்கு
  11. நினைவுகள் சுமந்து வந்த கவிதை. ஆயினும் ஒரு சோகம் இழையோடுகின்றதே. எது எப்படியாயினும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. தனியாக வாழும் நாட்கள் எல்லாம்
    ஏதோ ஒன்றை இழந்தது போல
    ஞாபக கீற்றுக்கள்
    மனவானில் மையலிடுகிறது.

    அருமை

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்